Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 21 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயற்கையின் இரகசியங்களை உங்கள் சருமத்துக்கு வழங்கும் நேச்சர்ஸ் சீக்ரட்ஸ், இலங்கையின் முதற்தர மூலிகை வர்த்தக நாமமான தமது பொடி லோஷன் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் பாவனையாளர்களுக்காக ' ஹொண்டா - எக்டிவா ஐ' ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கும் போட்டியை அண்மையில் ஆரம்பித்தது.
2014 ஓகஸ்ட் முதல் 2015 ஜனவரி வரை நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொன்றும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த 10 'ஹொண்டா எக்டிவா ஐ' ஸ்கூட்டர்களை பரிசாக வழங்க நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான சுற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான சீட்டிழுப்பு ஹொரனை மில்லேவையில் அமைந்துள்ள நேச்சர்ஸ் பியூட்டி தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த வைபவத்திற்கு நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் பணிப்பாளரும் பொதுமுகாமையாளருமான நாலக்க குணவர்தன உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதுடன் சீட்டிழுப்பின் மூலம் வெற்றியாளர்களாக மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெந்தரையைச் சேர்ந்த கிம்ஹானி திசாநாயக்க, நெலுவையைச் சேர்ந்த சந்துனி லியனகே, பொலன்னறுவையைச் சேர்ந்த கீதாஞ்சலி ஷிரோமி விக்கிரமசிங்க ஆகியோரே வெற்றியாளர்களாவர். அவர்களுக்கான 'ஹொண்டா - எக்டிவா ஐ' ஸ்கூட்டர்கள் சில தினங்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது.
இரண்டாம் சுற்று சீட்டிழுப்பில் ' ஹொண்டா - எக்டிவா ஐ' ஸ்கூட்டர்களை ஹெட்டனைச் சேர்ந்த சத்துரிகா லக்மாலி, வந்துரம்ப தாத்தாவலையைச் சேர்ந்த தேவிகா சந்தமாலி, எஹேலகஸ்ஹின்ன இஷன்கா லக்மாலி பிரியதர்ஷன மற்றும் கம்பளை துனுதெனியவைச் சேர்ந்த நில்மினி பண்டார ஆகியோர் வெற்றி பெற்றனர்.
'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் பொடி லோஷனை வாங்குங்கள் - ஸ்கூட்டர்ஸ் வெல்லுங்கள்' போட்டியின் முதலாம் சுற்று வெற்றியாளர்கள் கடந்த செப்டம்பரில் இடம்பெற்ற சீட்டிழுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹிங்குரக்கொடையைச் சேர்ந்த பமல்க டில்ஷான் பண்டார, நாரம்மலையைச் சேர்ந்த நிபுனி திசாநாயக்க மற்றும் ரத்தெலுகமையைச் சேர்ந்த ஏ.ஏ.சிறியலதா ஆகியோர் ' ஹொண்டா - எக்டிவா ஐ' ஸ்கூட்டர்களை வெற்றிபெற்றனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago