2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக மஞ்சி தெரிவு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் வணிக தினத்தையொட்டி வணிக சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாணவர் வர்த்தகநாம விருதுகள் வழங்கும் நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று ஆண்டின் சிறந்த வர்த்தகநாமமாக மஞ்சி தெரிவாகியுள்ளது.

இதன் போது பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இலங்கையின் புகழ்பெற்ற 24 வர்த்தகநாமங்கள் மாணவர்களினால் தெரிவு செய்யப்பட்டன. மாணவர்கள் மத்தியில் உயர் அங்கீகாரத்தை பெற்று ஆண்டின் சிறந்த வர்த்தக நாமத்திற்கான விருதினை மஞ்சி வென்றெடுத்தது. இதற்கு மேலதிகமாக, மஞ்சி ஆண்டின்; சிறந்த உணவு வர்த்தகநாமம் எனும் விருதையும் வென்றெடுத்தது.

அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற மாணவர் வர்த்தகநாம விருதுகள் 2013 நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கலந்து கொண்டிருந்தார். அனைத்து மாணவர்களது பங்குபற்றலுடனும் வணிக விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதுவே முதல் முறையாகும்.

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் வணிக சங்கத்துடன் இணைந்து மேல் மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் கற்கும் மாணவர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 24 வர்த்தகநாமங்கள் அங்கீகரிக்கப்பட்டதுடன், மேல் மாகாணத்தைச் சேர்ந்த 10,000 மாணவர்கள் இதில் பங்கேற்றதாக வணிக சங்கம் அறிவித்துள்ளது.

இந் நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் பிரபலமான வங்கி, பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பிரபலமான காப்புறுதி நிறுவனம், பிரபலமான நிதி நிறுவனம், பிரபலமான தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பிரபல கல்வியகம் ஆகியன தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மஞ்சியின் வெற்றி குறித்து சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் தேஜா பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'மஞ்சி தயாரிப்புகள், மாணவர்களுக்கு ஊட்டமளிக்கும் ஓர் பிஸ்கட் வர்த்தக குறியீடாக உருவாக்குவதே எமது குறிக்கோளாகும். கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பல்வேறு காரணங்களினால் மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்ற பிஸ்கட் வர்த்தகநாமமாக மஞ்சி திகழ்கிறது. மேலும் மஞ்சி டிக்கிரி சிஷ்யாதார மாணவர் வழிகாட்டல் திட்டமானது மாணவர்களிடையே மஞ்சி வர்த்தகநாமத்தை பிரபல்யம் அடையச் செய்வதில் முக்கிய பங்கை வகித்துள்ளது'(இவ் வர்த்தகநாமத்தின் மாணவர் வழிகாட்டல் திட்டமானது தனியார் துறை நிறுவனத்தின் மூலம் ஒழுங்கு செய்யப்படும் மிகப்பெரிய மாணவர் கல்வி வழிகாட்டி திட்டமாகும்) என தெரிவித்தார்.

'பல்வேறு நிகழ்ச்சிகளின் ஊடாக வணிக ரீதியான இலாபங்களை தவிர்த்து, சமூக தேவைகளை நிறைவேற்றியதன் காரணமாக சந்தேகத்துக்கிடமின்றி மாணவர்களின் மனதில் இடம் பிடித்துள்ளோம். இதன் காரணமாகவே, ஏனைய 23 பாரிய வீட்டு வர்த்தகநாமங்கள் மத்தியில் மஞ்சியை தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக அமைந்தது என நான் கருதுகிறேன். எனவே, இதற்கு முன்னர் நாம் பெற்ற விருதுகளை விட இது மிகவும் விசேடமானது என கருதுகின்றேன்' என மேலும் அவர் தெரிவித்தார்.

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்(சிபிஎல்) நிறுவனமானது உள்நாட்டு விவசாயிகளின் வாழ்க்கைமுறைக்கு வலுவூட்டும் வகையில், அவர்களிடமிருந்து மூலப்பொருட்களை கொள்வனவு செய்து புதிய கண்டுபிடிப்புகளினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கி வருகிறது.

சிபிஎல் ஆனது, பழைய பிஸ்கட் பாரம்பரியங்களை விஞ்சிடும் வகையில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில் முன்னோடியாக விளங்குகிறது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம், தேசிய தர விருதுகள், தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் மற்றும் சர்வதேச விருதுகள், உலகளலாவிய செயற்பாடு மற்றும் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி போன்ற விருதுகளை மஞ்சி தொடர்ச்சியாக வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிபிஎல் நிறுவனத்தின் முன்னணி வர்த்தகநாமமாக விளங்கும் மஞ்சி, இலங்கையில் 50மூ ஆன சந்தைப் பங்கினை தன்னகத்தே கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .