2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டுக்காக 'Mr. Robbialac' இடமிருந்து இலவச வர்ணப்பூச்சு

A.P.Mathan   / 2015 மார்ச் 21 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச புகழ்பெற்ற ரொபியலக் வர்த்தக குறியீட்டின் உற்பத்தியாளராகவும் சந்தைப்படுத்துனராகவும் உரிமை நிறுவனமுமாக திகழ்கின்ற லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டெட் ஆனது சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னரான புதுமையானதொரு ஊக்குவிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியளித்து உபசரிக்கின்றது. 

மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரைக்கும் நடைமுறையில் இருக்கும் இந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்கு அமைவாக, 'மிஸ்டர் ரொபியலக்' (Mr. Robbialac) எனப்படுகின்ற அடையாளம் காணப்படாத மர்ம நபர் ஒருவர் நாடு முழுவதிலும் அமைந்துள்ள வேறுபட்ட விற்பனையகங்களில், வௌ;வேறு நாட்களில், வௌ;வேறு நேரங்களில் பிரசன்னமாவார். அங்கு எந்தெந்த வாடிக்கையாளர்கள் லங்கெம் ரொபியலக் உற்பத்திகளை கொள்வனவு செய்கின்றார்கள் என்பதை அவர் சத்தம் எதுவுமின்றி அமைதியாக கண்காணிப்பார். 

வாடிக்கையாளர் ஒருவர் லங்கெம் ரொபியலக் எமல்சன் அல்லது வெதர்கோட் உற்பத்தி ஒன்றை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது Mr.Robbialac அவ்விடத்தில் தோன்றுவாராயின், அந்த அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் இப் பண்டிகைக் காலத்திற்கான பரிசாக 4 லீற்றர் ரொபியலக் வர்ணப்பூச்சு வாளி ஒன்றை தானாகவே வெற்றிகொள்வார். 

லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் றுவான் ரி. வீரசிங்க கூறுகையில், 'வீடுகளுக்கு வர்ணம்பூசுதல் அல்லது மீள-வர்ணப்பூச்சு பூசுதல் என்பது புதுவருட காலத்தில் மேற்கொள்ளப்படும் வழக்கமான மற்றும் பாரம்பரியமான நடைமுறைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. உள்நாட்டில் வர்ணப்பூச்சு வகைகள் அதிகளவில் கொள்வனவு செய்யப்படும் காலப்பகுதியாக ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்கள் காணப்படுகின்றன என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இத் துறையில் முன்னோடி நிறுவனம் என்ற வகையிலும் அதேபோல் வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த வர்ணப்பூச்சு வர்த்தக குறியீடுகளில் ஒன்று என்ற வகையிலும், லங்கெம் ரொபியலக் நிறுவனத்தினராகிய நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பண்டிகைக் காலத்தில் பிரதியுபகாரம் செய்வதற்கு விரும்புகின்றோம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர்கள் எமக்களித்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி கூறும் எமக்கேயுரிய ஒரு வழிமுறையாக இது காணப்படுகின்றது. மூன்று தசாப்தகாலம் பழமைவாய்ந்த பற்றுறுதி, சிறப்புத்துவம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் துணையுடன் முற்றுமுழுதாக உள்நாட்டில் வளர்ச்சியடைந்த ஒரு உற்பத்தியாக லங்கெம் ரொபிலக் திகழ்கின்றது. இப்போதுள்ள எமது வாடிக்கையாளர்கள் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இலங்கை நுகர்வோர்கள் தொடர்ச்சியாக எம்மீது வைத்திருக்கின்ற விசுவாசத்தை நிரூபிப்பதாக இது அமைந்துள்ளது' என்றார். 

இலங்கையின் பெயின்ற் உற்பத்தித் துறையில் ஒரு முன்னோடியான லங்கெம் ஆனது, இன்று இலங்கையின் மிகப் பெரிய 100% உள்நாட்டு வர்ணப்பூச்சு உற்பத்தியாளராகவும் சந்தைப்படுத்தும் நிறுவனமாகவும் உள்ளது. லங்கெம் நிறுவனத்தின் உயர்ரக உற்பத்தி வகைகளுள் - எமல்சன், எனாமல். வெதர் கோட், விஷேட தோற்றப்பாட்டுக்கான வர்ணப்பூச்சு, பிரைமர்ஸ், துணையுற்பத்திகள், சுவர் தயார்படுத்தல் உற்பத்திகள், நிலப் பூச்சுகள், அன்ரி கொரோசிவ், பசைத்தன்மை சார்ந்தவை, மர உற்பத்திகளை பாதுகாப்பவை, வாகனங்களுக்கான வர்ணப்பூச்சு போன்றவை உள்ளடங்குகின்றன. இதன்மூலம் இலங்கையிலுள்ள வர்ணப்பூச்சு வாடிக்கையாளர்களின் அனைத்து விதமான தேவைகளும் நிவர்த்தி செய்யப்படுகின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X