2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வரட்சி காரணமாக மார்ச் மாத தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

A.P.Mathan   / 2014 மே 07 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேயிலை பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் பகுதிகளில் நிலவி வந்த கடும் வரட்சியான காலநிலை காரணமாக, மார்ச் மாத தேயிலை உற்பத்தி 21.9 வீத சரிவை பதிவு செய்திருந்ததாக இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் நாட்டின் பிரதான விவசாய ஏற்றுமதியான தேயிலை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 9.9 வீத சரிவை பதிவு செய்திருந்தது என தேயிலை சபை மேலும் குறிப்பிட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .