2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மாணவர்களிடையே ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் டெட்டோல்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் வகையிலும் சர்வதேச கைகளை கழுவும் தினம் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் சர்வதேச கைகளை கழுவும் தினத்தை முன்னிட்டு, டெட்டோல் 'கைகளுக்கு உயிரூட்டுங்கள்' எனும் தலைப்பில் சர்வதேச செயற்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. கைகளின் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், டயரியா போன்ற தவிர்த்துக் கொள்ளக்கூடிய நோய்களிலிருந்து ஏற்படக்கூடிய மரணங்களிலிருந்து பாடசாலை சிறுவர்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தது.
 
சர்வதேச ரீதியில், பாடசாலை சிறுவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களிடையே கைகளை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறது. இந்த வருடம், சவர்க்காரம் கொண்டு கைகளை கழுவுவது தொடர்பில் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. வருட நிறைவினுள் மொத்தமாக 32,000 பாடசாலை மாணவர்களை உள்ளடக்க டெட்டோல் திட்டமிட்டுள்ளது. பாடசாலை சிறுவர்கள் மத்தியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது, ஏனெனில் டயரியா போன்ற நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் இவர்கள் மத்தியில் அதிகளவில் காணப்படுகின்றது.
 
சுகாதார அமைச்சுடன் கைகோர்த்து டெட்டோல், அனுராதபுரத்தில் கைகளை கழுவும் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இலங்கையின் பாடசாலை சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அனுராதபுரத்தைச் சேர்ந்த 33 பாடசாலைகளில் கைகளை கழுவும் செயற்பாடுகளை டெட்டோல் முன்னெடுத்திருந்தது. 2014 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பமாகியிருந்தது. சவர்க்காரம் கொண்டு கைகளை கழுவிக் கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் பெருமளவான பாடசாலை சிறுவர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது. கிருமிகள் பற்றி அறிந்து கொள்வதற்கும், அவற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது தொடர்பிலான விளக்கங்களும் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் மேலும் பல விளையாட்டுக்களிலும், இதர கல்விசார் விழிப்புணர்வு செயற்பாடுகளிலும் பங்குபற்றியிருந்ததுடன், தொற்றுக்களை தவிர்ப்பதற்கு சவர்க்காரம் கொண்டு கைகளை கழுவுவது தொடர்பிலான ஊக்குவிப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.
 
அநுராதபுரத்தின் சிரேஷ்ட பொது சுகாதார மேற்பார்வையாளர் கருத்து தெரிவிக்கையில், 'பாடசாலை சிறுவர்களுக்கு கைகளை கழுவுவதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கங்களை வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அனுராதபுரத்தில் சர்வதேச கைகளை கழுவும் தினத்தை முன்னிட்டு வௌ;வேறான ஆக்கபூர்வமாக செயற்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் பாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்' என்றார்.
 
ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் வணிக பணிப்பாளர் சின்கிளெயார் குரூஸ் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையர்கள் மத்தியில் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் டெட்டோல் பல தலைமுறைகளாக தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. இலங்கையின் மில்லியன் கணக்கான நுகர்வோருக்கு இலகுவில் பெற்றுக் கொள்ளக்கூடிய தூய்மையான தீர்வுகளை டெட்டோல் வழங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் டெட்டோல் சர்வதேச கைகளை கழுவும் தினத்தை கொண்டாடுவதுடன், சிறுவர்கள் மத்தியில் கைகளை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்தும் வருகிறது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X