2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட காணி உரிமை சட்டத்தால் பாதிப்பு

A.P.Mathan   / 2014 நவம்பர் 11 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட காணி சட்டம் (உரிமையில் ஏற்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தல்கள்) இலங்கையின் வியாபாரங்களுக்கு வெவ்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி சுசந்த ரத்நாயக்க தெரிவித்தார். 
 
2014 – 15 ஆம் நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்கான நிதி பெறுபேறுகளை வெளியிட்டு கருத்து தெரிவிக்கும் போது ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். இந்த சட்டத்தின் காரணமாக குழுமத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் நாம் விரைவில் ஆராயவுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
 
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் 3.68 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த பெறுமதி 39 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
வருமானம் 22.16 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 6 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X