2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் அகர்வுட் உற்பத்திக்கான பிரத்தியேக காப்புரிமையை பெற்றுள்ள சதாஹரித

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


'வல்லபட்டை இன வகையைச் சேர்ந்த அகர்வுட் செய்கையை இலங்கையில் வணிக ரீதியில் முன்னெடுப்பது என்பது CAKit (Cultivated Agarwood Kits) முறையினூடாக மட்டுமே முடியும். இதற்கான காப்புரிமையை சதாஹரித பிளான்டேஷன்ஸ் நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது' என நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எச்.கே.ரோஹண அண்மையில் தெரிவித்திருந்தார்.
 
'இந்த தொழில்நுட்பத்தில் சதாஹரித பிளான்டேஷன்ஸ் என்பது அதிகளவு முதலீடு செய்துள்ளதுடன் அகர்வுட் செய்கைக்காக பிரத்தியேக அங்கீகாரத்தை பெற்ற நிறுவனமாகவும் திகழ்கிறது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
வணிக நோக்கிலான மற்றும் பொருளாதார ரீதியில் பெருமளவு பயன் தரக்கூடிய வகையில் அமெரிக்காவின் மின்னேசொடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபர்ட் பிளான்செட்டே பல்வேறு ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அமைவாக CAKit இனை வடிவமைத்திருந்தார். மேலும், வியட்நாம் நாட்டில் வெற்றிகரமாக அகர்வுட் செய்கையை முன்னெடுத்திருந்ததன் மூலம் இந்த செய்கைக்கான காப்புரிமை வழங்கப்பட்டிருந்தது.
 
அகர்வுட் வணிக ரீதியான செய்கைக்கான தொழில்நுட்பம் என்பது கல்டிவேட்டட் அகர்வுட் லிமிடெட் நிறுவனத்தினூடாக வழங்கப்படுகின்றது. மின்னெசொடா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப சான்றிதழ் வழங்கலில் ஈடுபட்டுள்ளது. நாமும் இந்த நிறுவனத்திடமிருந்து அனுமதியை பெற்றுள்ளோம். இதுவரையில் உலகளாவிய ரீதியில் ஆறு நாடுகள் இந்த அனுமதியை பெற்றுள்ளன. இலங்கையை பொறுத்தமட்டில் இந்த அனுமதியை சதாஹரித பிளான்டேஷன்ஸ் மட்டுமே கொண்டுள்ளது. 
 
முன்னர் பயன்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய முறைக்கமைய அல்லாமல், புதிய தொழில்நுட்பத்துக்கமைய மேற்கொள்ளப்படும் அகர்வுட் செய்கை என்பது சிக்கனமானதும், தூய்மையானதும், நிலையானதுமாக அமைந்துள்ளதுடன், அதிகளவு பெறுபேறுகளையும் வழங்குவதாக அமைந்துள்ளது. 
 
சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கும் மேலாக சதாஹரித பிளான்டேஷன்ஸ் கம்பனி, வணிக ரீதியிலான வனச் செய்கையை முன்னெடுத்து வருகிறது. சூழலுக்கு பாதுகாப்பான திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. 
 
இலங்கையின் சகல விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு, வணிக வனாந்தர செய்கை என்பது முன்னெடுக்கப்படுவதுடன், அதற்கான முதலீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மிக முக்கியமாக, சதாஹரித தனது ஒரு தசாப்த கால செயற்பாடுகளின் போது, எவ்விதமான வாடிக்கையாளர் முறைப்பாடுகளையும் பெறவில்லை. 
 
இந்நிறுவனம் ISO தரச்சான்றை பெற்றுள்ளது என்பதுடன், 'தேசிய பச்சை விருதுகள் 2012' இல் தங்க விருதை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு மத்திய சூழல் அதிகார சபையின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X