2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

SLIIT பட்டமளிப்பு விழா 2015

A.P.Mathan   / 2015 மார்ச் 27 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIIT இன் வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வில் 1000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் வணிக முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் மாஸ்டர்ஸ் கற்களை பூர்த்தி செய்தவர்களுக்கு இவ்வாறு பட்டம் வழங்கப்பட்டிருந்தது. மாலபே பகுதியில் அமைந்துள்ள SLIIT கம்பஸ் இல் இந்த பட்டமளிப்பு வைபவம் இடம்பெற்றது. 

SLIITஇன் கல்வி ஆலோசகர் பேராசிரியர் சாம் கருணாரட்ன, நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புகள் பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன, கொள்கை, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி. ஹர்ஷ டி சில்வா, பேராசிரியர். அவுஸ்திரேலியாவின், கேர்டின் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் பீடத்தில் உதவி பீடாதிபதி அன்டிரிஸ் ஸ்டெல்பொவிக்ஸ், இலத்திரனியல் பொறியியல் மற்றும் கணனி பிரிவின் தலைவர் கெவின் ஃபின் மற்றும் பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் பதில் பீடாதிபதி ரோஜர் எக்லிஸ்டன் ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றியிருந்தனர். SLIIT இன் தலைவர் பேராசிரியர் லஷ்மன் ரத்நாயக்க இந்நிகழ்வில் பட்டங்களை கையளித்திருந்தார்.  
    
பட்டதாரிகளுடன் பெறுமதி வாய்ந்த கொள்கைகளை பகிர்ந்து கொண்டு கொள்கை, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி. ஹர்ஷ டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'கல்லூரிக்கு செல்வதன் நோக்கம், பரிபூரண அனுபவத்தை பெற்றுக் கொள்வது, கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்ற பழகிக் கொள்ள, வெவ்வேறு நபர்களுடன் பணியாற்ற பழகிக் கொள்ள, பரீட்சை அழுத்தங்களை கையாள மற்றும் இலகுவில் விட்டுக் கொடுப்பதை தவிர்க்க பழகிக் கொள்வது என்பதாகும். இந்த சந்தர்ப்பத்தை உங்கள் அடிப்படை விடயமாக கொண்டு, உங்கள் ஆளுமைகளை பயன்படுத்தி SLIIT பயின்று இந்நாட்டை பெருமைக்குரியதாக்குங்கள். எதிர்காலத்தில் தாம் முன்னெடுக்கும் தொழில் மீதும் அன்பை செலுத்துமாறு குறிப்பிடுகிறேன்' என்றார்.

SLIIT இன் நீண்ட கால சர்வதேச கல்வி பங்காளர்கள் மற்றும் துறைசார் பங்காளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் துறைசார்ந்த அனுசரணையாளர்களாக IFS Global, Virtusa, Zone24x7, Dialog Axiata Ltd , Bank of Ceylon , Federation of IT Sri Lanka, WSO2, HP,Orange IT, Computer Society Sri Lanka, ReZgateway ,EPIC Lanka, Metropolitan Technologies மற்றும் ஆகியன e-WIZ பங்கேற்றிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X