2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொழும்பில் மியன்மார் முதலீட்டு செயலமர்வு நாளை

A.P.Mathan   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மார் முதலீட்டு செயலமர்வு நாளை (12) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இந்த ஏற்பாடுகளை அடம் கொன்சல்டிங் ஜப்பான் மற்றும் அடம் லங்கா (பிரைவேற்) லிமிடெட் ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தன. இலங்கையில் மியன்மார் முதலீட்டு செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்படும் முதலாவது தடவை இது என்பது குறிப்பிடத்தக்கது.

மியன்மாரை பொறுத்தட்டில் சுற்றுாலத்துறை என்பது மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது. ஹோட்டல்கள், தொடர்மனைகள் போன்றன பெருமளவில் நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ளன.

இந்த நிலையில் மியன்மாருக்கு பெருமளவான வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. 684 வெளிநாட்டு நிறுவனங்கள் இதுவரையில் தம்மை பதிவு செய்துள்ளன. இதன் காரணமாக அந்நாட்டில் தொழில் வாய்ப்புகள் கூட காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .