2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களை வலுவூட்டும் ஜனசக்தி நிறுவனம்

A.P.Mathan   / 2014 மே 01 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி நிறுவனத்தின் மூலம் நாடுபூராகவும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட ஸ்டிக்கர் விளம்பர ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் இரண்டு முச்சக்கர வண்டிகளை பெறும் அதிஷ்டசாலிகள் அண்மையில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டனர். இக் குலுக்கல் தெரிவில் பெலியத்த பகுதியைச் சேர்ந்த அஜித் குமார வந்தபோனா மற்றும் மகியங்கனையைச் சேர்ந்த ஏ.ஜி.நதீகா செனவிரத்ன ஆகியோரே வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த குலுக்கல் தெரிவில் பங்கேற்கும் முகமாக கூப்பன்களை அனுப்பி வைத்திருந்த சுமார் 11000 இற்கும் அதிகமானோரிடையே இவ்விரு அதிஷ்டசாலிகள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜுட் பெர்னாண்டோ மூலம் முதல் வெற்றியாளர் தனிப்பட்ட ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், வருவாய் திணைக்களத்தின் சிரேஷ்ட வரி அதிகாரியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற நிகழ்வில் பொது விற்பனை பிரிவின் தேசிய விற்பனை முகாமையாளர் சுரேஷ் பஸ்நாயக்க அவர்களினால் இரண்டாவது வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஊக்குவிப்பு திட்டமானது முச்சக்கர வண்டி ஓட்டுனர்களை வலுப்படுத்தும் நோக்கிலும், தற்போதைய தனிநபர் விபத்து காப்பீட்டிற்கு மதிப்பு சேர்க்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டது. ஜனசக்தி நிறுவனத்தின் தனிநபர் விபத்து காப்புறுதி திட்டத்தின் அனுகூலங்களை பெறுவதற்கு முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தமது முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் ஜனசக்தி ஸ்டிக்கர்களை ஒட்டியிருத்தல் வேண்டும்.

மேலும் விரிவான ஃபுல் ஒப்ஷன் திட்டத்தை கொண்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுனர் விபத்தின் போது மரணிக்கும் பட்சத்தில் அவரை சார்ந்தோருக்கு ரூ.100,000 நஷ்டஈடாக வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக, ஃபுல் ஒப்ஷன் திட்டத்தை கொண்டிராத முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் விபத்தின் போது மரணித்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.

'இலங்கையில் 500,000 இற்கும் அதிகமானோர் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களாக உள்ளனர். இருப்பினும் துரதிஷ்டவசமாக முச்சக்கர வண்டி விபத்துக்களே அதிகம் நிகழ்கின்றன. எனவே முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் இக்கட்டான தருணங்களில் மன நிம்மதியை அளிக்கவல்ல பாதுகாப்பு மற்றும் மன அமைதியின் குறியீடாக ஜனசக்தி ஸ்டிக்கர்கள் அமைந்துள்ளது' என ஜனசக்தி காப்புறுதியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .