2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தங்க விருதை வென்ற லங்காசோய்

A.P.Mathan   / 2015 ஜனவரி 26 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனத்தின் துணை நிறுவனமான கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ்(லங்கா) பிஎல்சி நிறுவனத்தின் முன்னணி வர்த்தகநாமமான லங்காசோய், இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் மூலம் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் உற்பத்தி (உணவு மற்றும் குடிபானம்) பிரிவில் தங்க விருதை தனதாக்கிக் கொண்டது.

தொழிற்துறையில் 25 ஆண்டுகளாக இருக்கும் லங்காசோய், சோயா உணவுத் துறையில் முன்னோடியாகவும், சந்தை தலைமைத்துவத்தையும் கொண்டுள்ளது. சந்தையில் புதிதாக நுழையும் நேரத்தில் சோயா உற்பத்திகளுக்கான தர நிர்ணயங்கள் மிக அரிதாக காணப்பட்டதுடன், உள்நாட்டில் SLS தரத்தை பெற்ற முதல் நிறுவனமாக இந் நிறுவனம் திகழ்கிறது. ஆரம்பத்தில் கைகளினால் செயல்பாடுகளை முன்னெடுத்த இந் நிறுவனம் படிப்படியாக அதன் செயல்பாடுகளை தன்னியக்க முறைக்கு மாற்றிக்கொண்டது. உயர் தரம் வாய்ந்த உற்பத்தி எனும் அதன் நிலையை மேலும் உறுதி செய்து வருகிறது. இதன் உற்பத்தி செயல்பாடுகள் ISO 9001:2008, ISO 22000:2005, GMP, HACCP சான்றிதழ்களை பெற்றுள்ளது.

புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய சுவைகள் மற்றும் வடிவங்களை அறிமுகம் செய்து புத்துருவாக்கம் மற்றும் தலைமைத்துவம் ஊடாக லங்காசோய் தொடர்ந்து தொழிற்துறையில் தரத்தினை உறுதி செய்து வருகிறது. வாடிக்கையாளர்களின் சௌகரியம் கருதி உணவு தயாரிப்பதற்கு முன்னர் நீரில் ஊறவைப்பதற்கு அவசியமில்லாத வகையில் லங்காசோய் PACK TO PAN எனும் புதுமையான தயாரிப்பினை அறிமுகம் செய்திருந்தது.

இலங்கையின் சோயா சந்தையில் இந் நிறுவனம் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிறுவனம் தற்போது அதன் உற்பத்திகளை பிரதானமாக பன்முக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதுடன், எதிர்காலத்தில் சர்வதேச சந்தைகளிலும் அதன் உற்பத்திகளை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளது.

பன்முக மரபினை தொடர்ச்சியாக பேணும் லங்காசோய் உள்நாட்டு மூலப்பொருட்களை பயன்படுத்தி ஐந்து சுவைகளினாலான ஆரோக்கியமான பேக் செய்யப்பட்ட சிற்றுண்டியாக ரம்பா எனும் தயாரிப்பினை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. கடந்த பல ஆண்டுகளாக சந்தை மற்றும் கூட்டாண்மை கலாச்சாரத்தை நோக்கிய அதன் புத்துருவாக்க அணுகுமுறையே அதன் வெற்றிக்கு காரணம் என இந் நிறுவனம் குறிப்பிடுகிறது.

'வாடிக்கையாளருக்கு மதிப்பு சேர்ப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். எமது தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி செயல்பாடு காரணமாக சந்தையில் புதிய சோயா தயாரிப்புகளை அறிமுகம் செய்ய எம்மால் முடிந்துள்ளது' என கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ்(லங்கா) பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திலங்க டி சொய்சா தெரிவித்தார்.

லங்காசோய் தொழிற்சாலை ஊழியர்கள் சூழல் நிலையாண்மைக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலும், தரமான உற்பத்திகளை வழங்கும் வகையிலும் குறைந்த சக்தி மற்றும் விரயம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சிறந்த உற்பத்திச் செயல்முறைகளை கையாண்டு வருகின்றனர். இந் நிறுவனம் அதன் ஊழியர்கள் மத்தியில் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் விரயத்தை குறைத்தல் எவ்வாறு என்பது தொடர்பில் தமது ஆலோசனைகளை தெரிவிப்பதை ஊக்குவித்து வருவதுடன், அவற்றில் பெரும்பாலான ஆலோசனைகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த மிகச்சிறப்பான கூட்டாண்மை கலாச்சாரம் நிறுவனம் அதியுயர் இலாபம் மற்றும் வருவாய் ஈட்ட உறுதுணையாக இருந்துள்ளது.

தலைமைத்துவம், கூட்டாண்மை நிர்வாகம், திறன் கட்டியெழுப்பல், செயற்திறன் முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை அடைவு, கூட்டாண்மை சமூக பொறுப்பு, வணிகம் மற்றும் நிதிசார் முடிவுகள் போன்ற ஏழு அம்சங்களின் அடிப்படையில் தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.  

லங்காசோய் வர்த்தகநாமம் அதன் வணிக செயற்திறனுக்கு அங்கீகாரமாக 2013 SLIM வருடத்திற்கான சிறந்த வர்த்தகநாமம் உட்பட பல்வேறு விருதுகளை வென்றெடுத்துள்ளது.

லங்காசோய் தயாரிப்பில் புரதம் அதிகளவு நிறைந்துள்ளதுடன், கொழுப்பு சத்து உள்ளடக்கப்பட்டில்லை. மரபணு சாராத கொழுப்பு நீக்கிய சோயா மா பயன்படுத்தி லங்காசோய் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X