Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவலோக ஹோல்டிங்ஸ் குழுவின் அங்கத்துவ நிறுவனமான சியோகா (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின், சியோகா ஹெல்த் மூலமாக இலங்கையில் முதல் தடவையாக ஊசி இல்லாத உயர் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், நோய்த்தடுப்பு ஊசிகள் வழங்கும் முறையில் புதிய புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நோய்த்தடுப்பூசிகளை வழங்கும் போது ஊசிகள் என்பது வைத்தியத்துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமமாக அமைந்துள்ளது. ஆனாலும், நோயாளிகளை பொறுத்தவரையில், குறிப்பாக சிறுவர்களுக்கு ஊசிகள் தொடர்பில் பெரும் பயம் காணப்படுவது சாதாரணமான விடயமாகும். இதன் காரணமாக ஏற்படும் வலிகள் மற்றும் அசாதாரண நிலை போன்றவற்றால் வழமையாக மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு ஊசிகள் ஏற்றுவதையும் மக்கள் தவிர்க்கின்றனர். எனவே தான் இவ்வாறான சிரமங்களை குறைக்கும் வகையில் ஊசியில்லாத தடுப்பூசிகளை சியோகா சத்திரசிகிச்சை பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.
Bioject’s ஊசியில்லாத தடுப்பூசி (needle-free injection) தொழில்நுட்பத்தை இலங்கையில் விநியோகிக்கும் ஏக விநியோகத்தராக சியோகா ஹெல்த் திகழ்வதுடன், இலங்கையின் சுகாதார பராமரிப்பு துறையில், இந்த தடுப்பூசியேற்றும் முறையானது அதிகளவு வினைத்திறன் மற்றும் எவ்வித வலியும் இன்றி காணப்படும் என உறுதிமொழிந்துள்ளது.
Bioject’s தொழில்நுட்பம் என்பது திரவ மருந்தை சருமத்தின் சிறு துவாரம் ஒன்றினூடாக அதிவேகமாக உட்செலுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஓர் தொழில்நுட்பமாகும். இதன் மூலம் அதிநுண் திரவ ஓட்டம் ஒன்று சருமத்தினுள் ஊடுருவி, சில நொடிப்பொழுதுகளில் மருந்தை உடம்பினுள் உட்செலுத்துகின்றது. இவ்வாறாக ஊசி இல்லாமல் உடலினுள் உட்செலுத்துகின்ற மருந்தை சௌகர்யமான முறையில், மிகத்துல்லியமாகவும் விரைவாகவும் அவசியமான பகுதியை சென்றடையச் செய்யும் வகையில் Bioject’s கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சியோகா ஹெல்த் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் சத்திரசிகிச்சை பிரிவின் தலைமை அதிகாரி இம்மானுவேல் முருகைய்யா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், 'புத்தாக்கத்துடனான புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக நோயாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் சியோகா ஹெல்த் தன்னை அர்ப்பணித்துள்ளது. முன்னணி மருந்தாக்கல் மற்றும் பயோடெக்னொலொஜிகல் நிறுவனங்களுடன் நாம் ஏற்படுத்தியுள்ள கொள்கை அடிப்படையிலான பங்காண்மைகள் மூலமாக இலங்கையர்களுக்கு நாம் தற்போது புத்தாக்க தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்து, மருந்து உள்ளெடுத்தலை வினைத்திறன் வாய்ந்த முறையில் முன்னெடுக்க வழிகோலியுள்ளதுடன், வலியையும் குறைத்துள்ளோம். ஊசியில்லாத தடுப்பூசி முறை என்பது தற்போது நவலோக வைத்தியசாலையில் வழங்கப்படுவதுடன், வழமையாக வழங்கப்படும் தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் சௌகர்யத்தையும் மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன' என்றார்.
Bioject தொழில்நுட்பத்தில் ஊசியில்லாத தடுப்பூசிகள் குறைவான வலி மற்றும் சிறுவர்கள் மத்தியில் நிலவிவருகின்ற தடுப்பூசிகள் தொடர்பான பயம் இல்லாமல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஊசியில்லாத தடுப்பூசிகள் மூலமாக சிறுவர்களுக்கு குறைந்த மனக்கவலை மற்றும் பயப்படுகின்ற மனோபாவத்தை குறைத்து தடுப்பு ஊசிகளை உட்செலுத்த உதவியாக அமைந்திருக்கிறது.
'சிறுவர்கள் மத்தியில் தடுப்பூசி இடுவதற்கு இந்த ஊசி இல்லாத தடுப்பூசிகள் மிகவும் சிறந்ததாக அமைந்துள்ளன. இவை வேகமாக செயற்படக்கூடியன, அதிகளவு நம்பகத்தன்மை மற்றும் வலியை ஏற்படுத்தாது என்பதால் சிறுவர்கள் நோய்த்தடுப்பு ஊசி ஏற்றப்படுவதை உணரக்கூடமாட்டார்கள்' என முருகைய்யா மேலும் குறிப்பிட்டார்.
ஊசி இல்லாத தடுப்பூசிகள் நோயாளர்களின் நரம்புத் தொகுதியை தாக்கும் இடர் அற்றதாக அல்லது அவசியமற்ற பகுதிகளுக்கு மருந்தை செலுத்தும் ஆபத்தை தவிர்க்கும் வகையில் அனுகூலம் வாய்ந்ததாக அமைந்துள்ளன.
'நோயாளர்களும், பெற்றோர்களும் தடுப்பூசிகள் மூலமான சிகிச்சை தொடர்பில் பெருமளவு பயத்தை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். தற்போது எம்மால் நோயாளர்களுக்கு இலகுவாக குறைந்த வலி மற்றும் பயமின்றிய தீர்வொன்றை வழங்க முடிந்துள்ளது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Biojector® மூலமாக சுகாதார பராமரிப்பு சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிர்பாராத விதமாக தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய காயங்களிலிருந்து விடுபட்டு பாதுகாப்பான சூழலில் சேவையை செய்யக்கூடிய நிலை காணப்படுகிறது. விசேடமாக எச்ஐவி அல்லது ஹெபடைடிஸ் நோயாளர்கள் போன்ற உயர்ந்தளவு அபாயகரமான தொற்று நோய்கள் நிலவும் சூழலில் Biojector® என்பது சிறந்த நோய்த்தடுப்பூசியாக அமைந்துள்ளது.
பயன்படுத்திய பின்னர் சிரின்ஜ் குழாய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை கொண்ட ஊசிகள் ஆகியவற்றை அழிப்பது என்பது பெருமளவு சிக்கலான விடயமாக அமைந்துள்ளது. Bioject’s தடுப்பூசி கட்டமைப்பு மூலமாக 'sharps' கழிவுகள் சேர்வது தடுக்கப்படுவதன் காரணமாக ஊசிகளை சேகரிப்பதற்கான பிரத்தியேக கொள்கலனிற்;கான தேவையும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
தனது மருந்தாக்கல், சத்திரசிகிச்சை சாதனம் மற்றும் மருத்துவ பொருட்கள் பிரிவின் மூலமாக தேசத்துக்கு புத்தாக்கமான சுகாதாரப்பராமரிப்பு சார்ந்த பொருட்களை சியோகா ஹெல்த் வழங்கி வருகிறது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற உயர் தரம் வாய்ந்த உற்பத்தியாளர்களிடமிருந்து புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மூலமாக அனைத்து இலங்கையர்களுக்கும் சிறந்த சுகாதாரத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் சியோகா ஹெல்த் அர்ப்பணிப்பான வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
'உள்நாட்டு சுகாதாரபராமரிப்பு துறை தொடர்பில் நாம் கொண்டுள்ள, எமது பரந்த சந்தைப்படுத்தல், நாடு முழுவதும் காணப்படும் விநியோகத்தர் வலையமைப்பு மற்றும் எமது ஆழமான சத்திரசிகிச்சை பிரிவு தொடர்பான அனுபவத்தின் மூலமாக சியோகா ஹெல்த் இலங்கையர்களுக்கு சௌகர்யம், பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவற்றை வழங்கும் வகையில் செயல்படுகிறது' என முருகைய்யா மேலும் குறிப்பிட்டார்.
37 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
55 minute ago