2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய அன்ட்ரொயிட் ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ள மைக்குரோமெக்ஸ்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின் மிகப்பெரிய கையடக்க தொலைபேசி விற்பனை நிறுவனமும், இலங்கையில் மாதாந்தம் அதிகளவு விற்பனையாகும் கையடக்க தொலைபேசி வர்த்தக நாமமுமான மைக்குரோமெக்ஸ், தனது புதிய அன்ட்ரொயிட் ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த அன்ட்ரொயிட் தெரிவுகள் விலையில் சகாயமானதாகவும், பாவனையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.
 
மைக்குரோமெக்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வியாபார நடவடிக்கைகளுக்கான உப தலைவர் அமித் மாத்தர் இந்த புதிய தெரிவுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகள் அதிகளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ளதுடன், விலையில் குறைந்தனவாக அமைந்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தெரிவுகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் புதிய பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றன நுகர்வோரின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன' என்றார்.
 
'பட்ஜெட் அன்ட்ரொயிட் கையடக்க தொலைபேசிகளுக்காக நாம் பின்பற்றும் தர நிர்ணயங்களின் மூலமாக, எமது பாவனையாளர்களுக்கு சிறந்த அன்ட்ரொயிட் யிp அனுபவங்களை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது' என மெட்ரொபொலிடன் டெலிகொம் சேர்விஸஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சன்ஜீவ் ஆரியரட்னம் தெரிவித்தார். இலங்கையில் அறிமுகம் செய்யப்படும் புதிய மைக்குரோமெக்ஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்து ஏக முகவர் பெருமையுடன் அறிவித்துள்ளது.
 
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகளில் உள்ளடங்கியுள்ள Bolt A37B, Bolt A69, Canvas Unite (A092), Canvas Engage (A091), Canvas Fire 2 (A104), Canvas Fire (A093), Canvas Unite 2 (A106) மற்றும் the Canvas Power (A96) போன்றன சக்தி வாய்ந்த வினைத்திறன், பல்செயற்பாட்டு திறன், உயர்தர படங்கள் மற்றும் பல்லூடக திறன் ஆகியவற்றை கொண்டுள்ளதுடன், சிறந்த பற்றரி திறனையும் கொண்டுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
மைக்குரோமெக்ஸ் Bolt A37B மற்றும் A69 ஆகியன அன்ட்ரொயிட் Jelly Bean OS ஐ கொண்டுள்ள குறைந்த விலையில் காணப்படும் ஸ்மார்ட்ஃபோன் வகைகளாகும். 3G வீடியோ அழைப்புகள் மற்றும் Skype அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய வசதி இதில் காணப்படுகின்றது. முன்புற மற்றும் பின்புற டிஜிட்டல் கமராக்கள் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை படம் பிடித்துக் கொள்ள உதவுவதுடன், பற்றரி நீடித்து உழைக்கும் திறனை கொண்டுள்ளது. தற்போது வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் Bolt A37B மற்றும் A69 ஆகியவற்றின் விலை முறையே 7,990 ரூபாவாகவும், 12,990 ரூபாவாகவும் அமைந்துள்ளது.
 
மைக்குரோமெக்ஸ் Canvas Unite (A092) மற்றும் and Canvas Engage (A091) sport போன்றன 4 அங்குல தொடு திரைகளை கொண்டுள்ளதுடன், பாவனையாளர்கள் மங்கலான தருணங்களிலும் உடனுக்குடன் படங்களை எடுத்துக் கொள்ள முடியும். பாவனையாளர்கள் தமது பாடல்கள், வீடியோக்கள், படங்கள் மற்றும் ஆவணங்களை சேமித்து வைக்கவும் முடியும். Canvas Unite (A092) மற்றும் Canvas Engage A091 ஆகியவற்றின் விலை முறையே 13,990 மற்றும் 14,990 ரூபாவாக அமைந்துள்ளது.
 
மைக்குரோமெக்ஸ் Canvas Fire 2 ஸ்மார்ட்ஃபோன் வகைகள் dual firing ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒலி நயத்தை வழங்கும் வகையில் இவை அமைந்துள்ளன. பல்செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையில் இந்த இரு அலகுகளும் அமைந்துள்ளதுடன், அதிவேகமான அன்ட்ரொயிட் Kitkat மென்பொருளை கொண்டுள்ளன. முன்புற மற்றும் பின்புற கமரா, பொன்னான தருணங்களை சேமித்து வைக்க முடிகிறது. Canvas Fire 2 (A104) இன் விலை 16,990 ரூபாவாக அமைந்துள்ளது. 
 
மைக்குரோமெக்ஸ் புதிய தெரிவுகளில் உள்ளடங்கியுள்ள ஏனைய புதிய அறிமுகங்களாக the Canvas Unite 2 (A106) மற்றும் Canvas Power (A96) ஆகியன உள்ளடங்கியுள்ளன. இவை பெரும்பாலும் ஒரே அளவு தொடு திரைகளை கொண்டுள்ளதுடன், A96 ஆனது நீடித்த பற்றரி வலுவை கொண்டுள்ளது. பிளாஷ் கொண்ட 5.0MP பின்புற கமரா இனிமையான தருணங்களின் உயர் தரத்தை மேம்படுத்துகிறது. 
முன்புற கமராவை கொண்டுள்ளதுடன், நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் வீடியோ chat செய்ய உதவியாக அமைந்திருக்கும். இவற்றின் விலை முறையே 17,490 ரூபா மற்றும் 19,990 ரூபாவாக அமைந்துள்ளன.
 
அனைத்து விதமான மைக்குரோமெக்ஸ் கையடக்க தொலைபேசிகளையும் நாடு முழுவதும் காணப்படும் ஏக முகவரான மெட்ரொபொலிடன் காட்சியறைகளிலும், விநியோகத்தர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களை அறிய http://www.micromaxinfo.com/sl/ க்கு பிரவேசியுங்கள் அல்லது நாடுபூராகவும் உள்ள ஏதேனும் காட்சியறைக்கு விஜயம் செய்யுங்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X