Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 22 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனசக்தி காப்புறுதி பிஎல்சி நிறுவனம் கடந்த 2014 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் காப்புறுதி துறையின் விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், ஆரோக்கியமான வளர்ச்சியை வெளிப்படுத்தி வரிக்கு முன்னரான இலாபமாக ரூ.1 பில்லியனை பதிவு செய்துள்ளது.
காப்புறுதி துறையில் இரு தசாப்தங்களை கொண்டாடும் ஜனசக்தி, கடந்தாண்டு பெற்ற ரூ.8.7 பில்லியனை விடவும், 2014 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிகர வழங்கப்பட்ட தவணைக்கட்டணம் (GWP) ஆக 8.9 பில்லியன் ரூபாவினை பதிவு செய்துள்ளது.
இந் நிறுவனத்தின் ஆயுள் சாராத காப்புறுதி பிரிவில் கடந்தாண்டு பதியப்பட்ட நிகர வழங்கப்பட்ட தவணைக்கட்டணம் (GWP) ரூ.6.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ரூ.6.8 பில்லியன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆயுள் சாராத காப்புறுதி வர்த்தகத்தில் வருடந்தோறும் 4% வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு பிரதானமாக மோட்டார் சாராத வர்த்தக துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பே முக்கிய காரணமாகும்.
ஒட்டுமொத்த தொழிற்துறையின் 1.47% வளர்ச்சியை கருத்தில் கொள்கையில், ஜனசக்தி நிறுவனம் 14.47% வளர்ச்சியை பதிவு செய்து மோட்டார் சாராத துறையில் அபார செயற்திறனை வெளிப்படுத்தியுள்ளது. ஆண்டின் பிற்பகுதியில் குறிப்பாக மோட்டார் வர்த்தக துறையில் அதீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஜனசக்தி நிறுவனம் கடந்த ஆண்டு பெற்ற சொத்து தளம் ரூ.18.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில,; ரூ.20.8 பில்லியனை பெற்று வளர்ச்சியை அடைந்துள்ளது. இந் நிறுவனம் அதன் பங்கு உரிமையாளர்களின் நிலையான பெறுமதி உருவாக்கத்தின் காரணமாக பங்கொன்றிற்கான தேறிய சொத்துக்கள் தளமானது கடந்தாண்டு ரூ.12.48 இலிருந்து ரூ.14.34 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிகள், ஜனசக்தியின் பங்கு விலைகளில் பிரதிபலிக்கிறது. பங்கொன்றிற்கான சந்தை விலையானது கடந்தாண்டின் ரூ.12.70 உடன் ஒப்பிடுகையில், வலுவான வளர்ச்சியாக ரூ.23.20 இனை பதிவு செய்துள்ளதுடன், வர்த்தகநாமத்தில் சந்தை நம்பிக்கையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. பங்கொன்றிற்கான வருவாயாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெற்ற ரூ.2.77 வுடன் ஒப்பிடுகையில், 2.92 ரூபாவினை பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது.
இச் சாதனை ரூ.4.6 பில்லியன் பெறுமதியான நஷ்டஈட்டினை வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே பதியப்பட்டுள்ளது. உடனடி நஷ்டஈட்டு மேலாண்மை மற்றும் மீளளிப்பு என்பன வர்த்தக குறியீட்டின் சமநிலைய நிரூபிப்பதுடன், ஜனசக்தி இப் பிரிவின் முன்னோடி என்பதை சான்று பகர்வதாக அமைந்துள்ளது. மேலும் இது வாடிக்கையாளர் தளம் மற்றும் சவால் நிலைமைகள் நோக்கிய ஜனசக்தியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இந் நிறுவனம் சட்ட தேவைகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் ஆயுள் காப்புறுதி செயற்பாடுகளில் பாரிய கட்டமைப்பு மாற்றங்களை செய்துள்ளது. இது ஆயுள் பிரிவில் விற்பனை வளர்ச்சி மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த பிரிவின் மூலம் 2015 இல் ஆரோக்கியமான வளர்ச்சியை வெளிப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் பாதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களின் காரணமாக இத் துறை ஏற்கனவே 2014 இன் பிற்பகுதியில் ஆரோக்கியமான வளர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனசக்தி நிறுவனம் தொடர்ந்து ஆரோக்கியமான மூலதன கட்டமைப்பை பிரதிபலித்து வருவதுடன், பட்டியலிடப்பட்ட காப்புறுதி நிறுவனங்களிடையே அதியுயர் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான ஒன்றிணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் தொடர்பான வாய்ப்புக்கள் குறித்து நிறுவனம் அதிக கவனம் செலுத்தவுள்ளது.
புதுமையான தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியான ஜனசக்தி, வாடிக்கையாளர்கள் தங்கள் நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை ATM ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் Easy claim போன்ற புதிய தீர்வுகளை அறிமுகம் செய்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிறுவனத்தின் நாடுபூராகவும் உள்ள 109 கிளைகளில் ஏதேனும் ஒரு கிளைக்கு வாடிக்கையாளர்கள் விஜயம் செய்து விரிவான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனசக்தியின் வலுவான செயற்திறனானது இந் நிறுவனம் வென்றுள்ள பல விருதுகள் ஊடாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந் நிறுவனம் அண்மையில் இடம்பெற்ற தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் விழாவில் காப்புறுதி மற்றும் திறன் கட்டியெழுப்பல் பிரிவுகளின் சிறப்பான செயற்திறனுக்காக இரு தங்க விருதுகளை வென்றுள்ளது. இந்த நிறுவனம் சர்வதேச அளவில் வர்த்தகநாம செயற்திறனுக்காக உலகளாவிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் உலகளாவிய வர்த்தகநாம நிலையாண்மை விருதையும், 5ஆவது CMO ஆசிய விருதுகள் விழாவில் வங்கியியல், நிதிச்சேவைகள் மற்றும் காப்புறுதி ஆகிய பிரிவுகளில் விருதுகளையும் வென்றுள்ளன.
50 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
4 hours ago