.jpg)
அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன மறைபெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. இதில் பிரதானமாக கொமர்ஷல் வங்கி, DFCC வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் மீதான விலைச்சரிவுகள் பங்களிப்பை வழங்கியிருந்தன. புரள்வு பெறுமதி 1.9 பில்லியன் ரூபாவை கடந்திருந்ததுடன், உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு லங்கா சென்ச்சரி இன்வெஸ்ட்மன்ட்ஸ், நேஷன்ஸ் லங்கா ஃபினான்ஸ் மற்றும் பிசிஎச் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு என்பது அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் டிரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. இதேவேளை வெளிநாட்டவர்கள் நிகர கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர்.
பன்முகத்துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறை 1.73% சரிவை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 1.00 ரூபாவால் குறைந்து 249.90 ரூபாவாக பதிவாகியிருந்தது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 2.40 ரூபாவால் குறைந்து 59.50 ரூபாவாக பதிவாகியிருந்தது.
வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதித்துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் இரண்டாவது உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறை 3.95% சரிவை பதிவு செய்திருந்தது. பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்கொன்றின் விலை 0.80 ரூபாவால் குறைந்து 20.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.
செவ்ரொன் லுப்ரிகன்ட் லங்கா மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் ஆகிய பங்குகளும் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன. செவ்ரொன் பங்கொன்றின் விலை 2.00 ரூபாவால் குறைந்து 339.10 ரூபாவாக பதிவாகியிருந்தது. அக்சஸ் என்ஜினியரிங் பங்கொன்றின் விலை 1.10 ரூபாவால் குறைந்து 30.50 ரூபாவாக பதிவாகியிருந்தது.