2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஹொரவபொத்தானையில் பெரன்டினா

A.P.Mathan   / 2015 மார்ச் 26 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுர மாவட்டத்தில் ஹொரவபொத்தானை நகரில் தனது முதலாவது கிளையை பெரன்டினா மைக்குரோ இன்வெஸ்ட்மன்ட்ஸ் லிமிடெட் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. பெரன்டினா குழுமத்தின் நுண்நிதியியல் சேவைகளை வழங்கும் வகையில் பெரன்டினா மைக்குரோ இன்வெஸ்ட்மன்ட்ஸ் லிமிடெட் தாபிக்கப்பட்டிருந்தது. இதுவரை காலமும் இந்த செயற்பாடுகள் பெரன்டினா மைக்குரோஃபினான்ஸ் இன்ஸ்ரிடியுட் (BMI) (GTE) லிமிடெட் நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிறுவனம் இலங்கையில் 2007 ஆம் ஆண்டு முதல் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், பின்தங்கிய வறிய மற்றும் பெருந்தோட்டத்துறையை சேர்ந்தவர்களுக்கு நுண் நிதி மற்றும் வியாபார அபிவிருத்தி சேவை உதவிகளை தனது 18 கிளைகளின் ஊடாக 6 மாவட்டங்களில் வழங்கி வருகிறது. 

அநுராதபுரத்தின் ஹொரவப்பொத்தானையில் நிறுவப்பட்டுள்ள இந்த புதிய கிளை என்பது, மாவட்டத்தில் பெரன்டினா குழுமம் நிறுவியுள்ள 5ஆவது கிளை ஆகும். தற்போது மனுப (அநுராதபுர நகரம்), இபலோகம, கஹாட்டகஸ்திகிலிய மற்றும் திரப்பன ஆகிய பிரதேசங்களில் கிளைகளை கொண்டுள்ளது.

2015 இல், பெரன்டினா குழுமம் தனது கொள்கைத்திட்டத்துக்கமைவாக, பெரன்டினா மைக்குரோ இன்வெஸ்ட்மன்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை தாபித்திருந்தது. இது BMI க்கு நிகராக செயலாற்றி வந்தது. BMI இனால் வழங்கப்பட்ட சேவைகள் பெரன்டினா மைக்குரோ இன்வெஸ்ட்மன்ட்ஸ் உடன் இணைத்து முன்னெடுக்கப்படும் அத்துடன், சேவைத்தரம் என்பது கொள்கை மாற்றத்துடன் மாறுபடக்கூடியது.

ஹொரவபொதானை கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வின் பிரதம அதிதியாக பெரன்டினா குழுமத்தின் பணிப்பாளரும், பெரன்டினா மைக்குரோ இன்வெஸ்ட்மன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான அநுர அத்தபத்து பங்கேற்றிருந்தார். மேலும் இந்நிகழ்வின் விசேட அதிதிகளாக BMI இன் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான சரித் பெர்னான்டோ மற்றும் செயற்பாடுகளுக்கான முகாமையாளர் இஷான் ரஜிக ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக உதவி பிரதேச செயலாளர் ஆர். செந்தில் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சுனேத் வர்ணசூரிய, கிராம சேவ அதிகாரி எஸ். திலகரட்ன ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஹொரவபொதான பகுதியில் பெரன்டினா போன்றதொரு நிறுவனத்தின் பிரசன்னம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தொடர்பில் இவர் உரையாற்றியிருந்தார். பெரன்டினா மூலமாக அனுகூலம் பெறும் இதர நிறுவனங்கள் மற்றம் அமைப்புகளின் அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.  
 
2015 பெப்ரவரி 28ஆம் திகதிக்கு அமைவாக, பெரன்டினாவின் மைக்குரோஃபினான்ஸ் செயற்பாடுகளில் இதன் மூலம் 49,433 கடன்பெறுநர்கள் பயன்பெற்றுள்ளதுடன், மொத்த கடன் நிலுவை தொகையாக 1.5 பில்லியன் ரூபாயை கொண்டுள்ளது. தனியார் துறை அல்லது அரசசார்பற்ற நிறுவனமொன்றால் வழங்கப்படும் ஆகக்குறைந்த கடன் வட்டி வீதத்தை பெரன்டினா வழங்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X