2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஜனசக்தி விற்பனை குழுவினர் பிரகாசிப்பு

A.P.Mathan   / 2014 மே 25 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


சந்தை தலைமைத்துவத்தில் தமது 20 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும்; ஜனசக்தி நிறுவனம்;, கடந்த மார்ச் 17 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் கண்கவர் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

'நட்சத்திரத்தை போல் மிளிருங்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கு வெகுமதியாக டுபாய், சீனா, ஹொங்கொங் மற்றும் பாங்கொக் வெளிநாட்டு சுற்றுலாக்கள், பணப்பரிசுகள் மற்றும் கேடயங்கள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் கருத்து தெரிவிக்கையில், 'எமது நிறுவனத்தின் நிகழ்வு நாட்காட்டியில் விசேட நிகழ்வாக அமைந்துள்ள இந்த நிகழ்வு, இம்முறை 20 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடுவதன் காரணமாக, மிகவும் விசேட நாளாக அமைந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் எமது விற்பனை குழுவினரின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாகவே நாம் இன்று இந் நிலையில் உள்ளோம்' என்றார். 'சுமார் 2,750 குடும்பங்கள் மற்றும் 1250 க்கும் மேற்பட்ட முகவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு ஜனசக்தியை நம்பியுள்ளனர். ஜனசக்தி என்பது தேசிய நிறுவனமாகும். இந் நிறுவனம் அங்கீகாரத்தை மட்டுமன்றி, நன்மதிப்பையும் பெற்றுள்ளது. தொடர்ந்து கடுமையாக உழைத்து எம்மை முன்னோக்கி கொண்டு செல்லவும்' என மேலும் அவர் தெரிவித்தார்.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனசக்தி நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.டி.எல்லாவல மற்றும் கௌரவ விருந்தினராக உப தலைவர் சி.டி.ஏ.ஷாஃப்ட்டர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு வருடமும் இந் நிகழ்வு கண்கவரும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம். நாம் முடிந்தவரை எமது நிறுவன ஸ்தாபகர் சி.டி.ஏ.ஷாஃப்ட்டர் அவர்களின் நோக்கம் மற்றும் அர்ப்பணிப்புகளுக்கு கடமைப்பட்டிருக்கின்றோம். அவர் அருகில் உள்ளமையானது ஆறுதலை அளிக்கிறது. நீங்கள் அனைவரும் உங்கள் சாதனைக்கான முழுத் தகுதியையும் கொண்டுள்ளீர்கள்' என திரு.எல்லாவல தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இடம்பெற்ற ஏராளமான பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் பங்குபற்றுனர்களின் மனதை பெரிதும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

இந் நிகழ்வில் சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்திய மியுரு ராஜபக்ஷவுக்கு தலைவர் விருது வழங்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விருதை, அதிசயிக்கத்தக்க வகையில் தொலைக்கட்டுப்பாட்டு சிறிய ஹெலிகொப்டர் மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் பொது பிரிவின் கீழ் Hall of Fame (வெள்ளி) 'நட்சத்திர செயற்திறன்' விருதும் மியுருக்கு வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளர் விருது தலைமை அலுவலகத்தைச்(ஆயுள்) சேர்ந்த டி.ஐ.ஜமால்டீன் இற்கும், சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளர் - பொது விருது மத்திய கொழும்பைச் சேர்ந்த பி.சி.விஷ்வக விற்கும் வழங்கப்பட்டது. ஆயுள் பிரிவின் பதுளையைச் சேர்ந்த காமினி குமாரசிங்கவிற்கு ஆயுள் மனிதவலு சம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டது.

பொது காப்புறுதி பிரிவின் கீழ், சிறந்த பிரிவு முகாமையாளர் விருது கொழும்பு வடக்கைச் சேர்ந்த டபிள்யு.ஏ.டி.குமாரவுக்கு வழங்கப்பட்டது. ஆயுள் பிரிவில் சிறந்த முகாமையாளர் விருதை களுத்துறை என்.சி.எஸ்.டி.சில்வா பெற்றுக்கொண்டார்.

மேலும் லைஃவ் சேவர் ஊடாக அதியுயர் புதிய வர்த்தக ப்ரீமியத்தை பெற்றுக்கொடுத்த களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.சி.டபிள்யு.ஹேரத் அவர்களிற்கு லைஃவ் சேவருக்கான CTA ஷாஃப்ட்டர் சவால் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிறுவனத்தில் முதற்தடவையாக, ஹட்டனைச் சேர்ந்த ஜி.எஸ்.ருவன் குமார தொடர்ச்சியாக 10 ஆவது தடவையாக மில்லியன் டொலர் Round Table இல் கலந்து கொள்வதற்கான தகுதியுடையவராக அறிவிக்கப்பட்டதுடன், வாழ்நாள் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டார். சக பணியாளர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அவர் world Hong Kong qualifier இற்கு தகுதியுடையவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மத்திய கொழும்பைச் சேர்ந்த டி.ஜே.பியதாஸவிற்கு சிறந்த உதவி வர்த்தக ஊக்குவிப்பு முகாமையாளர் விருதும், கொழும்பு மெட்ரோவைச் சேர்ந்த கே.எச்.டி.ஆரியவங்சவிற்கு சிறந்த சிரேஷ்ட/வணிக ஊக்குவிப்பு அதிகாரி விருதும் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரிக்கான விருதினை டபிள்யு.ஆர்.சி.பி.கே.ரணவக வென்றெடுத்தார்.

சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு விற்பனை மேற்பார்வையாளருக்கான விருதினை கண்டியைச் சேர்ந்த கே.ஜி.ஆர்.பி.இலங்கரத்ன விற்கு வழங்கப்பட்டது. மேலும் கடவத்த ஜே.எஸ்.அதிஹெட்டி இற்கு சிறந்த வாழ்நாள் குழு விருது வழங்கப்பட்டதுடன், சிறந்த வணிக ஊக்குவிப்பு முகாமையாளர் விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு உதவியாளர் விருதினை தம்புள்ளயைச் சேர்ந்த பி.எம்.எஸ்.குமாரவிற்கும், களுத்துறையைச் சேர்ந்த டி.கே.பி.பாலசூரியவிற்கு சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரி விருதும் வழங்கப்பட்டன. களுபோவிள ஏ.எச்.எஸ்.ஜயலாலிற்கு சிறந்த சிரேஷ்ட வணிக ஊக்குவிப்பு அதிகாரிக்கான விருதும், கொழும்பைச் சேர்ந்த ஈ.டபிள்யு.சி.தனஞ்செயவிற்கு சிறந்த வணிக ஊக்குவிப்பு உதவியாளருக்கான விருதும் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் சிறந்த ஆயுள் விற்பனையாளருக்கான விருதினை வென்ற தம்புத்தேகமயைச் சேர்ந்த பி.டபிள்யு.ஏ.ஹலன்கொடவிற்கு சீனாவுக்கான சுற்றுப்பயணத்தையும், எம்.ஏ.எஸ்.டி.பிரசன்ன சிறந்த தனிப்பிரிவு தலைவர்-தனிநபர் விற்பனை விருதை வென்று டுபாய் சுற்றுப்பயணத்தை வென்றதுடன், உலக ஹொங்கொங் qualifier க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் இறுதியாக உரையாற்றிய ஜனசக்தியின் பணிப்பாளர் ரமேஷ் ஷாஃப்ட்டர், 'இன்று நாம் பிரகாசிக்கின்றோம். எமது நட்சத்திரங்களின் கடின பயணத்தை கண்டுள்ளோம். இதுவே ஜனசக்தியின் கதையாகும். 18 வருடங்களுக்கு முன்னர், சிறந்த செயற்திறனுக்கான முதலாவது விருதினை பெற்றுக்கொண்டோம். இன்று நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம்;. கடந்த பல ஆண்டுகளில், ஜனசக்தி நிறுவனத்தினுள் நேரடியாக குழு மட்டத்தில் தொடர்புடைய பணியாளர்களை உருவாக்கும் ஓர் குடும்ப கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளோம். நாம் சாதிக்க விரும்புவதை மிகவும் நேர்த்தியாகவும், செயற்திறனுடனும் முன்னெடுத்து வருகின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .