2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

லைஃவ்சேவர் மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஜனசக்தி

A.P.Mathan   / 2014 மே 13 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு மன நிம்மதியை அளிக்கும் வகையில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம், காப்புறுதிதாரரும் அவரின் வாழ்க்கைத்துணையும் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான ஓய்வூதிய அனுகூலங்களை அனுபவிக்கக்கூடிய வகையில் லைஃவ்சேவர் காப்புறுதி திட்டத்தை வழங்கி வருகின்றது.

ஜனசக்தி லைஃவ்சேவர் என்பது, பிரத்தியேக ஓய்வூதிய திட்டமாகும். இந்த திட்டமானது ஓய்வூதியம் பெறும் காலப்பகுதியில் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள், தற்சமயம் எந்த நிறுவனத்தில், எந்த தொழில்நிலையில் காப்புறுதிதாரர் உள்ளார் போன்ற விடயங்களில் தங்கியிருப்பதில்லை. காப்புறுதிதாரரின் முன்னுரிமைக்கு அமைய பல்வேறு தெரிவுகளில் அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன. காப்புறுதிதாரர் முதலீடு செய்யும் தொகை, வருடாந்தம் வளர்ச்சியடையும் வகையில் அமைந்துள்ளது.

காப்புறுதிதாரர் தமது தொழில் வாழ்விலிருந்து ஓய்வுபெறும் போது, தமது ஓய்வூதிய திட்டத்திலிருந்து வரிவிலக்கழிக்கப்பட்ட தொகை பணத்தை அல்லது தவணை முறையில் பெறும் வகையிலான வரி விலக்கழிக்கப்பட்ட வருமானத்தை தமது தெரிவுக்கமைய வாழ்நாள் முழுவதும் பெறுவார். காப்புறுதிதாரர் தமது ஓய்வூதியம் பெறும் காலத்தை 10, 15 அல்லது 20 வருடங்கள் அல்லது வாழ்நாள் முழுவதுக்கும் என நிர்ணயித்துக் கொள்ள முடியும். பணவீக்கம் மற்றும் வருமானத் தேவை போன்றவற்றுக்கு அமைய மாதாந்தம் வழங்கப்படும் தொகை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கிறது.

இந்த லைஃவ்சேவர் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு வயது வரையறைகள் எதுவுமில்லை. ஒவ்வொரு நபரின் தேவைகளுக்கு அமைய, எவ்வேளையிலும் இந்த திட்டத்தை ஆரம்பிக்கக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. காப்புறுதிதாரருக்கு மேலதிகமாக வருமானம் கிடைக்கும் தருணங்களில் அந்த தொகையையும் இந்த காப்புறுதி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதுமைக்காலத்தில் பெற்றுக் கொள்ளும் முதிர்வுத்தொகையும் அதிகரிக்கும்.

'ஒவ்வொரு பெண்ணும் தன் ஓய்வு பெறும் காலத்தில் எதிர்பாராத பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜனசக்தி நிறுவனமாகிய நாம் அவர்களது தேவையை பூர்த்தி செய்தல் வேண்டும். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கமைய தமது ஓய்வூதிய திட்டத்தை அமைத்துக் கொள்வதற்குரிய நெகிழ்ச்சித்தன்மை இந்த ஓய்வூதிய திட்டத்தில் காணப்படுகிறது. ஆகவே லைஃவ்சேவர் திட்டத்துடன் இணைந்து ஆயுள் காப்பீட்டொன்றை பெற்றுக்கொள்வதற்கான சரியான தருணம் இதுவாகும். ஆகக்குறைந்தது ரூ.1000 தொகையை செலுத்தி இந்த ஓய்வூதிய திட்டத்தை ஆரம்பிக்க முடியும்' என ஜனசக்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதி தலைவருமான சந்திரா ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.

இலங்கை காப்புறுதி துறையின் தந்தையும், ஆசிய காப்புறுதி வாழ்நாள் சாதனையாளருமான அவர், குடும்பங்களின் பாதுகாப்பை வழங்கும் வகையிலான காப்புறுதி திட்டத்தை அறிமுகம் செய்வதில் தாம் முழுமூச்சுடன் செயற்படுவதாக தெரிவித்தார்.

தமது வருவாயின் ஒரு பகுதியை காப்புறுதி தொகைக்காக ஒதுக்கிக் கொள்வதன் ஊடாக ஜனசக்தி லைஃவ்சேவர் காப்புறுதிதாரரை பாதுகாக்கும் உண்மையான பாதுகாப்பு வலை (safety net) இனை உருவாக்க முடியும். இந்த லைஃவ்சேவர் காப்புறுதி திட்டத்தின் மூலம் காப்புறுதிதாரர் விபத்து மற்றும் நோய் காரணமாக முழுமையாக அங்கவீனமடையும் நிலையிலும் கூட வாழ்நாள் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

மேலும் இந்த காப்புறுதி ஆரம்பிக்கப்பட்டு 12 மாதங்கள் கழிந்த பின்னர், திட்டத்துக்கு தொடர்ந்தும் பணத்தை வைப்பிலிட முடியாமல் போகும் சந்தர்ப்பம் ஏற்படின், காப்புறுதி செயலிழக்காது. இதன் மூலம் காப்புறுதிதாரரின் முதலீடு பாதுகாக்கப்படுகிறது. காப்புறுதிதாரரின் மனைவியின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படுவதுடன், முதிர்வின் போது, வரி விலக்கழிக்கப்பட்ட அனுகூலங்கள் வழங்கப்படுவதால் காப்புறுதிதாரர்கள் இந்த ஓய்வூதிய காப்புறுதி திட்டத்தின் முழுமையான அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பொறுப்பு வாய்ந்த காப்புறுதி வழங்குனர் எனும் ரீதியில், காப்புறுதிதாரருக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், அவருக்கு பின்னரும் அவரது வாழ்க்கைத்துணைவிக்கு மன நிம்மதி அளிக்கும் நோக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது குறிக்கோளாகும். இது எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஓர் முயற்சியாகும்' என முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.

'லைஃவ்சேவர் காப்புறுதி திட்டமானது தீவிர சந்தை ஆராய்ச்சியை தொடர்ந்து வடிவமைத்துள்ளதுடன், ஒவ்வொரு காப்புறுதிதாரருக்கும் அவர்களின் தேவைக்கேற்றவாறு காப்புறுதி திட்டம் உருவாக்கப்படுவதை எமது காப்புறுதி ஆலோசகர்கள் உறுதி செய்கின்றனர்' என மேலும் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக வாடிக்கையாளர், எமது காப்புறுதி ஆலோசகர் ஒருவருடன் கலந்தாலோசிப்பதன் மூலம், ஓய்வூதிய காலப்பகுதியில் எந்தளவு தொகையை பெற்றுக் கொள்வது என்பது குறித்தும், ஓய்வூதிய வயதில் பெற விரும்பும் தொகைக்கு, எவ்வளவு தொகையை வைப்பிலிட வேண்டும் போன்ற விடயங்கள் குறித்தும் கணித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் விரும்பும் மூலங்களில் அதிகளவு தொகையை செலவு செய்து கொள்ள முடியும்.

'இது திரவத்தன்மை மிக்கது. பாதுகாப்பானதுடன், முதிர்ச்சி அடையாது. இலங்கையின் காப்புறுதி சந்தைப்படுத்தலின் சந்தை இயக்கவியலுக்கு நீடித்த பங்களிப்பு வழங்கியதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகின்றோம்' என ஜனசக்தி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .