2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அகர்வுட் செய்கையை மேற்கொண்டு வரும் சாரபூமி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக சூழலை பாதுகாப்பதுடன், மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட் ஈடுபட்டு வருகிறது. காடுகளை அழிக்கும் செயற்பாடுகளிலிருந்து சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், மக்களுக்கு வருவாயை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவ நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் 11 வருடங்களுக்கு முன்னர் இந் நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது.

சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட்டின் சமீபத்திய புதிய கண்டுபிடிப்பான அகர்வுட் செய்கையானது மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்துள்ளது. இப் பெறுமதி வாய்ந்த செய்கையின் மூலம் கம்பளை வெலிவேரியவை வசிப்பிடமாகக் கொண்ட விமல் விக்ரமஆரச்சி தனது வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார். அகர்வுட் செய்கையை மேற்கொண்ட முதல் வாடிக்கையாளராக அவர் உள்ளதுடன், சதாஹரித நிறுவனத்துடன் 5 வருடங்களுக்கும் மேல் தொடர்பினை கொண்டுள்ளார். அவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் இணைந்து 'சார பூமி' எனும் பெயரில் சொந்த கன்றுகள் வளர்ப்பு பண்ணையை நடத்தி வருகின்றார். சார பூமி கன்றுகள் வளர்ப்பு பண்ணையில் உரங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அலங்காரச் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, அவர் பெரிய அளவிலான அன்னாசி தோட்டத்தையும் மற்றும் சதாஹரித லிமிடெட் மூலம் சந்தன தோட்டமொன்றையும் நடத்தி வருகின்றார்.

அவரது வியாபாரத்தின் விசேடத்துவம் எதுவெனில், முறையாக வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு கன்றுகள் எனும் நிலையை எய்திய பின்னரே வாடிக்கையாளர்களுக்கு கையளிக்கப்படுகின்றமையை குறிப்பிட முடியும். வணிக ரீதியான வனவியல் பிளான்டேஷன் முகாமைத்துவம் குறித்த அறிவினையும், நிபுணத்துவத்தையும் கொண்டுள்ள அவர் கடந்த டிசம்பர் முதல் சதாஹரிதவுடன் இணைந்து அகர்வுட் செய்கையை மேற்கொண்டு வருகிறார்.

சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட்டினால் மேற்கொள்ளப்பட்ட அகர்வுட் செய்கை பற்றிய விளம்பரங்களை பார்த்த அவர், இச் செய்கை தொடர்பில் இணையம் ஊடாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தூண்டியது. தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் கேள்வியுற்ற வெற்றிக் கதைகளால் கவரப்பட்ட அவர் தனது 4 ஏக்கர் தேங்காய் தோட்டத்தில் அகர்வுட் செய்கையை மேற்கொள்ள திட்டமிட்டார்.

இக் காணியிலிருந்து சுமார் 440 கன்றுகளை அறுவடை செய்ய அவர் எதிர்பார்த்துள்ளதுடன், இத்துறை தொடர்பில் அவருக்குள்ள நிபுணத்துவத்தை பயன்படுத்தி கன்றுகள் குறித்து சோதனையையும் மேற்கொண்டுள்ளார். சதாஹரிதவினால் வழங்கப்படும் இளம் கன்றுகளை தனது நிலத்தில் பயிரிடுவதை காட்டிலும், அவற்றை தனது கன்றுகள் வளர்ப்பு பண்ணையில் பெரிதாகும் வரை பராமரித்து அதன் பின் அவற்றை பயிரிடுவதனூடாக பல நன்மைகளை பெற முடியும் என கருதுகிறார்.

இச் செய்கை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 'எந்த பெறுமதியும் அற்ற அலங்கார செடிகளை வளர்ப்பதை காட்டிலும், இத்தகைய பெறுமதி மிக்க மரங்களை தோட்டத்தில் வளர்க்க ஊக்குவிக்கின்றார். வாடிக்கையாளர் ஒருவர் 1400 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் கன்றானது 8 வருடங்களின் பின்னர் 50,000 ரூபா பெறுமதியை அடைகிறது. மரக் கன்றுகள் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான உடன்படிக்கையின் கீழ் கையளிக்கப்படுவதன் காரணமாக விக்ரமஆரச்சி இச் செய்கையில் கணிசமான அளவு முலீட்டினை மேற்கொள்ள தயங்கவில்லை' என்றார்.

மேலும் சிறந்த பயிர்செய்கையை பெறமுடியாத சந்தர்ப்பத்தில், சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட்டானது மரங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதால் கொள்வனவாளர் ஒருவரை தேடுவதற்கான அபாயம் வாடிக்கையாளருக்கு ஏற்படாது. இந் நிறுவனத்தின் மூலம் ஒரு கன்று அல்லது வணிக ரீதியான செய்கையில் ஈடுபடும் வாடிக்கையாளர்களுக்கு சமனான ஆதரவு வழங்கப்படுகிறது. அறுவடையை அதிகரிப்பதற்கு தேவையான குறிப்புகள், தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் தேவையான அனைத்து ஆதரவும் சதாஹரித லிமிடெட்டின் முகவர்களினால் வழங்கப்படுகிறது. எனவே வனவியல் பெருந்தோட்டம் குறித்து எவ்வித அறிவையும் கொண்டிருக்காதவர் இந்த அகர்வுட் செய்கையை மேற்கொள்வதனூடாக வெற்றிகரமான வியாபாரியாக உருவாக முடியும்' என விக்ரமஆரச்சி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .