2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய டெட்டோல்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 25 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


குடும்பத்தின் நம்பிக்கையை வென்ற பாதுகாப்பு நாமமான டெட்டோல், நடப்பு ஆண்டில் 32500 பாடசாலை மாணவர்கள், 35000 புதிய தாய்மார்கள், 2100 தாதியர்கள் மற்றும் 1500 உணவு கையாள்வோருக்கு ஆரோக்கியம் மற்றும் தூய்மையான செயற்பாடுகள் ஆகியவற்றை தனது ஆரோக்கியத்துக்கான செயற்திட்டத்தினூடாக வழங்கியிருந்தது. டெட்டோலின் சுகாதார விழிப்புணர்வு செயற்திட்டம் ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகியிருந்தது. சுகாதார அமைச்சின் அதிகாரிகள், நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் பங்கேற்ற நடை பயணத்துடன் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் நோக்கம், கிருமிகளிலிருந்து விடுபட்ட தேசத்தை கட்டியெழுப்பும் வகையில் அமைந்திருந்தது.  

    இலங்கை பாடசாலை மாணவர்கள் மத்தியில் கைகளை கழுவுவதன் முக்கியத்துவம் தொடர்பிலான டெட்டோலின் அர்ப்பணிப்பு அடிப்படையில் கொழும்பு மற்றும் அனுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த 32500 பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சிறுவர்கள் ஆக்கபூர்வமான விளையாட்டுக்கள் மற்றும் இதர கல்வி சார் திட்டங்களில் பங்கேற்றிருந்தனர். கைகளை கழுவுதல் தொடர்பில் முறையாக பயில்வதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோர் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

    டெட்டோலின் பாடசாலை கைகளை கழுவும் திட்டம் என்பது விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை சாரணர் சம்மேளனத்தின் கொழும்பு மாவட்ட கிளை உடன் இணைந்து புத்தமைவான சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை பாடசாலை மாணவர்கள் மத்தியில் முன்னெடுத்திருந்தது. சுகாதார விழிப்புணர்வு திட்டம் மாதம்பே நகரில் இடம்பெற்ற சர்வதேச ஜம்போரேயில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கையின் சகல மாகாணங்களையும் சேர்ந்த 3500க்கும் அதிகமான சாரணர்கள் வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோர் சிறந்த சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு 'டெட்டோல் தூய வீரர்கள்' எனும் தலைப்பில் விருதுகளையும் வழங்கியிருந்தது. புதிய 'டெட்டோல் தூய்மை வீரர் தூதுவர்கள்' தூய்மையான கரங்கள் பற்றிய செய்தியை தமது பாடசாலைகளில் பயிலும் ஏனைய மாணவர்களுக்கும் சென்றடையும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். அவர்கள் குறித்த செய்தியை எந்தளவு சக மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்தனர் என்பதை பொறுத்து குறித்த மாணவர்களுக்கு தங்க, வெள்ளி அல்லது வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.  

பிராந்திய சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து 35000க்கும் மேற்பட்ட புதிய தாய்மார்களுக்கு தரவுகள், புள்ளிவிபரங்கள் போன்றன வழங்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் தமது புதிதாக பிறந்த குழந்தைகளை கிருமிகள் மற்றும் தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். மேல், வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த 2100 மருத்துவிச்சிகளுக்கு பாதுகாப்பு மற்றும் தூய்மையான நுட்ப முறைகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த திட்டம் வடக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாணகாணங்களுக்கு 2015இல் விஸ்தரிக்கப்படவுள்ளது. 

    'நாளாந்த பாதுகாப்பு' எனும் உறுதி மொழிக்கமைவாக, டெட்டோல் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி தன்சல் ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து தூய்மை தீர்வுகளை வழங்கியிருந்தது. குறிப்பாக தன்சல் விருந்தினர்களுக்கான கைகளை கழுவும் வசதிகள் போன்றன டெட்டோல் மூலமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் காணப்படும் அதியுயர் தரப்படுத்தலை பெற்ற தன்சல் நிகழ்வாக அமைந்துள்ளது. நாளொன்றுக்கு 15000க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இலங்கையர்களுக்கு தூய்மை தொடர்பில் மிகவும் சக்திவாய்ந்த செய்தியை வழங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. 

சுகாதாரத்துக்கான செயற்திட்டம் தொடர்பில், டெட்டோல் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து மேல் மாகாணத்தைச் சேர்ந்த 300 உணவகங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட உணவு கையாளும் நபர்களுக்கு தமது கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. டெட்டோல் போன்ற தொற்றுநீக்கி ஒன்றைக் கொண்டு கைகளை கழுவுவது என்பது நோய் பரவுவதை தவிர்க்கும் வகையில் அமைந்திருக்கும். 

ரெட்கிட் பென்கீசர் நிறுவனத்தின் வணிக பணிப்பாளர் சின்கிளெயார் குரூஸ் கருத்து தெரிவிக்கையில், 'உறுதிமொழிக்கமைவாக, டெட்டோல் என்பது 2014 இல் தனது இலக்கை எய்த முடிந்தது. சுகாதார அமைச்சு போன்ற முக்கிய பங்காளர்களின் பங்களிப்பின்றி இந்த இலக்கை எய்த முடியாது. 2015 இல், நாம் வெற்றிகரமாக இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்து இலங்கையின் மேலும் பல மக்களை சென்றடைய திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X