2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அவுஸ்திரேலிய சொத்துக்களில் முதலீடு செய்ய வாய்ப்பை வழங்கும் டிவெல்லிங்ஸ்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 17 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


காணி உரிமையாளர்கள், காப்பாளர்கள் மற்றும் சொத்துக்களில் முதலீடுகளை மேற்கொள்வோர் தமது சொத்துக்களிலிருந்து உயர்ந்த வருமானத்தை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பார்ப்பார்கள். இதன் காரணமாக சொத்துக்களில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது என்பது விலை மதிப்பில்லாததாக அமைந்துள்ளது. டிவெல்லிங்ஸ் குழும சொத்து முதலீட்டு சேவைகள் அவுஸ்திரேலியாவில் சொத்துக்களில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான சகலவிதமான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. 
 
நிறுவனத்தின் தேசிண அணியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் உள்ளடங்கியுள்ளதுடன், இவர்கள் சொத்துக்கள் முதலீடுகள் முதல் சொத்துக்கள் பராமரிப்பு வரையிலான சகலவிதமான ஆலோசனைகளையும் வழங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இதை கருத்தில் கொண்டு, குழுமம் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீட்டு முறை ஒன்றையும் குழுமம் அறிமுகம் செய்துள்ளது. 
 
குழுமத்தின் மூலமாக சொத்துக்கள் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம், வீட்டுக்கடன் உதவி, சட்ட மற்றும் புலம்பெயர் சேவைகள் போன்றவற்றையும் முதலீட்டு ஆலோசனைகளுக்கு மேலதிகமாக வழங்கப்படுகிறது. 
 
அவுஸ்திரேலிய வங்கிகள் 75 வீதம் வரையிலான சொத்துக்கள் பெறுமதியை அவுஸ்திரேலியாவின் குடியுரிமையை பெற்றிராத மற்றும் அந்நாட்டு வாசிகள் அல்லாத இலங்கையைர்களுக்கு கடனாக வழங்குகின்றன. அவுஸ்திரேலியாவில் சரியான இடத்தில் அமைந்த பொருத்தமான சொத்து என்பது வருடமொன்றில் 8 முதல் 10 வீத வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும். மேலும், அவுஸ்திரேலிய சொத்துக்களில் முதலீடுகளை மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கு தமது பணத்தை இலங்கைக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளின் பின்னர் உயர்ந்த வருமதியுடன் பெற்றுக் கொள்ளவும் முடியும். 
 
டிவெல்லிங்ஸ் குழுமத்தின் பணிப்பாளர் நவின் டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'எமது சர்வதேச வாடிக்கையாளர்களின் இலக்குகளை எய்துவதற்காக நாம் எமது நியம கடமைகளையும் கடந்து செயலாற்றி வருகிறோம். இதன் மூலம் அவர்கள் உயர்ந்த வருமானத்தை தமது முதலீட்டுக்கு பெற்றுக் கொள்வதை உறுதி செய்கிறோம். எமது பிரதான இலக்கு என்பது எமது முதலீட்டாளர்களுக்கு சொத்துக்கள் அபிவிருத்தி மற்றும் சரியான ஆலோசனை  வழங்கல் மூலமாக சிறந்த வளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகும்' என்றார்.
 
இலங்கையின் மூன்று தொழில் முயற்சியாளர்களின் மூலமாக இந்த குழுமம் தாபிக்கப்பட்டுள்ளது. இதில் நவின் டி சில்வா, சஞ்சிக அபேரட்ன மற்றும் தீக்ஷன சோமரட்ன ஆகியோர் உள்ளடங்குகின்றனர். டிவெல்லிங்ஸ் குழுமத்தை தற்போதைய நிலைக்கு உயர்த்த இவர்கள் தமது உயர்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இலங்கையில் மட்டுமில்லாமல், துபாய், சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் இந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
பல்துறை கம்பனி எனும் வகையில் டிவெல்லிங்ஸ் குழுமம், தகவல் தொழில்நுட்ப வெளிக்கள சேவை, கட்டட நிர்மாண விநியோக இறக்குமதி மற்றும் உணவகங்கள் ஆகியவற்றை அவுஸ்திரேலியாவில் கொண்டுள்ளது. இவர்களின் வியாபாரத்தில் புதிய உள்ளடக்கமாக www.myproperty.lk என்பது அமைந்துள்ளது. சகல இலங்கையர்களும் தமது சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில் அமைந்த ஒன்லைன் கட்டமைப்பாகும். துபாய், பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் இந்த சேவையினூடாக பயன்பெறுவார்கள். 
 
மேலதிக விபரங்களை www.dwellingsgroup.com.au எனும் இணையத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ளலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X