2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அமானா வங்கி வீசா டெபிட் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.

A.P.Mathan   / 2014 மே 28 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாடிக்கையாளர் சேவைக்கு மேலும் பெறுமதி சேர்க்கும் வகையில், அமானா வங்கி அண்மையில் வீசா டெபிட் (பற்று) அட்டையை அறிமுகம் செய்துள்ளது. அமானா வங்கியின் முகாமைப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி பைசல் சாலியும், பிரதான தொழிற்படுத்தல் அதிகாரி முஹம்மத் அஸ்மீரும் முதற் தொகுதி டெபிட் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு கையளித்தார்கள். கொழும்பு 03 இல் உள்ள அமானா வங்கியின் பிரதான அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

டெபிட் அட்டை அறிமுகம் குறித்து கருத்து வெளியிட்ட பைசல் சாலிஹ் அவர்கள் ' நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளை வைத்திருக்கும் எமது வாடிக்கையாளர்களுக்கு வீசா டெபிட் அட்டைகளை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். உலகம் பூராகவும் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளிலும், பிராந்தியங்களிலும் உள்ள 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ஏ.ரீ.எம் இயந்திரங்களை அணுகும் வசதியை இந்த வீசா டெபிட் அட்டை வழங்கும். அதேநேரம், உலகளாவிய ரீதியில் பல மில்லியன் விற்பனை நிலையங்களிலும் இது ஏற்றுக் கொள்ளப்படும். இந்த டெபிட் அட்டையானது, பணத்தை எடுத்துச் செல்லும் சிரமத்தை தவிர்ப்பதோடு, சிறந்த பாதுகாப்பையும் கொண்டுள்ளது. சிறந்த பண முகாமைத்துவத்திற்கும், சௌகரியத்திற்கும் இது துணைபுரியும்' என்று குறிப்பிட்டார்.

இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்டமை குறித்து பேசிய முஹம்மத் அஸ்மீர் அவர்கள் 'ஒரு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடாக எமது வங்கி ஸ்மார்ட் சிப் தொழில்நுட்பத்துடன் டெபிட் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல்களை கெட்டியாக சேமித்து செயன்முறைப்படுத்தி சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்கு இந்த ஸ்மார்ட் சிப் துணைபுரிகிறது. இதனால், இந்த அட்டையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மன அமைதியுடன் பயன்படுத்தலாம். வீசா டெபிட் அட்டையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாம் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள மேலும் பல புதிய வாடிக்கையாளர் சௌகரியங்களுக்கு துணைபுரியவுள்ளோம்' என்று குறிப்பிட்டார்.

அமானா வங்கியின் வாடிக்கையாளர்கள் நாடுபூராகவும் உள்ள வங்கியின் 24 கிளைகளில் ஏதாவதொன்றில் ஒரு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வழங்குவதன் மூலம் ஒரு டெபிட் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.

வட்டியுடன் சம்பந்தப்படாத இஸ்லாமிய வங்கியியல் முறையுடன் சுமூகமாக தொழிற்படுவதற்கு இலங்கையில் உத்தரவு பெற்றுள்ள முதலாவது வர்த்தக வங்கியாக அமானா வங்கி விளங்குகின்றது. தனது மூலோபாய வர்த்தகப் பங்காளிகளான மலேஷpயாவின் இஸ்லாமிய பேர்ஹட் வங்கி, சவுதி அரேபியாவைச் சேர்ந்த இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேசின் ஏ.பீ வங்கி ஆகியவற்றின் ஆதரவாளும், தனது ஸ்திரத்தன்மையாலும் ஊக்கமடைந்துள்ள அமானா வங்கி இலங்கை வங்கியியல் துறையில் ஒரு புரட்சிகர பயணத்தை மேற்கொண்டு வருவதோடு, நாடு முழுவதும் இந்த தனித்துவமான வங்கியியல் முறைக்கு சாத்தியமாகும் வகையில் சந்தைக்கு நிதியளிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .