Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 05 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசத்தின் நம்பிக்கையை வென்ற வாய்ச்சுகாதார வர்த்தக நாமமான க்ளோகார்ட், வாய்ச்சுகாதார பராமரிப்புகளுடன் பற்சிதைவை தவிர்க்கும் வகையில் குடும்பங்களுக்கு உதவி வருகிறது. ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முன்னணி பற்பசை வர்த்தகநாமமான க்ளோகார்ட், பற்சிதைவிலிருந்து விடுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் பெருமையுடன் ஈடுபட்டு வருகிறது.
மிகச்சிறந்த வாய்ச்சுகாதார பராமரிப்பு பழக்கங்களை கொண்ட தேசமாக உருவாக்க உதவிடும் வகையில் சிறந்த வாய்ச்சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு குடும்பங்களை ஊக்குவிக்கும் வகையில் அண்மையில் தனித்துவமான செயற்திட்டமொன்றை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.
பற்சிதைவிலிருந்து விடுபட்ட இலங்கையை உருவாக்கும் வகையில் குடும்பங்கள் மத்தியில் ஊக்குவிப்பு மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பில் க்ளோகார்ட் கவனம் செலுத்தி வருகிறது. இதில் பங்குபற்றிய குடும்பங்களுக்கு பணம் மற்றும் ஏனைய பரிசுகள் உட்பட மாபெரும் வெகுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
தமது வாய்ச்சுகாதாரத்தை பேணுவதுடன், 'பற்சிதைவிலிருந்து விடுபட்ட எதிர்காலம்' இற்கான உறுதிமொழியை வழங்கும் வகையில் குடும்பங்களை ஊக்குவிப்பது இந்த தேசிய செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். ப்ளோரைட் அடங்கிய பற்பசையினால் நாளொன்றுக்கு இரு தடவைகள் பல்துலக்குவது தொடர்பில் விளக்கப்பட்டதுடன், இதனை குடும்பங்கள் தங்கள் நாளாந்த வாழ்வில் பின்பற்றுவதற்கான ஊக்குவிப்பு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தமது விழிப்புணர்வுக்கான உறுதிப்பாட்டினை வலியுறுத்தும் வகையில், க்ளோகார்ட் குழுவினர் நாடு முழுவதுமுள்ள 150 இடங்களுக்கு பயணித்துள்ளதுடன், 200இ000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆர்வத்துடன் முன்வந்து க்ளோகார்ட்டின் பற்சிதைவு தவிர்ப்புக்கான உறுதிமொழியை அளித்துள்ளனர்.
'எமது செயற்திட்டத்தின் ஒட்டுமொத்த தாக்கம் குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். க்ளோகர்ர்ட் போன்ற ப்ளோரைட் அடங்கிய பற்பசை கொண்டு நாளொன்றுக்கு இரு தடவைகள் பல்துலக்குவதன் மூலம் உங்கள் வாய்ச்சுகாதார பழக்கங்களை மாற்ற முடிவதுடன், பற்கள் சம்பந்தமான பெரும்பாலான பிரச்சனைகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். பற்சிதைவிலிருந்து விடுபட்ட தேசத்தை கட்டியெழுப்புவதற்கான இலங்கையரின் ஆர்வத்தை கண்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரோய் ஜோசப் தெரிவித்தார்.
'பொறுப்பு வாய்ந்த நிறுவனமாகிய ஹேமாஸ் தமது முயற்சிகள் ஊடாக நாடுபூராகவுமுள்ள குடும்பங்கள் மத்தியில் சிறந்த வாய்ச்சுகாதாரத்தை மேம்படுத்தி வரும் கூட்டாண்மை குரலாக மாற்றமடைந்துள்ளது. பற்சிதைவிலிருந்து விடுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்காக க்ளோகார்ட் செயற்திட்டம் மற்றும் மக்களின் வாழ்வை மெருகேற்றுவதற்காக எம்மை அர்ப்பணித்துள்ளோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
பிரச்சாரத்தின் போது பற்சிதைவிலிருந்து விடுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதாக உறுதிமொழி அளித்த குடும்பங்கள் மற்றும் குடும்பத்தலைவிகளுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன. பங்குபற்றியவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட பரிசிழுப்பின் போது தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாபெரும் பரிசிலை வெல்லும் வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசிலாக வழங்கப்பட்டது.
கேகாலை, தெனியாய மற்றும் கனேமுல்ல போன்ற பிரதேசங்களிலிருந்து ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான வைப்பினை வென்ற அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மேலும் 12 குளிர்சாதனப் பெட்டிகள், 9 மடிக்கணினிகள், மவுண்டேயின் சைக்கிள்கள், பைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் போன்றனவும் பரிசில்களாக வழங்கப்பட்டன.
'பெற்றோர் என்ற வகையில், க்ளோகார்ட் பற்சிதைவு தவிர்ப்பு செயற்திட்டம் எமக்கு பெரும் உதவியாக அமைந்திருந்தது' என கனேமுல்லவைச் சேர்ந்த ரித்மி ஹோஷதி தெரிவித்தார். 'இந்த விழிப்புணர்வு செயற்திட்டமானது எமது குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதுமான ஆரோக்கியமான வாய் பராமரிப்பு வாய்ச்சுகாதார பழக்கங்கள் தொடர்பில் கற்றுக்கொடுக்க உதவியாக இருந்தது' என்றார்.
பற்சிதைவு அற்ற இலங்கையை கட்டியெழுப்பும் அதன் குறிக்கோளினை நிறைவேற்றும் வகையில், எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க க்ளோகார்ட் திட்டமிட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago