Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண குடாநாட்டைச் சேர்ந்த இளைஞர்களை இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களாக ஊக்குவிக்கும் வகையில், களனி கேபிள்ஸ் பிஎல்சி, 'களனி சக்தி' நிபுணத்துவ அபிவிருத்தி திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பாடசாலை கல்வியை பூர்த்தி செய்தவர்கள் மத்தியில் இலத்திரனியல் தொழில்நுட்ப ஆளுமைகளை விருத்தி செய்யும் வகையில் அமைந்த இந்த திட்டத்தின் மூலம், யாழ்ப்பாணத்தில் சுய தொழிலில் ஈடுபடக்கூடிய ஆளுமையை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த திட்டம் கிளிநொச்சியில் காணப்படும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்னம், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. ஏ.அற்புதராஜா மற்றும் களனி சக்தி திட்டத்தின் பணிப்பாளர் ரி.திருவரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
முதலாவது தினத்தில் சுமார் 50 மாணவர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர். இந்த திட்டத்தின் மூலமாக, இளைஞர்களுக்கு, வீடுகள் மற்றும் தொழிற்துறைசார்ந்த இலத்திரனியல் வயர் பதித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு அவசியமான அறிவை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூலமாக ஒவ்வொரு பங்குபற்றுநருக்கும் வழங்கப்படும்,
பாதுகாப்பான வயர்கள் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் உற்பத்தியில் முன்னோடியாக திகழும் வர்த்தக நாமமாக களனி கேபிள்ஸ் பிஎல்சி, |களனி சவிய| சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தை 2007 ஆம் ஆண்டு முதல் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது.
சுய தொழில் புரியும் இலத்திரனியல் பொறியியலாளர்களின் ஆளுமைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை கல்வியை பூர்த்திசெய்தவர்களை இலத்திரனியல் பொறியியலாளர்களாக திகழ்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. களனி சவிய பயிற்சி திட்டத்துக்கு உள்வாங்கப்படுவதற்கு அவசியமான ஒரே தகைமையாக க.பொ.த சாதாரண தர தகைமைகளை கொண்டிருப்பது அவசியமாகும். களனி சவிய சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் நீடிப்பாக களனி சக்தி அமைந்துள்ளது.
களனி சக்தி நிபுணத்துவ அபிவிருத்தி திட்டம் என்பது நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பாளர் ஜயந்த விஜேசிங்க மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. அற்புதராஜா அவர்களின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், மேற்பார்வை செயற்பாடுகளை களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால மேற்கொண்டிருந்தார்.
களனி சக்தி திட்டம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்னம் மற்றும் களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் மீள்குடியேற்றம் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் யுத்தத்தின்hல் பாதிக்கப்பட்ட வட பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணங்கள் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக அரச – தனியார் ஒன்றிணைவுகள் ஏற்படுத்தப்படுவது நிதியளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. களனி சக்தி திட்டம் என்பது மீள்குடியேற்றம் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு அமைய காணப்படுகின்றன.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜே.பி.ஏக்கநாயக்க இந்த களனி சவிய திட்டத்தின் பிரதான காரணகர்த்தாவாக அமைந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.பி.எஸ் அபேகோன் மற்றும் களனி கேபிள்ஸ் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ஹேமந்த பெரேரா ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
நியதி நிபந்தனைகளுக்கமைவாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை 2012 ஆம் ஆண்டு நிறைவடைந்திருந்தது. ஆனாலும் களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால மற்றும் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் கலந்துரையாடலை தொடர்ந்து இந்த திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டு 2017 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
உள்நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந்த திட்டமொன்றை முன்னெடுக்கின்றமை இதுவே முதல் தடவையாக அமைந்துள்ளது.
இந்த அறிமுக நிகழ்வில் களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால கருத்து தெரிவிக்கையில், 'களனி கேபிள்ஸ் வௌ;வேறு வகையான சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களில் ஆண்டு முழுவதும் ஈடுபட்டு வருகின்ற போதிலும் களனி சவிய மற்றும் களனி சக்தி சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் எமது கம்பனிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன பாடசாலை கல்வியை பூர்த்தி செய்தவர்கள் மற்றும் ஆரம்பநிலையிலுள்ளவர்களுக்கு இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களாக திகழ்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் களனி சவிய மற்றும் களனி சக்தி ஆகியன அமைந்துள்ளன. மேலும், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழை வழங்கும் வகையில் அவை அமைந்துள்ளன. நாம் இலங்கை நிறுவனம் எனும் வகையில், இந்த செயற்பாட்டில் பங்கேற்பதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம்' என்றார்.
களனி சவிய திட்டத்தை யாழ்ப்பாணத்துக்கு நீடிப்பதன் மூலமாக களனி சக்தி ஊடாக வடக்கு பகுதியைச் சேர்ந்த மக்களுடன் சிறந்த உறவை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு தனது நன்றியை தெரிவித்த களனி கேபிள்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி, இந்த திட்டத்தை நாட்டின் ஏனைய பல்கலைகழக்கழங்களிலும் முன்னெடுக்க தாம் ஆவலாக உள்ளதாக குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட களனி சக்தி அபிவிருத்தி திட்டத்தில் களனி கேபிள்ஸ் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் அனில் முனசிங்க, செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் உபுல் மஹாநாம, வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க, விற்பனை முகாமையாளர் (திட்டங்கள்) பாலித எதுல்கம, விற்பனை முகாமையாளர் (ஏற்றுமதிகள்) தேவிந்த லொரென்சுஹேவா, விற்பனை முகாமையாளர் (சக்தி மற்றும் வலு) ரோஹண வாத்துவகே, விற்பனை கட்டுப்பாட்டாளர் ரால்ப் ரொஷான், மனித வளங்கள் முகாமையாளர் கிஹான் விதானகமகே மற்றும் களனி கேபிள்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட முகாமையாளர் குழுவினர் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
நூற்றுக்கு நூறு வீதம் இலங்கையின் கம்பனியாக கடந்த நான்கு தசாப்த காலமாக களனி கேபிள்ஸ் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கம்பனி 'Super Brands' தரத்தை இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் 2008 ஆம் ஆண்டில் எய்தியிருந்ததுடன், துறையில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது.
களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கலின் போது, பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக களனி கேபிள்ஸ் பிஎல்சி 2013 ஆம் ஆண்டில் தங்க விருதையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
30 minute ago