Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து நவீன வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களையும் கொண்ட தனது பிரவுண்ஸ் வைத்தியசாலையை ராகமை பிரதேசத்தில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்ததன் மூலம், பிரவுண்ஸ் குழுமக் கம்பனிகள் இலங்கையின் சுகாதார பராமரிப்பு துறையை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது.
70 படுக்கைகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஒரு பொது வைத்தியசாலையான இது, மருத்துவ நோய் கண்டறிதல் துறையில் காணப்படுகின்ற அதிநவீன தொழில்நுட்ப வசதியை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அவ்வாறான வசதிகளுள் நவீன CT மற்றும் MRI ஸ்கேனிங் வசதி, முன்னேற்றகரமான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை தொழில்நுட்பம் போன்றவையும் உள்ளடங்குகின்றன.
2015 பெப்ரவரி 9ஆம் திகதி இடம்பெற்ற வைத்தியசாலையின் சம்பிரதாயபூர்வ திறப்புவிழா நிகழ்வில், சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் பிரவுண்ஸ் குழுமத்தின் நிறைவேற்று தலைவர் இஷார நாணயக்கார, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரவுண்ஸ் வைத்தியசாலை/சுகாதார பராமரிப்பு பிரிவு பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டாக்டர் சஜீவ நாரங்கொட, சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் மற்றும் டாக்டர்கள், மற்றும் பலர் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
ராகமை பிரவுண்ஸ் வைத்தியசாலையானது பிரவுண் அன்ட் கம்பனி பி.எல்.சி. நிறுவனத்தின் புதிய தொழில்முயற்சியாகும். பரந்தளவான, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நடைமுறை மற்றும் தனிப்பட்ட கவனிப்பு ஆகியவற்றின் ஊடாக உயர்தரமிக்க கவனிப்பு சேவையை ஒவ்வொரு நோயாளருக்கும் வழங்குவதை நோக்காகக் கொண்டியங்குகின்ற 'இரண்டாம்நிலை கவனிப்பு' வைத்தியசாலைகள் மற்றும் நோய்கண்டறிதல் நிலையங்களின் சங்கிலித்தொடரில் முதலாவது முயற்சியாக இவ் வைத்தியசாலை காணப்படுகின்றது.
ராகமை வீதியில் பல்வேறு வாய்ப்புக்கள் நிறைந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரவுண்ஸ் வைத்தியசாலை ராகமை போதனா வைத்தியசாலை மற்றும் ராகமை புகையிரத நிலையம் என்பவற்றுக்கு மிக அருகில் காணப்படுகின்றது. அனைத்து விதமான பொருளாதார மற்றும் சமூக பின்னணிகளையும் கொண்ட இலங்கை பிரஜைகளின் தேவைகளை நிவர்;த்தி செய்யும் சேவைகளை இது வழங்குகின்றது. பிரவுண்ஸ் குழுமத்தின் பலம்பொருந்திய மரபுரிமையை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இவ்வைத்தியசாலையானது, இலங்கையில் வாழும் கிராமப்புற, நகர்ப்புற மக்கள் அனைவருக்கும் பல்வகைப்பட்ட புத்தாக்க மற்றும் நோயாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்கும் பொருட்டு தனது கதவுகளை தற்போது திறந்துள்ளது.
அனைத்து நோய் பிரிவுகளிலும் உயர் தகைமைகளைக் கொண்ட, அங்கீகரிக்கப்பட்ட வருகைதரு வைத்திய நிபுணர்கள் மற்றும் உள்ளக வைத்தியர்களை ராகமை பிரவுண்ஸ் வைத்தியசாலை கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி மிகவும் அனுபவம் பெற்ற தாதியர்களின் சேவையும் இங்கு கிடைக்கின்றது. அரச மற்றும் தனியார் மருத்துவ துறைகளில் இருந்து வந்து இணைந்துகொண்ட தகுதியுள்ள தாதியர்களால் பிரவுண்ஸ் வைத்தியசாலையின் தாதியர் பராமரிப்பு சேவை பலப்படுத்தப்பட்டுள்ளது.
'நாம் சமூக ரீதியிலான அக்கறையுள்ள ஒரு சுகாதார பராமரிப்பு நிறுவனமாகும். நாம் சுகாதார பராமரிப்பு துறையிலேயே முற்றுமுழுதாக கவனம் செலுத்தும் அதேவேளை, அனைத்து இலங்கையர்களுக்குமான சுகாதார பராமரிப்பு சேவையின் முன்னேற்பாடுகளை மேம்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். தொடர்ச்சியாக பராமரிப்பு சேவையின் தராதரங்களை பேணுவதுடன் நோயாளரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கின்ற அதேநேரம் கிடைக்கக் கூடியதாகவுள்ள அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்ற எமது அக்கறையுள்ள சுகாதார பராமரிப்பு தொழில்வாண்மையாளர்களின் கூட்டிணைவுடன் ஒன்றிணைக்கப்பட்ட மருத்துவ நடைமுறைகளின் ஊடாக நாம் இந்த இலக்கை அடைந்து கொள்வோம்' என்று பிரவுண்ஸ் வைத்தியசாலை/சுகாதார பராமரிப்பு பிரிவின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டாக்டர் சஜீவ நாரங்கொட குறிப்பிட்டார்.
தரமான, பாதுகாப்பான மற்றும் கூடுமானவரை மிகச் சிறந்த சுகாதார பராமரிப்பு சேவைகள் கட்டுப்படியான விலையில் கிடைப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களை இவ் வைத்தியசாலையின் சேவைகள் சென்றடைவதற்கான மிக முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். மிகப் பிந்திய மற்றும் மிகவும் பொருத்தமான தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், உயர்தரமான நோயாளர் கவனிப்பு மற்றும் தரப்படுத்தப்பட்ட செயன்முறைகள் போன்றவை நோயாளர் ஒருவர் வைத்தியசாலையில் தங்கியிருக்கும் நேரத்தை குறைக்கின்ற அதேவேளை, நோயாளர்கள் வந்துபோகும் தன்மையை அதிகரிக்கும்.
இதற்கு மேலதிகமாக, நாட்டின் பல பாகங்களிலும் மிகவுயர்ந்த தரத்திலான நோய்கண்டறிதல் நிலையங்கள் நிறுவப்பட்டமையும் அதேபோல் இலகுவாக அவற்றை சென்றடைய முடிகின்றமையும், பல்வேறு தொற்றா நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிந்து கொள்வதற்கு உதவியாக அமையும். அது மட்டுமன்றி மிக விரைவாக சிகிச்சையளிப்பதற்கும் வசதியாக அமையும்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago