Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 21 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
99X Technology நிறுவனம் 'HRM Awards 2014' விழாவில் தங்க விருதினை வென்றதை அடுத்து இலங்கையிலுள்ள முன்னணியான கூட்டுறவு நிறுவனங்களுக்குள் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தனது நாளாந்த செயற்பாடுகளின்போது கையாண்ட புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான மனித வள நடிவடிக்கைகளுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் அங்கீகாரமே இவ்விருதாகும்.
வேலைத் தளங்களில் ஊழியர்களை மையப்படுத்தும் முன்னோடியாக சேவையினை ஆற்றிவரும் இந்நிறுவனம் முன்னேற்றத்தை தரக்கூடிய மற்றும் ஊழியர்கள் தம் படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த சூழலை பெற்றுத்தருவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. HRM Awards விருதுகளை வென்று புதிதாக உள்வாங்கப்பட்ட 99X Technology நிறுவனத்தை, உள்நாடு மற்றும் சர்வதேச அமைப்புக்கள் காலத்துக்கு காலம் ஏற்றுக்கொள்வதற்கான முக்கிய காரணி இதுவாகும்.
இது குறித்து கருத்து தெரிவித்த 99X Technology நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மனோ சேகரம், '99X Technology நிறுவனத்தை பொறுத்தவரை இது ஓர் அற்புதமான நீண்ட பயணமாகும். அத்துடன் (Association of Human Resources) மனித வள வல்லுனர் சங்கம் போன்ற மதிப்பிற்குரிய சங்கத்தினால் மனித வள முகாமைத்துவத்திற்காக எமக்கு கிடைத்த அங்கீகாரம் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. இது மனித வள நடவடிக்கைகளை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க எமக்கு உத்வேகமளிக்கின்றது. எமது தேர்ச்சிபெற்ற கடுமையான உழைக்கும் எமது தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இன்றி, இவையனைத்தையும் சாதித்திருக்க முடியாது.' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிறுவனமானது சமீப காலங்களில் பல்வேறு விருதுகளை தன்வசமாக்கியுள்ளது. அந்தவகையில் 2015 ஆம் ஆண்டின் ஆசியாவில் சிறந்த பணிபுரியும் நிறுவனம் எனும் விருதினை வென்ற இலங்கையில் முதலாவதும் ஒரே ஒரு நிறுவனம் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளது. மேலும் 99X Technology நிறுவனமானது அடுத்தடுத்து இரண்டு வருடங்களாக இலங்கையிலுள்ள 15 சிறந்த பணிபுரியும் நிறுவனங்களுக்குள் ஒன்றாக தன் பெயரை நிலைநாட்டி வருகின்றது. அத்துடன் 2014 ஆம் ஆண்டு Talent Management விசேட விருதினை வென்றுள்ளதுடன், Talent Management இற்காக 2014 ஆம் ஆண்டு Asia’s Best Employer Brand (ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குனருக்கான வர்த்தக நாமம்) விருதினையும் தன்வசப்படுத்தியுள்ளது.
Cinnamon Grand இல் இடம்பெற்ற இவ்வாண்டின் HRM Awards விழாவில், இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற பல்வேறு நிறுவனங்கள் பங்குபற்றியிருந்தன. John Keells Holdings, Diesel & Motor Engineering, Aitken Spence, Dialog Axiata மற்றும் Virtusa ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்க நிறுவனங்களாகும்.
HRM Awards 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு எதிராக, இலங்கையிலுள்ள பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தமது மனித வள முகாமைத்துவ நடைமுறைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விருது மனித வள முகாமைத்துவம் தொடர்பில் பழைமையான முறைகளை தளர்த்து புதுமையான ஆக்கபூர்வமான உத்திகளைக் கையாளும் நிறுவனங்களின் அர்ப்பணிப்பிற்கும் ஆர்வத்திற்கும் கிடைக்கின்ற பெருமைக்குரிய விருதாகும்.
நிறுவனங்களை மதிப்பிடுகையில் நடுவர் குழு, விசேட உள்ளுர் மற்றும் சர்வதேச மனித வள தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்கள், உற்பத்தித் திறனை அதிகரிக்க செயல்முறைகளில் காட்டப்படும் விசேட கவனம், ஊழியரின் வளர்ச்சி மற்றும் போட்டிமிகுத் தன்மையை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் வணிக் துறையில் நீடித்திருக்கும் காலம் ஆகிய விடயங்கள் கருத்திற்கொள்ளப்படும்.
99X Technology நிறுவனமானது மென்பொருள் தயாரிப்பு பொறியியல் துறையில் விருது வென்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் ஐரோப்பிய பகுதியை முதன்மையாக் கொண்டு உலகம் முழுவதுமுள்ள சுயாதீன மென்பொருள் விற்பனையாளர்களுக்கு அதியுயர் மென்பொருள் தயாரிப்பு மேம்பாட்டு சேவைகளை வழங்கிவருகின்றது. இலங்கையை தலைமை அலுவலகமாக கொண்ட இந்நிறுனத்தின் அலுவலகங்கள் ஒஸ்லோ மற்றும் நோர்வேயிலும் உள்ளதுடன் 99X Technology நிறுவனமானது 150 மேற்பட்ட வணிக பொருட்களை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் தடம் பதித்துள்ள சிறந்த நிறுவனமாகும்.
21 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
29 minute ago