2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

RUNN உள்ளாடைகளுக்காக இலங்கையின் முதலாவது 'தொலைதூர ஒளிப்பதிவு'

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளராக திகழும் எமரெல்ட் ஆனது, படைப்பாக்க முகவரகமான அசென்ஷல் நிறுவனத்துடன் அண்மையில் ஒன்றிணைந்துள்ளது. தனது RUNN எனும் உள்ளாடை வர்த்தக குறியீட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள முன்மாதிரியான தொலைக்காட்சி விளம்பரத்தின் (TVC) மூலம் அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிவதுடன், விளம்பரப்படுத்தலை புதிய எல்லைக் கோடுகளுக்கு கொண்டு செல்வதற்காகவே இந்த ஒன்றிணைவு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் ஊடாக வெளியிடப்பட்ட We Get Our Guys என்ற விளம்பரத்தில் தரிந்து விஜேசேகர (அக 'கப்பிய') தோன்றியிருப்பதுடன் தொடர்ச்சியாக 'யூடியூப்' இணையத்தளத்தில் பரபரப்பாக கண்டுகளிக்கப்படுவதாகவும் இது மாறியுள்ளது. RUNN வர்த்தக குறியீட்டின் உத்தியோகபூர்வ 'பேஸ்புக்' பக்கத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற புள்ளிவிபர தரவுகளின் அடிப்படையில், முதல் ஒரு வார காலப்பகுதியில் இவ்விளம்பரம் ஒட்டுமொத்தமாக 60,000 இற்கும் அதிகமான தடவைகள் கண்டுகளிக்கப்பட்டுள்ளமை புலனாகின்றது. இந்த தொலைக்காட்சி விளம்பரம் மிக அதிகமானளவுக்கு மக்களிடையே பரப்பப்பட்டிருப்பதுடன், 'ஸ்கிறீன்சொட்களை' பயன்படுத்தி நினைவுக்குறிப்புக்களை உருவாக்கி ஒன்லைனில் இணைந்துள்ள நண்பர்களுடன் அவற்றை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

எமரெல்ட் இனால் உற்பத்தி செய்யப்பட்டு, ரூபா 275 தொடக்கம் விலையிடப்பட்டுள்ள RUNN வர்த்தக குறியீட்டிலான உள்ளாடைகள் இலங்கை ஆண்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டவையாகும். இவ்வுற்பத்திகள் Boxer, Brief மற்றும் Vest என பல்வேறு வகைகளில் சந்தைக்கு வந்துள்ளன. ஒரு பெட்டியில் இரு உற்பத்திகளை உள்ளடக்கிய பொதிகளும் இதில் உள்ளடங்குகின்றது. ஒரு Boxer மற்றும் ஒரு Brief ஆகியவற்றின் ஒன்றுகலந்த தோற்றப்பாட்டைக் கொண்ட Exposed Elastic Brief போன்ற புதுமையான மாதிரிகளையும் RUNN கொண்டிருக்கின்றது. Brief வடிவமைப்பிற்குள் வெளித்தெரியும் இலாஸ்டிக் Boxer உள்ளாடையும் கலந்த ஒரு உற்பத்தியாக இது காணப்படுகின்றது. அதனது போட்டி உற்பத்திகளைப் போலன்றி இலங்கையரின் உடலமைப்பை கருத்திற் கொண்டு இவ்வுற்பத்தி விஷேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. RUNN உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் துணியானது அதனது போட்டி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் துணியின் தரத்திற்கு இணையானது. சில வேளைகளில் போட்டியாளர்களை விட மிகச் சிறந்த தரமான துணி வகைகளும் பயன்படுத்தப்படுகின்றது. 

'ஒரு பிரசார விளம்பரத்தை உருவாக்குவதற்காக எமரெல்ட் எம்மை அணுகியபோது RUNN உற்பத்திகள் ஏற்கனவே சந்தையில் ஒரு வருடத்திற்கு மேலாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. RUNN என்பது இலங்கையரினால் இலங்கையருக்காக தயாரிக்கப்பட்டது என்பதையும், அது வாடிக்கையாளரின் விருப்பத்தை மிகச் சரியாக விளங்கிக் கொண்ட ஒரு வர்த்தகக் குறியீடு என்ற விடயத்தையும் தெரியப்படுத்த வேண்டிய தேவை எமக்கிருந்தது. இவை அனைத்தையும் மிகக் குறைந்த நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டியிருந்தது' என்று அசென்ஷல் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் படைப்பாக்க பிரிவு தலைமை அதிகாரியுமான சவீன் பண்டாரநாயக்க தெரிவித்தார். 

'இணைய இணைப்பற்ற 'ஓஃப்லைனில்' உயர்ந்தபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் 'ஒன்லைனில்' மிக அதிகமாக பரப்பப்படக் கூடிய வகையிலும் நாம் இந்த வர்த்தக விளம்பரத்தை வெளியிட்டோம். வழக்கத்திற்கு மாறான வழிமுறைகளை நாம் இதில் உள்ளடக்கி இருந்தோம். இலக்கு வாடிக்கையாளர் பிரிவினரிடையே அதிர்வலைகளை உண்டாக்கக் கூடிய ஊடகம் ஒன்றின் ஊடாக இச் செய்தியை பரப்பும் தேவையும், அதேபோல் உடனடியாகவே அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய பிரபலமான ஒரு ஆளுமையை இதற்காக பயன்படுத்த வேண்டிய அவசியமும் எமக்கு இருந்தது' என்று அசென்ஷல் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் படைப்பாக்க பணிப்பாளர் சஷீன் வீரதுங்க குறிப்பிட்டார். 

எமரெல்ட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரியான செல்வி. கிஷானி தஹநாயக்க கூறுகையில், 'மிகப் பெரிய பிரசார நோக்கத்திற்காக எமது விளம்பரத்தைப் போன்றதொரு தொலைக்காட்சி விளம்பரத்தை தொலைவியக்க கட்டுப்பாட்டு முறைமையின் மூலம் தயாரிப்பது என்பது துணிச்சலானதும் அபாயகரமானதுமான ஒரு செயற்பாடாகும். புதியவை, தனிச்சிறப்பு வாய்ந்தவற்றுக்கு இடமளிப்பதன் ஊடாகவும் அதேபோல் புரட்சிகர மாற்றங்கள் இடம்பெறும் நேரங்களிலும் புத்தாக்கத்தை கையாள்வதில் முன்னோடியாக திகழும் ஒரு கம்பனி என்ற வகையில், சவீன் பண்டாரநாயக்கவிலும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தூரநோக்குள்ள அவரது அணியினரிலும் நாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றோம். இறுதிப் பலாபலனானது எமது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் விஞ்சியதாக காணப்பட்டது. உலகெங்கும் இருந்து இவ் விளம்பரம் தொடர்பில் தொடர்ச்சியாக பிரதிபலிப்புக்களை நாம் பெற்று வருகின்றோம். அவை மிகவும் சாதகமானவையாகவும் மிக ஊக்கமளிப்பதாகவும் இருக்கின்றன. அசென்ஷல் நிறுவனம் RUNN வர்த்தக குறியீடு மற்றும் 'We Get Our Guys' விளம்பரம் ஆகியவற்றுடன் முன்மாதிரி வழிமுறை ஒன்றை முன்னெடுப்பதையிட்டும், புதுமை மற்றும் புத்தாக்க விடயத்தில் முன்னோக்கி பயணிப்பதையிட்டும் நாம் பெருமிதம் அடைகின்றோம்' என்று தெரிவித்தார். 

தரிந்து விஜேசேகர அவுஸ்திரேலியாவில் இருந்த நிலையில், கண்டங்கள் கடந்து - அதாவது சிட்னி மற்றும் கொழும்பு நகரங்களை ஒன்றிணைத்து இவ்விளம்பரம் முழுமையாக காட்சியுருவாக மாற்றப்பட்டது. இது ஒன்றுக்கொன்று தொலைதூரமான இடங்களில் இருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும் முழுக்க முழுக்க 'நேரடியான ஒளிப்பதிவு' போல மிக நேர்த்தியாக உள்ளது. இது இதற்கு முன்னர் ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டிராத ஒரு முயற்சியாகும். இதற்கு சரியான ஒருங்கிணைப்பு அவசியமாக இருந்ததுடன் ஒருசில நொடிப்பொழுதில் செய்து முடிக்க வேண்டியும் இருந்தது. விடய பதாகைகள் (Storyboards) மற்றும் எழுத்துப் பிரதிகள் (Scripts) என்பன இணையத்தின் ஊடாக இரு நகரங்களுக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. அதன்படி இந்த ஒளிப்பதிவு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமகாலத்தில் அச்செயற்பாட்டை அசென்ஷல் நிறுவனம் இலங்கையில் இருந்தவாறு 'ஸ்கைப்' மூலம் நெறியாள்கை செய்தது. 

'இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற நாட்டுப்பற்றுமிக்க மற்றும் உணர்ச்சிபூர்வமான பல விளம்பரங்கள், இலங்கையின் விளம்பரத் துறையானது நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளதை நிரூபிப்பதாக அமைகின்றன. எனவேதான், பார்வையாளர்கள் மத்தியில் எதிரொலிக்கும் விதமாகவும் அவர்களது நினைவில் நிற்கும் வகையிலும் இவ்வாறான அற்புதமான எண்ணங்களை வளர்த்துவிடும் வழிமுறை ஒன்றை நாம் கண்டறிந்தோம்' என்று அசென்ஷல் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம உபாய நிபுணருமான திரு. செந்தூரன் கற்பகநாதன் தெரிவித்தார். 

நேர்த்தியான தன்மைக்காக தொழில்நுட்ப தேவைப்பாடுகளை (ஒளியூட்டல், கோணங்கள், ஒத்திகைகள் போன்றவற்றை) ஒருங்கிணைக்கின்ற வேளையில் அசென்ஷல் அணியானது வேறுபட்ட நேர வலயங்களை மிகச் சிறப்பாக கையாண்டு வழிநடாத்தியது. இது மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும் நெகிழ்ச்சித் தன்மையுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்ற தொனிப்பொருளைக் கொண்டிருந்தமையால், உண்மையிலேயே முன்னர் திட்டமிடப்பட்டிருந்த ஒரு விளம்பரத்திற்கு பதிலாக மூன்று விளம்பரங்களை இந்த அணியானது ஒளிப்பதிவு செய்தது. 

இவ் விளம்பரம் தற்போது உள்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றது. அதேநேரம் http://on.fb.me/12Ht847 என்ற இணைய முகவரியில் காணப்படும் இவ்விளம்பரம் மிகவுன்னத வரவேற்பையும் பலரது கவனத்தையும் தம்பக்கம் ஈர்த்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X