Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 21 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கொரியாவின் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளரான சம்சுங் கையடக்க தொலைபேசிகள் விற்பனைகள் இலங்கையில் விற்பனையாகும் மொத்த கையடக்க தொலைபேசி விற்பனைகளில் சுமார் 30 சதவீதத்தை தன்வசம் கொண்டுள்ளதாக இன்டர்நஷனல் டேடா கோர்ப்பரேஷன் மேற்கொண்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தரப்படுத்தலில் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே Huawei மற்றும் Nokia ஆகியன பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்த பெறுபேறுகள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்சுங் ஸ்மார்ட்ஃபோன்களை பொறுத்தமட்டில் Galaxy S Duos எனும் ரகம் அதிகளவு கேள்வியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Huawei தரப்படுத்தலில் இரண்டாமிடத்தை 18 சதவீதத்துடன் பெற்றிருந்ததுடன், 9 சதவீதத்துடன் மூன்றாமிடத்தில் Nokia பெற்றுக்கொண்டது. இந்த அறிக்கைக்கமைவாக, முன்னணி நகரங்கள் மற்றும் மலையக பகுதிகளில் Huawei வர்த்தக நாமத்திலான கையடக்க தொலைபேசிகளுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago