2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இசைக்குயில் அன்ஜெலின் குணதிலகவை கௌரவித்த மஞ்சி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐந்து தசாப்த கால இசையை கொண்டாடும் வகையில், மஞ்சி வர்த்தகநாமமானது அண்மையில் BMICHஇல் இடம்பெற்ற அன்ஜெலின் குணதிலகவின் Live in concert நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியானது புகழ்பெற்ற பின்னணி பாடகி எனும் வகையில் இலங்கைக்கு அவர் வழங்கிய சேவை மற்றும் பங்களிப்பை கௌரவப்படுத்தும் வகையிலும், விசேட நினைவுச் சின்னத்தை கையளிக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டது.
 
பின்னணி பாடகி குணதிலக இதுவரை 6000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளதுடன், 1958ஆம் ஆண்டில் தனது முதல் பாடலாக சி.டி.பெர்னாண்டா உடன் இணைந்து 'The Country of Gods' எனும் திரைப்படத்தில் நாட்டுப்புற பாடலொன்றை பாடினார்.
 
பல்வேறு கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு திட்டங்களை மஞ்சி முன்னெடுத்து வருகிறது. இலங்கை சமூகத்தின் மத்தியில் கலைத்திறமையை அதிகரித்தல் மற்றும் திறமையான நட்சத்திரங்களை அடையாளப்படுத்தல் உள்ளிட்ட தமது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் இத்தகைய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றது. நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் கீழ், இத்தகைய கண்கவர் நிகழ்ச்சிகள் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த வருட ஆரம்பத்தில் மஞ்சியானது கீர்த்தி பஸ்குவர் நேரடி இசை நிகழ்ச்சிக்கும் அனுசரணை வழங்கியிருந்தது.
 
மேலும் மஞ்சி ஆனது, ரூபவாஹினி தொலைக்காட்சி சேனல் ஊடாக 'அன்ஜெலின் Live in concert' இனை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான அனுசரணையையும் வழங்கியிருந்தது.
 
இந்த நிகழ்ச்சியில் CBLஇன் குழும பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைவருமான நந்தன விதானகே மூலம் ஐந்து தசாப்தத்திற்கும் மேற்பட்ட அவரது கலை ஆர்வம் கௌரவிக்கப்பட்டமை மிக முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது.
 
இந்த இசை நிகழ்ச்சிக்கான மஞ்சி அனுசரணை குறித்து விதானகே கூறியதாவது, 'இலங்கையின் மிகப்பெரிய உணவு உற்பத்தியாளர் எனும் ரீதியில், எம்மால் இயலுமானவரை சமூகத்திற்கு சேவையாற்றுவதை குறிக்கோளாக கொண்டுள்ளோம். எமது சமூகத்திற்கு உதவியளிக்கும் முகமாக பல திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களது தேவைகளையும் நன்குணர்ந்துள்ளோம். பல்வேறு துறைகள் ஊடாக திறம்பட வடிவமைத்த பல திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க எம்மால் முடிந்துள்ளது. எமது சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் ஊடாக இலங்கையில் தற்போது மிக அரிதாக கேட்கப்படும் புகழ்பெற்ற பல கலைஞர்களின் படைப்புகளை ஊக்குவித்துள்ளதுடன், எமது அர்ப்பணிப்பானது சமூகத்தில் மீண்டும் அவர்களது பாடல்களை ஒலிக்கச் செய்துள்ளது' என்றார்.
 
இந் நிகழ்ச்சியில் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்ததுடன், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
 
'ஐந்து தசாப்தங்களாக எனது இசை வாழ்க்கையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன். இவ் அனைத்தையும் கர்த்தர் இயேசுவின் பணி மற்றும் திட்டத்திற்கு அமைவாகவே பெற்றேன் என நான் நம்புகிறேன். இன்று மஞ்சியின் பாராட்டுதலை எனது இசை பயணத்தில் பெற்றுக்கொண்ட ஏனைய விருதுகளுக்கு இணையாக கருதுகிறேன். ரசிகர்களுடன் இணைந்து, பல தலைமுறைகளைத் தாண்டி காலத்தை வென்று நிற்கும் பாடல்களை மீண்டும் கொண்டு வந்த CBL இன் பணிப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்' என குணதிலக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
 
மஞ்சியின் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள், 2013 SLIM விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் CSR வர்த்தகநாமத்திற்கான தங்க விருது உள்ளடங்கலாக பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. மஞ்சி வர்த்தகநாமமானது கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு சமூக பொறுப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்து பல்லாயிரக்கணக்கான இலங்கையரின் வாழ்க்கையையும், சமூகத்தையும் மேம்படுத்தி வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X