
சுற்றுலா சார் வர்த்தக செயற்பாடுகளுக்காக இலங்கை புகழ்பெற்று வரும் நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளில் 11.2 வீதமானவர்கள் வர்த்தக நடவடிக்கைகளுடன் கூடிய சுற்றுலாத்துறையை நோக்கமாக கொண்டு வருகை தருவதாக அல்லது மாநாடுகள், வர்த்தக சந்திப்புகள் போன்றவற்றில் பங்குபற்றும் நோக்கில் வருகை தருவதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் மூலம் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய துறைமுகங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றுடன் அதிகரித்துச் செல்லும் பொருளாதார அபிவிருத்தியில் பிரதிபலிப்பை பதிவு செய்யும் வகையில் இந்த சுற்றுலாப் பயணிகளின் உள்வருகை பதிவாகிவருகிறது.
இந்த சூழ்நிலையில், கட்டர்பில்லர் ஆசிய விநியோகத்தர் சேவை பயிற்சிக் கருத்தரங்கு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குழுநிலை கருத்தரங்காக இடம்பெற்ற இந்த நிகழ்வானது, இலங்கையில் கட்டர்பில்லர் குழுமத்தினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் துறைகளில் கட்டர்பில்லர் என்பது சர்வதேச ரீதியில் முன்னோடியாக திகழும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய ரீதியில் 200க்கும் அதிகமான விநியோகத்தர்களை கொண்டுள்ளது. இந்த கருத்தரங்கை இலங்கையில் கட்டர்பில்லர் தயாரிப்புகளை விநியோகிக்கும், யுனைட்டட் டிராக்டர்ஸ் அன்ட் இக்யுப்மன்ட் (UTE) முன்னெடுத்திருந்தது.
இந்த கருத்தரங்கில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், சிங்கப்பூர் மற்றும் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர். UTE இன் பொருட்கள் உதவி சேவைப் பிரிவின் பொது முகாமையாளர் எச்.ஆர்.ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த நிலையில், இலங்கையில் கட்டர்பில்லர் தனது சர்வதேச செயலமர்வுகளை முன்னெடுக்க தீர்மானித்தமை என்பது, எமக்கு இலங்கையர்கள் எனும் வகையில் மிகவும் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது' என்றார்.
இந்த செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கு UTE இன் பலமில்லியன் டொலர் பெறுமதியான நவீன பொறிமுறை வேலைத்தளத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருந்ததுடன், நவீன வசதிகள் படைத்த பயிற்சி நிலையத்தையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
கட்டர்பில்லரின் ஆசிய பிராந்திய பயிற்சி மற்றும் அபிவிருத்தி பிரதிநிதியான கே பி சுஆ (Chua) கருத்து தெரிவிக்கையில், 'UTE பயிற்சி நிலையம் என்பது, அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் நிலையங்களுக்கு நிகரானதாக அமைந்துள்ளது. இந்த நவீன வசதிகளை கொண்டிருப்பது என்பது வாடிக்கையாளர்களுக்கு தமது முதலீட்டிக்கு சிறந்த பயனை பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்' என்றார்.
UTE இன் பயிற்சி நிலையம் என்பது தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) இன் அங்கீகாரத்தை பெற்றுள்ளதுடன், வத்தளையில் அமைந்துள்ள இந்த பயிற்சி நிலையம் சர்வதேச புகழ்பெற்ற கட்டர்பில்லர் ABC பயிற்சி திட்டத்துக்கு அமைவாக இயங்கி வருகிறது. இதன் மூலம் கம்பனி தொழிற்துறைசார் பயிற்சிகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்வது உறுதி செய்யப்படுகிறது. நவீன UTE பயிற்சி நிலையம், பாடசாலை கல்வியை பூர்த்தி செய்தவர்களையும் வௌ;வேறு குழுக்களாக இணைத்து வாடிக்கையாளர் மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்கி வருகிறது. சர்வதேச கட்டர்பில்லர் பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை பெற்ற பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் சிறப்புத்தேர்ச்சியை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு இடமாக இந்த நிலையம் உள்ளது.
விநியோகத்தர் சேவை பயிற்சி கவனிப்பு குழு என்பது வருடாந்தம் இடம்பெறும் செயலமர்வாகும். இதன் போது, பிராந்தியத்தின் வௌ;வேறு நாடுகளைச் சேர்ந்த பயிற்சிப் பிரீவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை பங்குபற்றச் செய்து, கட்டர்பில்லர் சேவை மற்றும் பயிற்சி நிபுணர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மற்றும் தொடர்பாடல்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அறிவு பகிர்வு மற்றும் நவீன தொழில்நுட்பத்தை விநியோகத்தர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்வதற்குமான சிறந்த அடித்தளமாக இது அமைந்துள்ளது.