2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சேமிப்புத் கணக்குக்கு அமானா தகாஃபுல்லின் காப்புறுதி வசதி

A.P.Mathan   / 2015 ஜனவரி 05 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இலக்கு நிர்ணயிக்கப்படும் ஒரு சேமிப்புத் தொகையை அடைந்துக்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு துணைபுரியக்கூடிய பிரத்தியேக சேமிப்புத் திட்டமான சேமிப்புத் திட்டக் கணக்கை அமானா வங்கி அண்மையில் ஆரம்பித்தது. இதன் பிரதான சிறப்பம்சம் யாதெனில், இலக்கு வைக்கப்படும் சேமிப்புத் தொகையுடன் பொருந்தக்கூடியவாறு அமானா தகாஃபுல் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஆயுள் மற்றும் அங்கவீன காப்பீட்டை உள்ளடக்கியிருப்பதாகும். சேமிப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை இலவசமாக வழங்கப்படும் அதேவேளை, அமானா வங்கி இந்த காப்பீடு மீதான கட்டணச் செலவினத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. 

வாடிக்கையாளர் மேற்கொள்ளும் சேமிப்பின் நோக்கம் எதிர்பாராத நிகழ்வொன்றின் போதும்கூட நிறைவேற்றப்படலாம் என்பது இந்தக் காப்புறுதிச் சேவையின் பிரதான இலக்காகும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் வாடிக்கையாளரினால் நியமிக்கப்படுபவர் ஆயுள் தகாஃபுல் காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வார். இந்த தொகையானது இலக்கு வைக்கப்படும் சேமிப்புத் தொகைக்கு சமனான தொகையாக அமையும் (அதிகபட்சம் 1 மில்லியன் வரை) என்பதோடு, அவர்களின் சேமிப்புத் திட்டக் கணக்கில் உள்ள திரட்டப்பட்ட நிலுவையையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சேவையை வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை அண்மையில் அமானா வங்கிக்கும், அமானா தகாஃபுல் நிறுவனத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு வங்கியின் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முஹம்மத் அஸ்மீர் மற்றும் அமானா தகாஃபுல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரெயாஸ் ஜெப்ரி ஆகியோருடன் இரண்டு நிறுவனங்களினதும் சிரேஷ;ட முகமையாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள். 

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட திரு. முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ' எமது சேமிப்புத் திட்டத்திற்கு இந்த பிரத்தியேக காப்பீட்டு சேவையை பெற்றுக் கொடுப்பதில் அமானா தகாஃபுல்லின் சேவையை அடைந்து கொள்வதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். எமது உற்பத்தி நோக்கத்துடன் இந்த சிறப்பம்சம் மிகவும் ஒத்துப் போகின்றது' என்று குறிப்பிட்டார். 

தனது கருத்தை பகிர்ந்து கொண்ட திரு. ரெயாஸ் ஜெப்ரி அவர்கள் ' அமானா வங்கியின் சேமிப்புத் திட்டம் அர்த்தமுள்ள நன்மைகளை உள்ளடக்கிய ஒரு முன்மாதிரி நிதி உற்பத்தியாகும். வாடிக்கையாளர்களை உயர்ந்தபட்ச பயனாளிகளாக மாற்றியமைக்கும் வகையில் இந்த தகாஃபுல் சேவையை வழங்குவதற்காக அமானா வங்கியுடன் இணைந்து தொழிற்படுவதை நாம் பெறுமையாகக் கருதுகின்றோம்' என்று தெரிவித்தார். 

அமானா சேமிப்புத் திட்டம் பிள்ளைகளின் உயர் கல்வி, திருமணம் அல்லது வேறு எதிர்கால நிதித் தேவைகளுக்காக சேமித்தல் போன்ற எதிர்காலத்திற்கான சேமிப்புப் பழக்கமொன்றை விருத்தி செய்வதற்கு துணைபுரியும் ஒரு முன்மாதிரித் திட்டமாக விளங்குகின்றது. 18 வயதிற்கு மேற்பட்ட தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் எவரும் இந்த சேமிப்புத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். குறைந்தபட்ச இலக்கு சேமிப்புத் தொகை 100,000 ரூபா மற்றும் அதிகபட்ச சேமிப்பு இலக்குத் தொகை 5,000,000 ரூபாவாகும். மாதாந்த தவணைக் கொடுப்பனவை 1,666 ரூபாவிலிருந்து செலுத்தலாம். சேமிப்பு முதிர்ச்சிக் காலம் 1 வருடம் முதல் 5 வருடங்களாகும். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X