2026 மே 07, வியாழக்கிழமை

பயணிகள் போக்குவரத்து சாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம்

A.P.Mathan   / 2014 மே 26 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீண்டும் தமது சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டிய வகையில் புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விதிமுறை, தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகள், பாடசாலை வாகன சாரதிகள் ஆகியோருக்கே பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. ஏனைய வாடகைக்கமர்த்தல் சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

இந்த திட்டம் அறிமுகம் செய்வது தொடர்பில் முதன் முதலில் 2012ஆம் ஆண்டில் கலந்துரையாடப்பட்டிருந்த போதிலும், இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .