2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

2017 இல் Tea Expo

A.P.Mathan   / 2015 மார்ச் 20 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் Tea Expo கண்காட்சியை 2017ஆம் ஆண்டில் நடத்துவதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கொண்ட பரிந்துரையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. உள்நாட்டு தேயிலை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

முதலில் இந்த கண்காட்சி 2015ஆம் ஆண்டு நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் போதியளவு திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில் இந்த புதிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தேயிலையை சர்வதேச மட்டத்தில் பிரபல்யப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடாக இந்த கண்காட்சி அமைந்திருக்கும். இலங்கையின் தேயிலை பெருந்தோட்டத்துறை என்பது 2017ஆம் ஆண்டில் வர்த்தகச் செய்கையாக அறிமுகம் செய்யப்பட்டு 150 ஆண்டுகளை பூர்த்தி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X