2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'இரசக் கிண்ணத்தை' வடிவமைத்த நொரிடேக் லங்கா

A.P.Mathan   / 2015 ஜனவரி 26 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகைதந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் விஜயத்திற்கான இரசக் கிண்ணத்தை (Communion Bowls) வடிவமைப்புச் செய்யும் தனிச்சிறப்புமிக்க கௌரவத்தை நொரிடேக் லங்கா போர்சிலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது. 

பிரகாசமான வெள்ளை நிறத்தில் போர்சிலைன் இனால் உருவாக்கப்பட்ட வட்ட வடிவ கிண்ணமானது 224.8 சென்ரிமீற்றர் விட்டத்தையும், 76.8 சென்ரிமீற்றர் உயரத்தையும் 682 கிராம் நிறையையும் கொண்டதாக காணப்பட்டது. இக் கிண்ணம் இலங்கையிலிருந்து பெறப்பட்ட 60% போர்சிலைன் மற்றும் 40% இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. 'அருட்திரு ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்தல் 14, ஜனவரி 2015' என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கிண்ணங்களை அலங்கரிப்பதற்காக 24 கரட் தங்கம், ஈயம் மற்றும் கட்மியம் நீக்கப்பட்ட நிறமூட்டிகள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இலங்கைக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் போது போப்பாண்டவர் நடாத்திய புனித திருப்பலி பூஜைகளில் இந்தக் கிண்ணங்கள் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்தன.  மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட 1300 கிண்ணங்களில் ஒரு கிண்ணத்தை பரிசுத்த பாப்பரசர் திருவிருந்து (Holy Communion) நிகழ்வின் போது பயன்படுத்தினார். ஏனையவற்றை கத்தோலிக்க மதகுருமார் பயன்படுத்தினார்கள். 

நொரிடேக் லங்கா போர்சிலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) நிறுவனத்தின் பிரதித் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான யொசினரி சிமாயா கூறுகையில், 'இவ் விஷேட இரசக் கிண்ணத்தை உற்பத்தி செய்வதற்காக எமது நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதையிட்டு நாம் மிகுந்த பெருமிதமும் புளகாங்கிதமும் அடைகின்றோம். இதற்கான 'வடிவமைப்பு மீளாய்வு' தொடர்பில் கொழும்பு மறைமாவட்டம் மற்றும் எமது நிறுவன அணியினருக்கு இடையில் கடந்த சில மாதங்களாக விபரங்கள் அடங்கிய மற்றும் பரந்தளவான பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. புனித இரசக் கிண்ணத்தின் கலைத்துவம் மற்றும் தொழில்நுட்பம்சார் அம்சங்கள் தொடர்பானவையாக இக் கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன. இந்த இறுதி உற்பத்தியானது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றது. அனுபவமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள எமது ஆளணியினரின் உயர்தரமிக்க பணிக்கு கிடைத்திருக்கின்ற ஒரு நற்சான்றுபடுத்தலாக இது காணப்படுகின்றது' என்று தெரிவித்தார். 
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்கள் விஜயம் செய்த இரண்டாவது ஆசிய நாடாகவும், அத்துடன் அவர் இவ்வாறான திருத்துவ யாத்திரை மேற்கொண்ட முதலாவது ஆசிய நாடாகவும் இலங்கை திகழ்கின்றது. அருட்திரு ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்துவதற்காக பரிசுத்த தந்தை அவர்கள், ஜனவரி 13ஆம் திகதி செவ்வாய்;க் கிழமை இலங்கைக்கு வருகை தந்தார். 

காலிமுகத்திடலில் இடம்பெற்ற புனித திருப்பலி பூஜையில் அதிகளவிலான கார்டினால்கள், ஆயர்கள் மற்றும் மதருருமார் கலந்துகொண்டனர். இத் திருப்பலி பூஜை நிகழ்வில் 1500 அதிமுக்கிய பிரமுகர்கள், கிட்டத்தட்ட 500 நோயுற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளான நபர்களும் கலந்து கொண்டனர். அதேவேளை, இந்தியாவின் கோவாவில் இருந்து வருகை தந்திருந்த பெருமளவிலான ஆயர்கள், கத்தோலிக்க மதகுருமார் மற்றும் பொதுமக்கள் போன்றோரும் இதில் பங்கேற்றனர். 

தர்மபால மாவத்தை மற்றும் சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஆகியவை சந்திக்கும் இடத்தில் (அதாவது பித்தள சந்தி என்று பரவலாக அறியப்பட்ட இடத்தில்) 10,000 சதுர அடி பரப்பளவில் உபாய ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்த முதன்மை விற்பனை நிலையம் மூன்று மாடிகளை கொண்டிருக்கின்ற அதேவேளை, அவ்விடத்திலிருந்து அதனை தெளிவாக பார்க்கக் கூடியதாகவும் இருக்கின்றது. 

நொரிடேக் லங்கா போர்சிலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) தனக்குத் தேவையான 35% உள்ளீடுகளை தற்போது இலங்கையிலிருந்தே பெற்றுக் கொள்கின்றது. இந்நிறுவனத்தின் மாத்தளையில் அமைந்திருக்கும் தொழிற்சாலை உலகிலேயே மிகப் பெரிய உற்பத்தியாக்கல் வசதிகளுள் ஒன்றாக காணப்படுகின்றது. இத் தொழிற்சாலை நொரிடேக் வர்த்தக குறியீட்டின் கீழ் உயர்தரமான மேசைப் பாத்திரங்களை உற்பத்தி செய்கின்றது. உள்நாட்டில் பெற்றுக் கொள்ளப்படும் உள்ளீடுகளுள் - கண்டிக்கு அப்பாலுள்ள கலஹா பிரதேசத்திலிருந்து பெறப்படும் படிகக்கல், ரத்தோட்டைக்கு அருகிலுள்ள ஓவல பிரதேசத்தில் இருந்து பெறப்படும் 'பெல்ட்ஸ்பார்' மற்றும் கண்டிக்கு அருகிலுள்ள திகன பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெறும் 'டொலமைற்' மற்றும் பலாங்கொடையில் இருந்து பெறப்படும் 'கல்சைட்' போன்றவை உள்ளடங்குகின்றன. 

நொரிடேக் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 80% உள்நாட்டு உற்பத்திகள் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் உள்ள முக்கியமான சந்தைகள் பலவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இவ்வாறான சந்தைகளுள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, மெக்ஸிகோ மற்றும் கொரியா போன்றவையும் உள்ளடங்கும். மீதமுள்ள 20% உற்பத்திகளும் கிருலப்பனை, வத்தளை, மாத்தளை, பன்னல மற்றும் பண்டாரநாயக்க விமான நிலையம் ஆகிய இடங்களிலுள்ள காட்சியறைகள் ஊடாக உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படுகின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X