2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தங்க விருது பெற்ற கொமர்ஷல் கிரெடிட்

A.P.Mathan   / 2015 ஜனவரி 23 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இடம்பெற்ற 'தேசிய வர்த்தக சிறப்புத்துவ விருதுகள் 2014' (National Business Excellence Awards 2014) நிகழ்வில் கொமர்ஷல் கிரெடிட் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது வங்கியல்லாத மற்றும் நிதித்துறை பிரிவில் தங்க விருதை தட்டிச் சென்றுள்ளது.  

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வர்த்தக சிறப்புத்துவ விருதுகள் 2014 ஆனது - கூட்டாண்மை ஆளுகை, கொள்ளளவை கட்டி எழுப்புதல், தொழிற்பாட்டு முகாமைத்துவம், உலகளாவிய மற்றும் உள்நாட்டு சந்தையை அடைந்து கொள்ளல், கூட்டாண்மை சமூகப் பொறுப்பு மற்றும் சூழல் நிலைபேண்தன்மை, அத்துடன் வணிக மற்றும் நிதியியல் பெறுபேறுகள் போன்ற பல்வேறுபட்ட முக்கியமான வணிக அம்சங்களில் அனைத்து விதத்திலும் மிகச் சிறப்பாக செயலாற்றுகின்ற நிறுவனங்களை அங்கீகரித்து, வெகுமதியளிக்கும்  ஒரு நிகழ்வாக அமைகின்றது. 

'எமது வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களுக்கும் மிகச் சிறந்தவற்றை வழங்குவதற்காக தொடர்ச்சியாக எடுத்துவரும் முன்முயற்சிகள் மற்றும் அதனோடிணைந்த எமது மிகச் சிறப்பான தொழிற்பாடு போன்றவற்றின் வெற்றிக்கு கிடைக்கப் பெற்ற மற்றுமொரு மேலொப்பமாக இந்த அங்கீகாரம் காணப்படுகின்றது. அர்ப்பணிப்புமிக்க எமது அணியினர் சார்பாகவும் இலங்கை முழுவதிலும் உள்ள எமது பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சார்பிலும் இவ்விருதை பெற்றுக் கொள்வதையிட்டு நாம் புளகாங்கிதம் அடைகின்றோம். நாம் எமது கூட்டாண்மை தலைமைத்துவத்தை இலங்கை முழுவதும் பரவலடையச் செய்து கொண்டிருக்கும் நிலையில், எமது தியாகப் பயணத்தையும் அதேபோன்று அர்ப்பணிப்பு சார்ந்த ஆழமான உணர்வுடனான முன்னகர்வையும் எதிர்வரும் வருடத்திற்குள் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு இந்த தங்க விருது எமக்கு ஊக்கமளிக்கின்றது' என்று கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. ரொஷான் எகொடகே தெரிவித்தார். 

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்ட முன்னணி நிதியியல் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் கொமர்ஷல் கிரெடிட் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி. ஆனது – 'பூகோள வங்கியியல் மற்றும் நிதி மீள்நோக்கு விருதுகள்', அத்தோடு 'உலக வர்த்தக குறியீட்டு சிறப்புத்துவ விருதுகள்' ஆகியவற்றில் வெற்றிவாகை சூடி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுக் கொண்டதன் மூலம் அண்மைக் காலமாக வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இது, நாடெங்கும் வாழும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை தொட்டுள்ள அதேநேரம் தனிச் சிறப்புமிக்க வர்த்தக குறியீட்டிலான சேவையின் ஊடாக அவர்களது வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்கதொரு மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X