.jpg)
உள்நாட்டில் வளர்க்கப்படும் வல்லப்பட்டை இனம், இறக்குமதி செய்யப்படும் எகியுலேரியா மரங்களுக்கு ஒப்பானவை. இருப்பினும், சதாஹரித பிளாண்டேஷன் மூலம் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வணிக நோக்கிலான எகியுலேரியா விதைகள் வியட்நாம்; விவசாய திணைக்களம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான செய்கை செயல்முறைக்கும் சான்றளிக்கப்பட்டுள்ளமையால் அதியுயர் அறுவடை பெறப்படுகிறது' என சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட்; நிறுவனத்தின் தலைவர் சதீஷ் நவரத்ன தெரிவித்தார்.
இறக்குமதி முதல், அகர்வுட் அறுவடை மற்றும் இறுதியாக ஏற்றுமதி செயல்முறை வரையான நடவடிக்கைகளுக்கு பிரத்தியேக அதிகாரத்தை இலங்கையில் சதாஹரித மட்டுமே கொண்டுள்ளது என மேலும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அதிகாரத்தை சட்ட ரீதியாக கொண்டுள்ள நிறுவனம் எனும் ரீதியில், வல்லப்பட்டை அழிவை தடுத்து வருவதுடன், சட்ட ரீதியான எகியுலேரியா செய்கையை ஊக்குவித்து வருகிறது. சதாஹரித ஆனது, இச் செய்கையில் முதலீடு செய்து அதியுயர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள வருமாறு அனைத்து இலங்கையருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
வணிக நோக்கிலான அகர்வுட் செய்கைக்கான எகியுலேரியா விதைகளை உருவாக்குவதில் சிறந்த தொழில்நுட்ப அறிவினை கொண்டுள்ள வியட்நாமிலிருந்து மட்டுமே சதாஹரித விதைகளை இறக்குமதி செய்து வருகிறது. நல்ல தரமான தாய் மரங்களிலிருந்து A தரத்தைச் சேர்ந்த விதைகள் தெரிவு செய்யப்படுகின்றன. இறக்குமதியின் போது வியட்நாம் விவசாய திணைக்களம் மற்றும் ஏனைய விதிமுறைகளை சதாஹரித பின்பற்றுகிறது.
இந் நிறுவனமானது விதைகளுக்கு தீங்கிழைக்காத வகையிலும், இந்த இனங்களின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி Convention on International Trade in Endangered Species of Fauna and Flora(CITES) இன் விதிமுறைகளை கடைபிடித்து வருகிறது. மேலும் சதாஹரித CITS யிடமிருந்து அனுமதிச் சான்றிதழையும் பெற்றுள்ளது.
'விதைகளின் போக்குவரத்து செயல்முறையானது, பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலைகளுக்கமைய முன்னெடுக்கப்படுகிறது. விசேடமாக வான்வழி மூலம் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு நிபந்தனைகள் கட்டாயம் பின்பற்றப்படுகின்றன' என நவரத்ன தெரிவித்தார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது, இந்த ஆரோக்கியமான தாவரங்களின் இயக்கத்தை உறுதி செய்யும் வகையில் தேசிய விவசாய திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய தாவர தடுப்புக்காப்பு சேவைகள் திணைக்களம் போன்றன கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணப்படும்.
இதற்கு மேலதிகமாக, தேசிய தாவர தடுப்புக்காப்பு சேவைகள் மூலம் எகியுலேரியா கன்றுகளின் ஆரோக்கியம் குறித்து கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கன்றுகளை நடுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எதிர்மறை தாக்கம் பற்றி அறிவதே இக் கண்காணிப்புகளின் குறிக்கோளாக அமைந்துள்ளது.
எகியுலேரியா விதைகளின் இறக்குமதியின் பின்னர், தெற்காசியாவிலேயே அகர்வுட் செய்கைக்கான மிகப்பெரிய கன்றுகள் வளர்ப்பு பண்ணையாக கருதப்படும் இங்கிரியவில் அமைந்துள்ள அதன் கன்றுகள் வளர்ப்பு பண்ணையில் தமது பயிர்களை வளர்த்து வருகின்றது.
தமது செயல்முறை குறித்து நவரத்ன தெரிவித்தாவது, 'அகர்வுட் உற்பத்திக்கான விதைகள் இறக்குமதி செய்யப்பட்டதிலிருந்து அனைத்து செயல்முறைகளும் சட்ட மற்றும் நடைமுறை வரைவுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயல்முறைகளை அதிக முதலீடு செய்து சதாஹரித பாதுகாத்து வருகிறது' என்றார்.
சதாஹரித பிளாண்டேஷன் ஆனது, பொருளாதாரம் மற்றும் சூழல் பாதுகாப்பினை மேம்படுத்தும் இலங்கையின் முதன்மை நிறுவனமாக திகழ்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக இந் நிறுவனம் தேவைகளுக்கு பொருத்தமான வணிக நோக்கிலான வனவளர்ப்பு சம்பந்தமான திட்டங்களை வெளிப்படையான முறையில் முன்னெடுத்து வருகின்றது. இந்த காலப்பகுதியில் எவ்விதமான வாடிக்கையாளர் முறைப்பாடுகளையும் நிறுவனம் பெறவில்லை. இந் நிறுவனம் ISO தரச்சான்றிதழை பெற்றுள்ளதுடன், 'தேசிய பசுமை விருதுகள் 2012' இல் தங்க விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.