2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் பாதணிகள் ஏற்றுமதி அதிகரிப்பு

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பாதணிகளின் எண்ணிக்கை 2013இல் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை பதிவு செய்திருந்ததாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்த அதிகரிப்பு தொடர்ந்து 2014ஆம் ஆண்டிலும் உயர்ந்த மட்டத்தில் காணப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாதணிகள் பெருமளவில் அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை சென்றடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பாதணிகளில் பெருமளவான தொகையை சீனா ஏற்றுமதி செய்வதாகவும் கண்டறியப்பட்டிருந்தது. இரண்டாமிடத்தில் இந்தியா காணப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X