
இலங்கையில் முதலிடத்திலுள்ள அழகுச் சவர்க்காரமான வெல்வட், அண்மையில் இலங்கையின் சந்தைப்படுத்தல் நிறுவனம் நடத்திய SLIM வர்த்தகநாம சிறப்பு விருது விழா 2014 இல் ஆண்டிற்கான சிறந்த வர்த்தகநாமம் விருது உட்பட மூன்று தங்க விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளது.
மேலும் வெல்வட் வர்த்தகநாமமானது ஆண்டிற்கான சிறந்த உற்பத்திக்கான வர்த்தகநாமம் மற்றும் ஆண்டிற்கான உள்நாட்டின் சிறந்த வர்த்தகநாமம் ஆகிய பிரிவுகளிலும் தங்க விருதுகளை வெற்றிப் பெருமிதத்தோடு பெற்றுக் கொண்டது.
இலங்கையின் முதல் தர அழகுச் சவர்க்காரமான வெல்வட், கடந்த ஒன்பது ஆண்டுகளாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வர்த்தகநாமங்களுக்கு சிறந்த போட்டியை வழங்கி கடுமையான போட்டி நிலவும் அழகுச் சவர்க்கார சந்தையில் முன்னணியிலுள்ள தயாரிப்பாக விளங்குகிறது.
'உள்நாட்டு தயாரிப்பு சந்தைப்படுத்தலில் ஈடுபட்டு வரும் எமது கடின உழைப்பு மற்றும் உந்துசக்திக்கு கிடைத்த அங்கீகாரமும், நடுவர்களினால் கௌரவிக்கப்பட்டமையும் குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்' என ஹேமாஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் அனுஷ்கா சபாநாயகம் தெரிவித்தார்.
'நாம் முன்னெடுக்கும் அனைத்திலும் மையமாக விளங்கும் உள்நாட்டு வாடிக்கையாளர்களுடனான வெல்வட்டின் பிணைப்பு காரணமாகவே இந்த விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விருதுகளை வென்றதன் மூலம் நுகர்வோருடன் வலுவான உறவினை கட்டியெழுப்ப எண்ணியுள்ளோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
100% உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சவர்க்காரம் எனும் ரீதியில், வெல்வட் வரம்பிலுள்ள உற்பத்திகள் இயற்கை, 'do good' சரும பராமரிப்பு மூலப்பொருட்கள் மற்றும் மென்மைத்தன்மை, நறுமணம், ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான ஈரப்பதன் மிக்க விற்றமின் சேர்க்கைகள் போன்வற்றினால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
வெல்வட் உற்பத்தி வரிசையில் தனிநபர் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. வெல்வட் வரிசைகளில்: இளமையான சருமத்திற்கு ரோஜா மற்றும் மாதுளம், போசாக்கான சருமத்திற்கு பால் மற்றும் பாதாம், பளபளப்பான சருமத்திற்கு சந்தனம் மற்றும் மரமஞ்சள், பொலிவான சருமத்திற்கு வேப்பிலை மற்றும் கற்றாளை மற்றும் பிரகாசமான சருமத்திற்கு பர்ப்பள் லோட்டஸ் மற்றும் லெவன்டர் போன்றன உள்ளடங்குகின்றன.
'வர்த்தகநாமத்தின் வலுவான சந்தைப்படுத்தல் புத்தாக்கம், மூலோபாய திட்டமிடல் மற்றும் படைப்பாற்றல் அபிவிருத்தி போன்றவற்றின் மூலம் எம்மால் போட்டியை வெற்றிகரமான எதிர்கொள்ள முடிந்தது. பன்னாட்டு வர்த்தகநாமங்கள் அதன் வர்த்தகநாம பாரம்பரியம் மற்றும் சந்தைப்படுத்தல் முதலீடு காரணமாக மிகப்பெரிய அனுகூலங்களை பெற்றிருந்தன. இருப்பினும், எமது உற்பத்தி அபிவிருத்திக்கான புத்தாக்கம், சந்தைப்படுத்தல் தொடர்பாடல் மற்றும் உண்மையான வாடிக்கையாளர் புரிந்துணர்வுகள் ஆகியவை எமது நுகர்வோரிடையே நம்பிக்கை மற்றும் சந்தைப் பங்கினை மேம்படுத்த வழிவகுத்துள்ளது' என அனுஷ்கா மேலும் தெரிவித்தார்.
ஹேமாஸ் நிறுவன வரலாற்றின்; மைல்கல்லாக, 2007 SLIM விருது விழாவில் பேபி ஷெரமி வர்த்தகநாமத்திற்கு உள்நாட்டு வர்த்தகநாமம், உற்பத்தி வர்த்தகநாமம் விருதுகளும், முதற்தடவையாக உயரிய விருதான ஆண்டிற்கான சிறந்த வர்த்தகநாமம் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக ஹேமாஸ் மெனுபக்டரிங் நிறுவனத்தின் உற்பத்தி தொகுப்பிலுள்ள மற்றுமொரு வர்த்தகநாமமான வெல்வட் இந்த பெருமைக்குரிய விருதினை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.
தொடர்ந்து 13ஆவது ஆண்டாக நடைபெற்ற SLIM வர்த்தகநாம சிறப்பு விருது விழாவில் உள்நாட்டின் சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்திய உள்நாட்டு வர்த்தகநாமங்கள் அடையாளப்படுத்தப்பட்டதுடன், வர்த்தகநாம பொறுப்பதிகாரிக்கு வெகுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன. இலங்கையின் முன்னணி நிறுவனமாக SLIM ஆனது, சந்தைப்படுத்தல் செயற்திறனை மேம்படுத்தல் மற்றும் நாட்டின் சந்தைப்படுத்தல் நிபுணர்களை வலுவூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த விருதுகள், தமது இலக்கினை அடைந்த வர்த்தகநாமங்களை அடையாளப்படுத்தும் தொழிற்துறை அடையாளமாக காணப்படுகிறது.