2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'முதுபலச' அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமது வியாபார பங்காளர்களை கௌரவிக்கும் நோக்கில்;, யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் முதுபலச திட்டத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் செயற்திட்டமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முன்னெடுக்கப்பட்டது.

யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனம், தமது சில்லறை மற்றும் மொத்த வியாபார பங்காளர்களுக்காக முதுபலச திட்டத்தினை கடந்த 2003ஆம் ஆண்டு ஆரம்பித்ததுடன், இருபாலருக்குமிடையேயான உறவினை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக, முதுபலச அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6 மாணவ, மாணவியருக்கு தலா 1 இலட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்த புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டம் குறித்து யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வாடிக்கையாளர் அபிவிருத்தி வியாபார பிரிவின் தலைவர் நிரோஷன் ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், 'சமுதாயத்திற்கு சிறந்தவற்றை வழங்குவதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். எதிர்கால தலைவர்களான பிள்ளைகளுக்கு சிறந்த சூழலை அமைத்துக் கொடுப்பது எமது கடமையாகும். அக் கடமையை பூர்த்தி செய்து அவர்களின் வெற்றிக்கு இடையூறாக விளங்கும் தடைக்கற்களை குறைக்கும் செயற்பாடே இந்த புலமைப்பரிசில் வழங்குவதன் குறிக்கோளாகும்' என தெரிவித்தார்.

இதற்கிடையே முதுபலச திட்டம் குறித்து கருத்து தெரிவித்த 'முது பலச' திட்டத்தின் திட்ட முகாமையாளர் ஷாலிக அலஹகோன், 'எம்மோடு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வியாபாரிகளுடனான தொடர்பினை மேலும் வலுப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். இதனூடாக அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள எம்மால் முடியும். 2011 ஆம் ஆண்டு எமது பங்காளர்களுக்கு அளிக்கப்படும் அனுகூலங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் அவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும் செயற்றிட்டத்தை ஆரம்பித்தோம். இதன் மூலம் முதுபலச அங்கத்தவர்களுக்கு சக்தியாக விளங்குவதே எமது எதிர்பார்ப்பாகும்' என தெரிவித்தார். 

இத் திட்டத்தின் கீழ் இம்முறை காலி எல்பிட்டிய, எம்பிலிபிட்டிய, வெஹேரகம்பிட்டிய, அக்குறண மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

புலமைப்பரிசில்களை பெற்றுக் கொண்டவர்களுள் அதிகூடிய திறனை வெளிப்படுத்திய காலி எல்பிட்டியவைச் சேர்ந்த திவ்யாஞ்சலி சிதாரா மாணவியின் தாயார் பி.ஏ.ஜி.எம்.லக்ஷானி தனது மகளுக்கு கிடைத்த புலமைப்பரிசில் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'இத்தகைய புலமைப்பரிசில்கள் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்துகிறது. பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு இத்தொகை மாபெரும் சக்தியாக விளங்கும். முதுபலச திட்டமானது எமது வியாபாரத்திற்கு மாத்திரமன்றி, எமது குடும்ப அங்கத்தவர்களின் நலனிலும் பங்களிப்பை செலுத்தி மிகப்பெரிய சக்தியை எமக்களிக்கிறது' என்றார்.

யுனிலீவர் நிறுவனம், முதுபலச அங்கத்தவர்களின் வியாபார நடவடிக்கைகளிலும், குடும்ப அங்கத்தவர்களின் நலன் குறித்தும் மிகுந்த அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X