2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆகக்குறைந்த வேதனத்தை நிர்ணயிப்பது என்பது சிக்கலானது

A.P.Mathan   / 2014 மார்ச் 31 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மட்டத்தில் சில துறைகளுக்கு ஆகக்குறைந்த வேதனத்தை நிர்ணயிப்பது என்பது சிக்கலான விடயமாக அமைந்துள்ளது. இவை வேறான முறையில் கையாளப்பட வேண்டும் என இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த வேதன கட்டமைப்பு முறை என்பது மிகவும் உணர்வு பூர்வமானது, முறையாக கையாளப்படாவிடின், தொழில், வளர்ச்சி மற்றும் தொழில் மீதான மதிப்பு ஆகியவற்றை இழக்கச் செய்துவிடும். அத்துடன், ஆளுமை குறைந்த ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு காணப்படும் வாய்ப்புகளையும் பாதிப்பதாக அமைந்துவிடும்.

எனவே அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஆகக்குறைந்த வேதன முறை என்பது சில துறைகளில் பின்பற்ற முடியாத நிலை காணப்படுகிறது. இந்த வேதன முறைகளில் அரசாங்க தலையீடு என்பது குறைந்த மட்டத்தில் இருப்பது சிறந்தது என இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .