2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ஜனசக்தி மோட்டார் கிளினிக்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனசக்தி நிறுவனம் கடந்த 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாண பகுதியில் மோட்டார் கிளினிக் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது. யாழ் பொது நூலகத்திற்கு எதிரேயுள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்த கிளினிக் நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு சுமார் ரூ.7000 செலவில் இலவச வாகன பரிசோதனைகள் செய்து கொடுக்கப்பட்டன.

பொதுமக்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில், இந்த கிளினிக் நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மோட்டார் கார்கள் மற்றும் dual purpose வாகன உரிமையாளர்களுக்கும் மோட்டார் வாகன ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து கோளாறுகளை கண்டறிதல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் போன்ற சேவைகள் வழங்கப்பட்டிருந்தன. இதனூடாக மோட்டார் வாகன உரிமையாளர்கள் தமது வாகனத்தின் கோளாறுகள் குறித்து கண்டறிந்ததுடன், தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். 

இந்த வாகன பரிசோதனைகளில் உயர் செயற்பாட்டினை உறுதி செய்யும் வகையில் எஞ்சின், டிரான்ஸ்மிஷன் கட்டுப்பாட்டு, எயார் கன்டிஷன் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் காலநிலை கட்டுப்பாட்டு பரிசோதனை அமைப்பு போன்றவை பரிசோதனை செய்யப்பட்டிருந்தன. AIRT தொழில்நுட்பவியலாளர்கள் மூலம் வயரிங், லைட்டிங், மீட்டர் பெனல், சென்ட்ரல் லொக்கிங் கட்டமைப்பு உள்ளிட்ட வாகனத்தின் உள்ளக கட்டமைப்பு மற்றும் பற்றரி தரப் பரிசோதனை, டயர் மற்றும் சஸ்பென்சன் அமைப்பு ஆகியன பரிசோதிக்கப்பட்டு வாகனத்தின் சிறந்த செயல்பாட்டு நிலைமை கண்டறியப்பட்டிருந்தன. பெயிண்ட் மற்றும் body தரம் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டன. விபத்துக்களை தவிர்த்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முறையான வாகன பராமரிப்பு தொடர்பில் நிபுணர்கள் விழிப்பூட்டியிருந்தனர்.

'மோட்டார் கிளினிக்' என்பது ஜனசக்தியினால் அறிமுகம் செய்யப்பட்ட மற்றுமொரு சேவை சார்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது. சிறந்த தரமான காப்புறுதியை மாத்திரமன்றி, பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளையும் வழங்கும் நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை இது சான்று பகர்வதாக அமைந்துள்ளது. முறையான பரிசோதனைகள் மற்றும் வாகன பராமரிப்பு போன்றன பழுதுபார்த்தல்களுக்காக மோட்டார் ஓட்டுநர் செலவழிக்கும் பணத்தை கட்டுப்படுத்துவதாக அமையும். இது விபத்துக்கள் இடம்பெறுவதையும் குறைக்கிறது. பொறுப்பு வாய்ந்த காப்புறுதி வழங்குநரும், வாடிக்கையாளர் மையப்படுத்திய நிறுவனமுமாகிய நாம், முறையான வாகன பராமரிப்பு தொடர்பில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது எமது கடமை என்பதை உணர்ந்துள்ளோம்' என ஜனசக்தி காப்புறுதியின் மோட்டார் பிரிவின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் கௌஷலா அமரசேகர தெரிவித்தார்.

இந்த மோட்டார் கிளினிக் நிகழ்வு ஊடாக தடங்கலற்ற பயணத்தையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் முறையான வாகன பராமரிப்பின் அவசியத்தை யாழில் மட்டுமன்றி, நாடுமுழுவதுமுள்ள வாகன உரிமையாளர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வுகளை முன்னெடுப்பதே ஜனசக்தியின் எதிர்பார்ப்பாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X