2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'தீவா காணி அதிர்ஷ்டம்'

A.P.Mathan   / 2014 ஜூன் 30 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமது பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு கொழும்பை அண்மித்து பெறுமதி வாய்ந்த காணிகளை வழங்குவதற்கு தீவா ஆரம்பித்துள்ள ஊக்குவிப்பு திட்டத்தின் நான்காவது செயற்திட்டமான 'தீவா காணி அதிர்ஷ்டம்' இன் காணி தொகுதியை வெல்லும் முதலாவது அதிர்ஷ்டசாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதல் மாதத்தினுள் கிடைத்த கூப்பன்களிடையே முதலாவது காணியை வெல்லும் வெற்றியாளராக பரணகம உடுபத்தாவயைச் சேர்ந்த நிசந்தா வீரசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட ஊக்குவிப்பு திட்டத்தின் முதல் மாத இறுதியில் முன்னெடுத்த குலுக்கல் தெரிவு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு 2- பிறேபுறூக் பிளேஸ் இல் அமைந்துள்ள ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தில் நடைபெற்றது. சிரேஷ்ட வரி அதிகாரியான டி.ஏ.வை.பி.தென்னகோன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் குலுக்கல் தெரிவு இடம்பெற்றதுடன், காணியை வெல்லும் அதிஷ்டசாலியாக உடுபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த தீவா வாடிக்கையாளரான நிசந்தா வீரசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
இரு பிள்ளைகளின் தாயான நிசந்தா ஓர் குடும்பத்தலைவி. அவரது கணவர் பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றுவதுடன், பாடசாலை செல்லும் வயதில் ஓர் மகளும், மகனும் உள்ளனர். இது குறித்து நீண்டகால தீவா வாடிக்கையாளராகவுள்ள நிசந்தா கருத்து தெரிவிக்கையில், 'குடும்ப அங்கத்தவர்களுக்காக ஒரு சேமிப்பை ஒதுக்கி வைத்துக்கொள்ள எப்போதும் நான் முனைப்புடன் செயற்பட்டேன். தினசரி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் போதும் மிகவும் சிக்கனமான பொருட்களையே தேர்ந்தெடுப்பேன். அந்த வகையில் தான் நான் தீவா வாடிக்கையாளரானேன். இன்று தீவா அவற்றையெல்லாம் விட மிகப் பெறுமதியான பரிசினை வழங்கி எனது தெரிவு சரியானது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது' என்றார். அந்தக் காணியை தனது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்கு ஒர் முதலீடாக பயன்படுத்துவதே அவர்களது எதிர்பார்ப்பாகும்.
 
தீவா காணி அதிர்ஷ்டம் எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், ஒவ்வொரு மாதமும் காணியை வெல்லும் ஒரு வெற்றியாளர் வீதம் தெரிவு செய்யப்படவுள்ளது. ஏற்கனவே முதலாவது வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இரு காணிகளை தமது பெருமைக்குரிய வாடிக்கையாளருக்கு வெகுமதியாக வழங்க தீவா தயாராகவுள்ளது. இதற்கு மேலதிகமாக, கார்கீல்ஸ் வலையமைப்பினூடாக மேலுமொரு வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவா முன்னெடுத்துள்ளது. மேலும் காணி வெற்றியாளர்களை தவிர்ந்து மேலும் பல வெற்றியாளர்களை உருவாக்கும் நோக்கில் நாளாந்தம் 10,000 ரூபா மற்றும் வாராந்தம் தங்க நாணயங்களை தமது மதிப்புமிக்க வாடிக்கையாளருக்கு வழங்க தீவா முன்வந்துள்ளது.
 
தீவா ட்ரிபல் அக்ஷன் என குறிக்கப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் 03 தீவா சஷே வெற்று பக்கற் (35g, 70g அல்லது 250g) அல்லது வேறெந்த பக்கற்றிலிருந்தும் (400g, 1kg, 2kg) ஒரு மேலுறை வீதம் உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு 'தீவா காணி அதிர்ஷ்டம்' த.பெ. இல. 1289, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைப்பதனூடாக இந்த குலுக்கல் தெரிவில் கலந்துகொள்ள முடியும். மேலும் இம்முறை போட்டியில் வாடிக்கையாளர் அதிகமதிகமாய் பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் சைக்கிள் அணியினர் கிராமத்திற்கு கிராமம், நகரத்திற்கு நகரம் பயணித்து 'தீவா காணி அதிர்ஷ்டம்' இனை இல்லத்தரசிகளின் வீட்டிற்கே கொண்டு செல்லவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X