
-ச.சேகர்
கொழும்பு பங்குச்சந்தை கடந்த வாரம் சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. தொடர்ச்சியாக உயர்வான பெறுமதிகளை பதிவு செய்து வந்த பங்குச்சந்தை கடந்த வாரம், முதலீட்டாளர்களின் இலாபமீட்டும் செயறபாடுகளின் காரணமாக மறை பெறுமதியில் பெரும்பாலும் நிறைவடைந்திருந்தது. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,401.62 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 4127.26 ஆகவும் பதிவாகியிருந்தன.
நவம்பர் 17ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 11,930,467,294 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 64,747 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 62,510 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,237 ஆகவும் பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
சுட்டிகள் நேர்பெறுமதிகளை பதிவுசெய்திருந்தன. இதில் டயலொக் ஆக்சியாடா, அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் கார்சன் கம்பர்பட்ச் ஆகியன பங்களிப்பை வழங்கியிருந்தன. புரள்வு பெறுமதி 2.4 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு டயலொக் ஆக்சியாடா, சன்ஷைன் ஹோல்டிங்ஸ், செலான் வங்கி, சிலோன் கர்ர்டியன் இன்வெஸ்ட்மன்ட் ட்ரஸ்ட், சென்ரல் ஃபினான்ஸ் மற்றும் பிரமல் கிளாஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பான் ஏசியா பவர், சியெர்ரா கேபிள்ஸ் மற்றும் ரேணுகா அக்ரி ஃபுட்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், யூனியன் வங்கி மற்றும் பீபள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மீது பதிவாகியிருந்தது.
செவ்வாய்க்கிழமை
டயலொக் ஆக்சியாடா, அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகளின் மீது விலை உயர்வு பதிவாகியிருந்ததை தொடர்ந்து சுட்டிகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 3.8 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், செலான் வங்கி, சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் போன்றவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஏசியா அசெட் ஃபினான்ஸ், சியெரா கேபிள்ஸ் மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு என்பது மிலேனியம் ஹவுசிங் டிவலப்பர்ஸ், செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் டயலொக் அக்சியாடா மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.
புதன்கிழமை
கார்சன் கம்பர்பட்ச், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் மீது விலைச்சரிவுகள் பதிவாகியதன் காரணமாக சுட்டிகள் மறைப்பெறுமதிகளுடன் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 1.8 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், களனி டயர்ஸ், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் லிமிடெட் மற்றும் டோக்கியோ சீமெந்து வாக்குரிமையற்ற பங்குகள் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஏசியா அசெட்ஃபினான்ஸ், சியெர்ரா கேபிள்ஸ் மற்றும் பிரமல் கிளாஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தன. மேலும், கலப்பு ஈடுபாடு என்பது வலிபல் பவர் எரத்ன மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் தேறிய கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர்.
வியாழக்கிழமை
நெஸ்லே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 1.6 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சம்பத் வங்கி, ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் வலிபல் வன் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ், சியெர்ரா கேபிள்ஸ் மற்றும் ரேணுகா அக்ரி பூட்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. பிரமல் கிளாஸ், டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி மற்றும் பீபிள்ஸ் லீசங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. இதேவேளை, வெளிநாட்டவர்கள் நிகர கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை
டயலொக் ஆக்சியாடா, நெஸ்லே லங்கா மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் விலைகள் சரிவடைந்ததன் காரணமாக, சுட்டிகள் மறைபெறுமதியை பதிவு செய்திருந்தன. புரள்வு பெறுமதி 2.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு லோஃவ்ஸ் காஸ், ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு என்பது வலிபல் பவர் எரத்னா, எஃவ்எல்சி ஹோல்டிங்ஸ் மற்றும் ரேணுகா அக்ரி பூட்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. லங்கா ஐஓசி, டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா மற்றும் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. இதேவேளை, வெளிநாட்டவர்கள் அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது அதிக நாட்டம் செலுத்தியிருந்தனர்.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சியெரா கேபளிஸ், செலின்சிங், அக்ஸ்டார் பிஎல்சி, மேர்க்.சிப்பிங் மற்றும் சென்ரல் இன்டஸ். போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
பீசி ஹவுஸ், சீகிரியா விலேஜ், கொலம்போ லான்ட், சொஃப்ட்லொஜிக் மற்றும் பீசி பார்மா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 43,900 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 45,700 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.53 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 208.77 ஆக காணப்பட்டிருந்தது.