2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஜனசக்தியின் பிரயாண காப்புறுதி திட்டம்

A.P.Mathan   / 2014 ஜூன் 08 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் மிக வேகமாக வளர்ந்துவரும் பிரயாண காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி, உலகளாவிய பிரயாண காப்புறுதி திட்டத்தின் மூலம் வெளிநாட்டு பயணிகள் தாம் எந்தவொரு நாட்டிற்கு பயணித்தாலும் அவர்களுக்கு 24 மணிநேர உலகளாவிய மருத்துவ உதவிகள் வழங்க வழிவகுத்துள்ளது.

'ஜனசக்தி உலகளாவிய பிரயாண காப்புறுதி திட்டத்தின் மூலம் தமது வாடிக்கையாளர்கள் எதிர்பாராது முகங்கொடுக்க நேரிடிடும் அபாயங்களான USD 100,000 க்கு மேலான சர்வதேச மருத்துவ செலவுகள் மற்றும் USD 50,000 க்கு மேலான தனிநபர் விபத்து செலவுகளை ஈடு செய்கின்றது. மருத்துவ மற்றும் விபத்து ஈடுகளை தவிர, ஜனசக்தி பிரயாண காப்புறுதி திட்டத்தின் மூலம் பிரயாண பொதியை இழத்தல், தனிநபர் பாதிப்புகள், காசு மற்றும் கடவுச்சீட்டினை இழக்கும் சந்தர்ப்பங்களிலும் எவ்வித சிரமுமின்றி உங்களுக்கான மாற்று பிரயாண ஆவணங்களை தயாரித்து வழங்குகின்றது' என ஜனசக்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் உதவி பொது முகாமையாளர் கார்த்திகன் சிவா தெரிவித்தார்.

மேலும,; 'விமானங்களை இணைத்தல் உள்ளிட்ட விமானத்தை தவறவிடல் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளின் போதும் முழு நிவாரணம் வழங்கப்படுகின்றன' என மேலும் தெரிவித்தார். ஜனசக்தி வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய பிரயாண காப்புறுதி திட்டத்தின் மூலம் 24 மணிநேர சர்வதேச அவசர அழைப்பின் ஊடாக மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றமையினால், அவசர நிலைமைகளின் போது அந்நிய நாட்டில் தனித்துவிடப்பட்ட நிலைமை ஒருபோதும் ஜனசக்தி வாடிக்கையாளருக்கு ஏற்படாது' என கார்த்திகன் தெரிவித்தார்.

'தனது குடும்பத்தினருடனோ அல்லது தனியாகவோ விடுமுறை மற்றும் வணிக நோக்கில்  வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்கள் பல்வேறு அபாயங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். தமது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து வெளிநாட்டு பிரயாணிகள் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். ஆகவே, வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது தமது பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனசக்தி உலகளாவிய பிரயாண காப்புறுதி போன்ற பயண காப்பீடுகளை கொண்டிருத்தல் வேண்டும். நீங்கள் எத்தேசத்திற்கு பயணித்தாலும் அனைத்திற்கும் தயாரான வகையில் செயற்திறன் மிக்க பிரயாண காப்புறுதியை வழங்குவதே எமது குறிக்கோளாகும்' என ஜனசக்தி நிறுவனத்தின் மோட்டார் சாரா பிரிவின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் ரஜித சமரநாயக்க தெரிவித்தார்.

'வெளிநாட்டு பயணங்களின் போது தமது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள முன்னெச்சரிக்கைகளையும் வாடிக்கையாளர்களுக்கு கடுமையான அறிவுரைகளையும் வழங்கி வருகின்றோம். ஜனசக்தி நிறுவனமாகிய நாம், வெறும் காப்புறுதி நிறுவனமாக மாத்திரமல்லாது இக்கட்டான சூழ்நிலைகளில் உதவிக்கரமாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மருத்துவ செலவுகளையோ அல்லது பிரயாண பொதி இழப்பையோ ஈடு செய்வதாக இருப்பினும், எமது வாடிக்கையாளர்கள் தங்களது விடுமுறையை அல்லது வணிக பயணத்தை எவ்வித இடையூறுமின்றி நிம்மதியாக செலவிடுவதற்கான உதவிகளை செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என சமரநாயக்க தெரிவித்தார்.

இத்துறையில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பிரிவாக ஜனசக்தி பிரயாண காப்புறுதி திட்டம் அமைந்துள்ளது. மிக அண்மையில், ஜனசக்தி நிறுவனமானது பிரயாண காப்புறுதி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், டயலொக் நிறுவனத்துடன் கைகோர்த்து அனைத்து ருளுனு 50,000 மருத்துவம் மற்றும் USD 25,000 விபத்து மரணங்கள் மற்றும் நிரந்தர உடல்நலக் குறைபாடு ஆகியவற்றுக்கு அனைத்து டயலொக் சந்தாதாரருக்கும் ஒருநாளைக்கு ரூ.175 ஈடு செய்யும் வகையில் புத்துருவாக்கத்தை வெளியிட்டு இருந்தது. ஜனசக்தி e-Travel சிஸ்டத்தின் மூலம் வெளிநாட்டு பிரயாணிகள் தமது பிரயாண காப்புறுதி திட்டத்தை ஒருசில நிமிடங்களில் ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இவ்விரு சேவைகளையும் வழங்கும் ஜனசக்தி பிரயாணக் காப்புறுதி திட்டமானது சந்தையிலுள்ள வேறெந்த பிரயாணக் காப்புறுதி திட்டமும் வழங்காத அதிசிறந்த சௌகரியத்தை வெளிநாட்டு பிரயாணிகளுக்கு வழங்குவதை உறுதிசெய்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .