2026 மே 07, வியாழக்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 ஜூன் 09 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


பங்குச்சந்தை சுட்டிகள் சரிவான பெறுமதியை பெரும்பாலும் பதிவு செய்திருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்த வேளையில், உள்நாட்வர்கள் பங்கு விற்பனை கவனம் செலுத்தியிருந்தனர். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ரோயல் செரமிக்ஸ், சுவிஸ்டெக், ஆகிய பங்குகள் கடந்த வாரம் சந்தையில் புரள்வு பெறுமதியில் பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,279.14 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3479.17 ஆகவும் பதிவாகியிருந்தன.

ஜூன் 02ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,936,227,838 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 25,643 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 24,267 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,376 ஆகவும் பதிவாகியிருந்தன.

திங்கட்கிழமை
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த கொடுக்கல் வாங்கல்கள் மத்தியில் கொழும்பு பங்குச்சந்தை நேர்ப் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. கார்சன் கம்பர்பெட்ச் பங்குகள் மீது உயர்வான பெறுமதிகள் பதிவாகியிருந்தமை இதில் பங்களிப்பை வழங்கியிருந்தது. நு-செனலிங் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது மொத்த வியாபாரம் பதிவாகியிருந்தன. இவை புரள்வு பெறுமதியில் 38 வீத பங்களிப்பை வழங்கியிருந்தன. டயலொக் ஆக்சியாடா, லங்கா ஐஓசி மற்றும் றிச்சர்ட் பீரிஸ்; அன்ட் கம்பனி பங்குகள் மீது  சிறியளவிலான கொடுக்கல் வாங்கல்கள் பதிவாகியிருந்தன. மேலும், பீசி ஹவுஸ், பான் ஏசியன் பவர் மற்றும் த ஃபினான்ஸ் வாக்குரிமையற்ற பங்குகள் ஆகியவற்றின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் பங்களிப்பை செலுத்தியிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை
சந்தை நடவடிக்கைகள் பரந்தளவில் மறைபெறுமதியை பதிவு செய்திருந்தது. இதில் லயன் பிரெவரி, ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டல்ஸ் மற்றும் ஃபின்லேஸ் கொலம்போ ஆகியன பங்களிப்பை வழங்கியிருந்தன. உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா, ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. ஜனசக்தி இன்சூரன்ஸ் மற்றும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு காணப்பட்டது, சிறியளவிலான முதலீட்டாளர்கள் அனிலானா ஹோட்டல்ஸ் மற்றும் புரொப்பர்டீஸ் மற்றும் பீசி பார்மா ஆகிய பங்குகள் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

புதன்கிழமை
புரள்வு பெறுமதி 1 பில்லியன் ரூபா பெறுமதியை கடந்திருந்தது. நிறுவனசார் மற்றும் உயர் பெறுமதி வாய்ந்த ஈடுபாடுகள் செரன்டிப் ஹோட்டல்ஸ் மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. பிசி பார்மா, ஆசியா சியாகா கொமோடிடீஸ் மற்றும் அமானா டகாஃபுல் ஆகிய பங்ககள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது அதிகளவு ஈடுபாட்டை இவர்கள் காண்பித்திருந்தனர்.

வியாழக்கிழமை
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது அதிகளவு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் வெளிநாட்டவர்களின் அதிக ஆர்வத்தை பெற்றிருந்ததுடன், புரள்வு பெறுமதியில் 58 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தது. ஆரோக்கியமான புரள்வு பெறுமதியுடன், சுட்டிகள் கலப்பு பெறுமதிகளில் நிறைவடைந்திருந்தன. மேலும், சிறியளவு விற்பனையாளர்கள் பிசி பார்மா மற்றும் லாஃவ்ஸ் காஸ் வாக்குரிமையற்ற பங்குகளில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.  

வெள்ளிக்கிழமை
கொடுக்கல் வாங்கல்களில் முன்னேற்றகரமான நிலை பதிவாகியிருந்தது. சந்தைப்புரள்வு பெறுமதியில் உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் கொடுக்கல் வாங்கல்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தன. வெளிநாட்டு கொள்வனவு தொடர்ந்தும் அதிகளவில் பதிவாகியிருந்தது. ரோயல் செரமிக்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் பங்களிப்புடன் புரள்வு பெறுமதி 800 மில்லியனை கடந்திருந்தது. மேலும், சுவிஸ்டெக் பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. த ஃபினான்ஸ் கம்பனி வாக்குரிமையற்ற பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பிசி பார்மா, சிலோன் லெதர். (உரிமை), லங்கா சென்ச்சரி (உரிமை), சிலோன் லெதர் (உரிமை) மற்றும் ரம்பொட ஃபோல்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

எஸ்எம்பி லிசிங் (சாதாரண), சணச டிவ.வங்கி, களனி கேபிள்ஸ், ஹேமாஸ் பவர் மற்றும் லோஃவ்ஸ் காஸ்(சாதாரண) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,900 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.71 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 222.09    ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .