2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் தேஸோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் திறப்பு

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்
,ரி.எல்.ஜவ்பர்கான்

சர்வோதய அமைப்பின் கீழ் செயற்பட்டு வரும் தேஸோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் இன்று(9) காலை மட்டக்களப்பில் முதல் தடவையாக திறந்து வைக்கப்பட்டது.

தேஸோதய டெவலப்மன்ட் பினான்ஸ் கம்பனி லிமிடட் எனப்படும் இந்நிறுவனத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்து வைத்தார்.

சர்வோதய அமைப்பின் தலைவர் கலாநதி ஏ.ரி.ஆரியரட்னவின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டு வரும் தேஸோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி வின்னை ஆரியரட்ன  தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி சம்பத் டி சில்வா, சர்வோதய அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம் உட்பட சர்வோதய அமைப்பின் திருமலை மற்றும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்கள் அதன் உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர்.

இதன்போது இந் நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தலா ஒருவருக்கு வாழ்வதாரக்கடன் மற்றும் வீட்டுக்கடன், வாகனக் கொள்வனவிற்கான கடன் என்பனவும் வழங்கப்பட்டன.

சிறுதொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .