Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 22 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டியுடன் சம்பந்தப்படாத இஸ்லாமிய வங்கி துறையுடன் முற்றிலும் இணங்கி செயற்பட்டு வரும் இலங்கையின் ஒரேயொரு உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியாகத் திகழும் அமானா வங்கி 2014ம் ஆண்டின் நான்காவது காலாண்டை வங்கியின் இலாபகரமான முதலாவது காலாண்டாக பதிவு செய்துள்ளது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தினால் வெளியிடப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்கு அமைய, 2014ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் மாதாந்த தொழிற்பாட்டு இலாபத்தை அடைய ஆரம்பித்த இந்த வங்கி 2014ம் ஆண்டு நான்காவது காலாண்டுக்குரிய வரிக்கு முந்திய இலாபமாக 88.5 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளது. இதன் பயனாக, 2013ம் ஆண்டில் 438 மில்லியன் ரூபாவாக இருந்த வரிக்கு முந்திய நட்டத்தை 80.3 மில்லியன் ரூபா வரை வங்கி குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.
வங்கியின் மொத்த சொத்துக்களின் வளர்ச்சி 34.9 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 49% வளர்ச்சியை பதிவு செய்துள்ள அதேவேளை, அதன் உயர் மட்ட அடைவில் வலுவான முன்னேற்றத்தை அமானா வங்கி தொடர்ந்தும் காட்டி வருகின்றது. 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவுபெறும் ஆண்டுக்கான தேரிய நிதிசார் வருமானம் 1,209.6 மில்லியன் ரூபா அதிகரிப்புடன் 68% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானமாக ரூபா 1,668.7 மில்லியனை அடைந்து 57% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வங்கியின் அதிகரித்துவரும் இந்த பிரபல்யமும், அங்கீகாரமும் குறிப்பிட்ட வருடத்தில் வாடிக்கையாளரின் வைப்புக்களை 29.2 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கச் செய்து 62% வளர்ச்சியை பதிவு செய்துள்ள அதேவேளை, வாடிக்கையாளர் முற்பணம் 25.4 பில்லியன் ரூபா வரை அடைந்து 69% வளர்ச்சியை காட்டியுள்ளது.
வங்கியின் இந்த சாதனை பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ' நாம் தொழிற்பட்டு வந்த சவால்மிக்க சூழலில் 2014ம் ஆண்டில் வங்கி அடைந்து கொண்ட முன்னேற்றம் குறித்து நான் மிகவும் பெருமிதம் அடைகின்றேன். 150,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எம் மீது வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கையை இந்த முடிவுகள் பிரதிபலிக்கின்றன. எம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். கவர்ச்சிகரமான ஒரு சொத்து தரத்துடன் முற்பணத்தில் எமது வளர்ச்சி காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சொத்து தரம் மொத்த தொழிற்பாடற்ற முற்பணத்தின் பெறுமானத்தில் 1.49% அதிகரிப்பை காட்டுகின்றது. அதாவது இந்த துறையின் சராசரியை விட மிகவும் குறைவாகும். எமது தற்போதைய முன்னேற்றம் எமது மூலோபாயத் திட்டத்துடன் தொடர்ந்தும் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு ' என்று குறிப்பிட்டார்.
அமானா வங்கி கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரிசவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணைவாக அண்மையில் அமெரிக்காவின் வொஷpங்டன் நகரில் நடைபெற்ற 18ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகளைத் தெரிவு செய்யும் 2014 விருது விழாவில் குலோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் உலகில் முன்னேறி வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக அமானா வங்கி அங்கீகரிக்கப்பட்டது.
வட்டி சாராத இஸ்லாமிய வங்கிக் முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியே அமானா வங்கியாகும். தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.
50 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
3 hours ago