Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்ப உணவு மற்றும் சமூகத்திற்கு பெறுமதி சேர்த்து வரும் வர்த்தக முன்னோடியான Ma’s ட்ரொபிகல் ஃபூட் புரொசசிங்(பிரைவட்;) லிமிடெட் நிறுவனமானது அதன் வாடிக்கையாளருக்கு அசாதாரணமான சமையல்கலை அனுபவத்தை வழங்கும் வகையில் அண்மையில் 'முலுதென்கே குக்கிங் ஸ்டுடியோ' இனை அறிமுகம் செய்திருந்தது.
இந்த அறிமுக நிகழ்வில் Ma’s Gourmet காட்சியறையில் Ma’s இன் சுவையான மூலப்பொருட்கள் மற்றும் ஆகாரத் தீர்வுகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கடந்த மூன்று தசாப்தங்களாக உயர் தரமான மற்றும் சேதன சான்றிதழ் பெற்ற நறுமணப் பொருட்கள், சீசனிங் பொருட்கள், சோஸ் வகைகள், கறி பேஸ்ட்டுகள், சட்னி, பஸ்தா மற்றும் உடனடி ஆகாரங்களை போன்றவற்றை வழங்கி இலங்கையின் முன்னணி குடும்ப உணவு தீர்வு வழங்குநர்களில் ஒன்றாக Ma’s விளங்குகிறது.
இராப்போசன விருந்துபசாரத்தில் சுவை மிக்க பார்பிகியூக்களை தயார்படுத்தல் மற்றும் சுவை நரம்புகளை தூண்டக்கூடிய நறுமணங்களை உணவிற்கு வழங்கக்கூடிய வகையில் Ma’s இன் உற்பத்திகள் அமைந்துள்ளன. இந் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் அதன் குடும்ப ஸ்டைல் மற்றும் சூழலை அதன் நவீன புத்துருவாக்கமான 'முலுதென்கே குக்கிங் ஸ்டுடியோ' ஊடாக விஸ்தரித்துள்ளது. இந்த ஸ்டுடியோவில் மிகப் பெரியளவிலான வீட்டு சமையலறை, சமையல் செய்முறைகள், மூலப்பொருட்கள் மற்றும் சமையல் தொடர்பான மகிழ்ச்சியூட்டும் விடயங்கள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த சமையல் ஸ்டுடியோவானது தனிப்பட்ட உணவுகளை தயாரித்து மகிழ்ச்சிகரமான உற்சாகத்தை ஊக்குவிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த நவீன சமையலறை வசதியானது வீட்டுச் சமையல்கலை நிபுணர்கள், புதிதாக சமைக்கப் பழகுபவர்கள், சிறுவர்கள் மற்றும் பரபரப்பான நிர்வாகிகள் ஆகியோருக்கான சிறந்த சமையல் மையமாக அமையும்.
'இந்த இடத்தை திறப்பதற்கான யோசனையானது, மக்களுக்கு ஒரு தொழில்முறை விதத்தில் சமையல் தொடர்பான வேடிக்கையான கருத்துக்களை நேரடியாக அறிமுகம் செய்யும் வகையிலேயே எழுந்தது' என Ma’s ஃபூட்ஸ் மற்றும் முலுதென்கே காலாண்டு உணவு சஞ்சிகையின் தொடர்பாடல் முகாமையாளர் சாரா டி சில்வா தெரிவித்தார். எமது ஸ்டுடியோவானது குழுக்கள் ஒன்றாக சேர்ந்து சமைப்பதற்கும், நட்பு மற்றும் உணவு தொடர்பான உணர்வினை தூண்டக்கூடிய சிறந்த இடமாகவும் அமையும் என நாம் நம்புகிறோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
தொழில்சார் முன்னோடிகள், நட்சத்திர சமையல்கலை நிபுணர்கள், புதுமையான குழுக்களுடன் இணைந்து பயிற்சிபட்டறைகளை முன்னெடுத்தல், நிர்வாகிகள் மற்றும் குடும்பங்களுடன் பிணைப்பினை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டுடியோவிற்கு சொந்தமான ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முன்னெடுப்பதுஇ இந்த ஸ்டுடியோவின் எதிர்கால திட்டங்களாக அமைந்துள்ளன.
Ma’s உற்பத்தி தொகுப்பில் Dad’s Garden கோர்மட் சோஸ், Happy Home உடனடி உணவுகள் மற்றும் கறி வகைகள், Ma’s Happy Life Kitchen சான்றிதழ் பெற்ற சேதன உணவுகள், Pasta Roma விசேட பஸ்தா வகைகள் மற்றும் சோஸ் வகைகள் மற்றும் Katersafe உணவு சேவை துறை சப்ளையர் போன்றவை உள்ளடக்கியுள்ளன.
இந் நிகழ்வில் உரையாடிய மரியோ டி சில்வா 'இன்றைய அறிமுகம் எமது நீண்டகால வளர்ச்சிக்கான சரியான நிறைவாக அமைந்துள்ளது என நாம் உறுதியாக நம்புகிறோம். தரமான உணவு பதப்படுத்தல் துறையில் சந்தை முன்னோடியாகவும், எமது உற்பத்திகள் மற்றும் Ma’s உணவு வர்த்தகநாமத்துடன் வாடிக்கையாளரை ஒன்றிணைப்பதே எமது வளர்ச்சி திட்டங்களாக அமைந்துள்ளன' என தெரிவித்தார்.
'இலங்கையின் முன்னணி குடும்ப ஆகாரம் மற்றும் உணவு தீர்வுகளை வழங்கி வரும் வர்த்தகநாமமான Ma’s ஆனது முழுமையாக இயற்கையான மற்றும் சேதன சான்றிதழ் பொருட்களின் பயன்பாட்டினை அதிகரித்துள்ளது. தற்போது உலகம் முழுவதுமுள்ள தர சப்ளையர்களிடமிருந்து மூலப்பொருட்கள் பெறப்படுவதுடன், தம்புள்ள பிரதேசத்திலுள்ள சேதன பண்ணைகளுக்கு நிறுவனம் உதவிகளை வழங்கி வருகிறது. பொறுப்பு வாய்ந்த குடும்ப நிர்வாக நிறுவனம் எனும் ரீதியில், எமது சூழலின் நிலையாண்மைக்கான சிறந்த பாதுகாப்பினை வழங்கி வருகிறோம். எமது வர்த்தகத்தின் வளர்ச்சியைப் போன்று எமது விநியோக விவசாயிகள் மற்றும் அவர்களது சமூகத்தினரின் வளர்ச்சிக்கு உதவிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago