2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத தங்குமிட வசதிகளை வழங்கும் தொடர்மனைகள், ஹோட்டல்கள் பாதிப்பு

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தொடர்மனைகள் செயற்பட்டு வருகின்றமையானது இலங்கையின் சுற்றுலாத்துறையில் பெரும்பிரச்சனையாக தற்காலத்தில் மாறியுள்ளது. இந்த செயற்பாடுகளின் காரணமாக ஹோட்டல்களின் வியாபாரங்களும் பெருமளவு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
 
கொழும்பிலும் தெற்கு பகுதிகளிலும் புதிதாக நிர்மாணிக்கப்படும் தொடர்மனைகள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த விலையில் தங்குமிட வசதிகளை வழங்குகின்றமை காரணமாக, ஹோட்டல் துறை பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. இந்த தொடர்மனைகள் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகளாக இயங்குவதற்கு போதியளவு அனுமதிகளை கொண்டிருப்பதில்லை. இதன் காரணமாக இவை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்துவதுமில்லை. 
 
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு போதியளவு சட்ட விதிமுறைகள் இல்லாத நிலையில், தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய்ந்து எதிர்காலத்தில் இந்த விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த அரசு கவனம் செலுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X