Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மார்ச் 15 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் வர்த்தக செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பான சகல அறிக்கைகளையும் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீட்பு இலங்கைக்கு பெரிதும் உதவும். புதிய அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்பதற்கு நாமும் ஆர்வமாக இருக்கின்றோம் என புதுடெல்லியில் அமைந்துள்ள இலங்கைக்கான எஸ்டோனியா குடியரசின் புதிய தூதுவர் வில்ஜா லும்பி தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மரியாதை நிமித்தமான அழைப்பின் பேரில் கொழும்பில்; அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு வந்திருந்த சமயம் அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கான எஸ்டோனியா குடியரசின்; கான்சல் டி. தம்பிநாயகம் , ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பந்துல எகொடகே மற்றும் இலங்கை வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.டி.எஸ். குமாரரட்ன ஆகியோரும் இவ் அழைப்பில் கலந்துக்கொணடனர்.
தூதுவர் வில்ஜா லும்பி அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு அங்கத்கவர்கள் நாம் இலங்கையின் மீன்வள ஏற்றுமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மற்றும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீட்பு தொடர்பில் விரைவான தீர்மானம் எடுக்க நாம் மிகவும் ஆதரவாக உள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் வர்த்தக செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பான சகல அறிக்கைகளையும்; நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீட்பு இலங்கைக்கு பெரிதும் உதவும்.
புதிய அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். அவற்றை தீர்க்க எங்கள் பக்கத்தில் இருந்தும் உதவ முடியும் இலங்கையுடனான எமது வர்த்தக செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அதை புதுப்பிப்பதற்கான நேரம் நெருங்கியுள்ளது. நாம் இலங்கையில் ஒப்பீட்டளவில் புதிய நாடாகவே உள்ளோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டெல்லியில் இலங்கைக்கான எமது உத்தியோகப்பூர்வ அலுவலகம் நிறுவப்பட்டது. எஸ்தோனியாவில் இருந்து பத்து உயர் நிலை கொண்ட சுற்றுலா குழு நிறுவனங்களை வெகு விரைவில் இலங்கைக்கு அழைத்து வரவுள்ளோம். இந்த நிறுவனங்களில் சில உயர் நிலைக்கொண்ட மற்றும் பெரிய அளவில் எண்ணப்பட்டு வரும் எஸ்தோனியாவின் சுற்றுலா மற்றும் சுற்றுலா சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர்.
உருக்கு இரும்பு, சுற்றுலா, தளவாடங்கள்,கட்டுமானம், மரம் மற்றும் விவசாயதுறைகளில் இலங்கையுடனான கூட்டு முயற்சிகளில் கூட்டு பங்காளார்களாக இருப்பதற்கு நாங்கள் ஆர்வமாக இருக்கின்றோம். எமது வர்த்தக செயற்பாடுகளை புதுப்பிக்கவும் கொள்வனவாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு இலங்கையில் இருந்து ஒரு வலுவான வர்த்தக குழு மற்றும் வர்த்தக பிரதிநிதிகளை எமது நாட்டிற்கு அழைக்கிறோம் என்றார்.
2004 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் எஸ்தோனியா குடியரசு உறுப்பு அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் ஒப்பீட்டளவில் எஸ்டோனியாவின் வெளிப்பாடு இலங்கை ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அறியப்பட்டது.
எஸ்டோனியா -இலங்கை இருதரப்பு மொத்த வர்த்தக 2014 ஆம் ஆண்டில் 6.38 மில்லியன் அமெரிக்க டொலரை காட்டியது. எஸ்தோனியாவுக்கான இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதியாக கார்பன் காணப்படுகிறது.
அமைச்சர் ரிஷாட், இங்கு உரையாற்றுகையில் தெரிவித்தாவது,
ஏற்றுமதி ஊக்குவிப்பானது ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கமாக உள்ளது. கடந்த அரசாங்கத்தில் இழக்கப்பட்ட ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் எடுக்கபட்ட முயற்சிகள் சாதக நிலைப்பாட்டினை காட்டுகிறது.
வரிச் சலுகை இழக்கப்பட்டதனால் இலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகள் பல நெருக்கடி நிலைக்கு முகம்கொடுத்தன. மற்றும் பல நிறுவனங்கள் பல மில்லியன் யூரோ வருமானத்தை இழந்தது. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை நீக்கப்பட்டதன் பின்னர், ஆடை நிறுவனங்கள் ஒரு வருடத்துக்குள் 24 மில்லியன் யூரோ இழக்கப்பட்டது என்பது தனிப்பட்ட முறையில் நான் நன்கு அறிந்துக்கொண்டுள்ளேன்.
2013 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான எமது வர்த்தகம் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நெருக்கமாக இருந்தது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைள் நடைமுறையில் இருந்தால் இவ்வர்த்தகம் மிகவும் நன்மையாக இருந்திருக்கும். 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நிறுத்தியது.
எனினும், இச்சலுகைகள் நிறுத்தப்பட்ட போதிலும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. வசதி தொடர்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் இலங்கையினுடைய ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையினை (குறிப்பாக ஆடை ஏற்றுமதிக்கு) இலவசமாக வழங்கியது. இலங்கையின் மீன்வள ஏற்றுமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மற்றும் எங்கள் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் பெரிதும் பாராட்டுகின்றேன்.
நாம் தாமதம் இல்லாமல் வர்த்தக உறவுகளினை புதுப்பிக்க வேண்டும் சுற்றுலா குழுவினரை இலங்கைக்கு நாம் வரவேற்கிறோம். எங்கள் சுற்றுலா மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கூட்டாண்மை ஒத்துழைப்புக்கும் உங்களை நாம் வரவேற்கின்றோம். எஸ்டோனியா முதலீட்டார்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றேன்.
தொடர்ந்து இலங்கையுடன் உறவைப்பேணுவதற்கும் பக்கபலமாக இருப்பேன். அதேநேரம் எங்கள் வர்த்தக தூதுக்குழு விஜயம் தொடர்பில் முறைப்படுத்தலினை தொடங்க எனது அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.
புதிய அரசாங்கத்தின் பொருளாதார முன்னேற்றம் அதிகமான வெளிநாட்டு முதலீட்டார்களின் முதலீட்டு ஆர்வம். 100 நாட்கள் வேலைத்திட்டமும் அதன் அடைவுகள் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் ரிஷாட், தூதுவருக்கு விளக்கினார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago